Total Pageviews

Thursday, December 12, 2024

டயாலிஸிஸ் [ வெளியக குருதி சுத்திகரிப்புச் செயல்முறை என்று சொல்லலாம்]

 Kidney Dialysis Images – Browse 13,702 Stock Photos, Vectors ...

நம் ரத்தத்திலிருந்து யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே அகற்றும் பணிகளை இரு சிறுநீரகங்கள் செய்கின்றன. இயல்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த அத்தியாவசிய வேலையானது சிறுநீரகம் பழுதடைந்திருக்கும் போது தடைபடும். இந்த இக்கட்டான நேரத்தில் அந்தப் பணியை செயற்கையான மருத்துவ முறையில் செய்யும் முறைக்கு பெயர்தான் டயாலிசிஸ் (Dialysis).

டயாலிசிஸ் எப்போது ஒருவருக்கு தேவைப்படும்?

டயாலிசிஸ் செய்யப்படும் சூழ்நிலை நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தும் மாறும். ரத்தத்தில் யூரியாவின் அளவு 200க்கும் மேல் சென்றாலோ, க்ரியாட்டினின் அளவு 5 அல்லது 6க்கு மேல் சென்றாலோ பொட்டாசியம் அளவு 6க்கு மேல் சென்றாலோ, அமிலத்தன்மை அதிகரித்தாலோ, சிறுநீர் வெளியேறவில்லை என்றாலோ, உடலில் சிறுநீர் கோத்துக் கொண்டாலோ டயாலிசிஸ் செயல்முறை தேவை.

இரண்டு விதமான சிறுநீரக பிரச்சினைகள் இருக்கின்றன. முதல் வகை, நீண்ட காலமாக இருக்கிற நீரிழிவு, ரத்த அழுத்தம் (Chronic diseases) உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுநீரகம் இனி சரியாகாது என்கிற நிலையை அடைந்திருக்கும். இதனால் சிறுநீரகம் படிப்படியாக தன்னுடைய செயல்திறனை இழந்திருக்கும். இந்த நேரத்தில் சிறுநீரகத்தின் வேலையை வெளியில் இருந்து செயற்கையாக (டயாலிசிஸ் இயந்திரம்) செய்ய வேண்டும். அப்படியில்லாவிடடால்

சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney transplantation) மேற்கொள்ள வேண்டும்.

சிலருக்கு தற்காலிகமாக ஏதேனும் பிரச்னை காரணமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். இதை Acute kidney failure என்போம். இவர்களுக்கும் தற்காலிகமாக சில தினங்களுக்கு மட்டும் டயாலிசிஸ் தேவை. இதற்கிடையில் சிறுநீரகம் செயல் இழந்திருக்கும் காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். சிறுநீரகம் தனது பணியை மீண்டும் செய்ய தொடங்கும்போது நிறுத்திவிடலாம்.

டயாலிசிஸின் இரண்டு வகைகள்

ஒன்று ரத்தம் சம்பந்தப்பட்ட ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis). சிறுநீரக நோயாளி மருத்துவமனைக்கு வாரம் இரண்டு, மூன்று முறை வந்து ரத்தத்தை சுத்தம் செய்துகொண்டு வீட்டுக்கு சென்றுவிடலாம்.

இரண்டாவது பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis). இந்த சிகிச்சையை மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்ற  கட்டாயம்  இல்லை. நோயாளியின் வீட்டிலேயே செய்யலாம்.

டயாலிசிஸின் தேவை

குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள்.

நமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள் தான் சிறுநீரகம். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. இவை பாதிப்படையும் போது கீழ்ப்படி அறிகுறிகள் தென்படலாம்.

1. களைப்பு.

2. தோல் பிரச்சனைகள். (அரிப்பு உள்ளடங்க)

3. வாந்தி

4. கால், கை மற்றும் கணுக்கால் பகுதிகளில் வீக்கம்.

முழுவதும் சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு போனால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட காரணம்

சிறிநீரகங்களின் பாதிப்பில் உடற்பருமன் அதிகரிப்பு பெரும் செல்வாக்குச் செய்கிறது.

குறிப்பாக அது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால். சிறுநீரகங்கள் உயர் ரத்த அழுத்தத்தில் வடிகட்டலை செய்ய வேண்டி ஏற்படுவதால் அவற்றின் நுண் வடிகட்டல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் நீண்ட கால இதயப் பிரச்சனை உள்ளோர் மற்றும் நீரிழிவு நோய் உள்ளோரிலும் மற்றும் சிறுநீரக தொற்று நோய் கண்டோரிலும்.. இந்த நிலை ஏற்படலாம்.

சிறுநீரக பாதிப்புக்கான மாற்றீடு என்ன

1. டயாலிசிஸ்

இதில் இரண்டு வகை உண்டு.

. குருதிசார் டயாலிசிஸ்.

இதன் போது உடற்குருதியை வெளியக சுத்திகரிப்பு கருவி ஊடாக செலுத்தி சுத்திகரித்து மீண்டும் உடலுக்குள் செல்ல அனுமதிப்பது. இதனை செய்வதால்.. பெரிய உயிர் ஆபத்து நிகழும் என்று இல்லை. ஆனால் ஒரு சுத்திகரிப்பு முடிய எடுக்கும் காலம்  3 அல்லது 4 மணித்தியாலங்கள் நீண்டதாக இருக்கும்.

சிலருக்கு இதனை விடக் கூடவாகவும் இருக்கலாம். குருதியின் அளவை மற்றும் குருதி வெளியேற்ற உட்புகு வேகத்தைப் பொறுத்தது. அத்தோடு தேவைக்கு ஏற்ப வாரத்துக்கு.. நான்கு தொடக்கம் இரண்டு தடவைகள் என்று இதனைச் செய்ய நேரிடலாம்.

இதனை கூடிய அளவு வைத்தியசாலையில் வைத்தே செய்வார்கள். சரியான பராமரிப்பு அவசியம் என்பதால். வீட்டில் செய்வதும் உண்டு.. (வசதிகளுக்கு ஏற்ப).

: பெரிடோனியல் டயாலிசிஸ்

இதன்போது பை மற்றும் குழாய்கள் போன்ற அமைப்புக்களின் உதவியுடன்.. வயிற்றுக் குழியினூடு திரவங்களை செலுத்தி அவை பரிமாறப்பட அனுமதிப்பதன் மூலம்.. தேவையானவை உடலுக்குள் போக தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து அகற்றப்படும். இது ஒரு பழைய முறை என்றாலும் தேவைக்கு ஏற்ப பாவிக்கிறார்கள். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம்.

இது 30 – 40 நிமிடங்கள் நீடிக்கும். நாள் ஒன்றுக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் செய்வார்கள். அல்லது இரவு முழுவதும் செய்யக் கூடியதாக இருக்கலாம்.

2. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை.

டயாலிசிஸ் மூலம் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை அல்லது டயாலிசிஸ் அடிக்கடி செய்வது சிரமம் என்று காணப்படும் நோயாளிகளில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவது உண்டு.

அதற்கு தகுந்த சிறுநீரகம் கிடைக்கப் பெறுதல் வேண்டும். அதற்கான காத்திருப்புக் காலம் நீண்டது என்பதால்.. அந்தக் காலத்தில் நிச்சயம் டயாலிசிஸ் நோயாளிகள் உயிர் வாழ உதவும்.

டயாலிஸிஸ் செய்வதால் ஆயுள் பாதிக்கப்படுமா?

டயாலிஸிஸ் பொறிமுறை என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போலவே அச்சொட்டாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனாலும் இளையோரில் இதன் மூலம் அவர்களின் ஆயுளை 20.. 30 வருடங்களுக்கு நீட்ட முடியும்.

70 -75 க்கு மேற்பட்ட வயதானோரில்.. வாழ்க்கைக் காலத்தை                 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மூலம் பொதுவாக.. ஆயுள் காலத்தை 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். அதற்கு மேல் வாழ்பவர்களும் உண்டு

டயாலிசிஸ் செய்ய எவ்வளவு செலவு ஆகும்?

இது மருத்துவமனையையும் டயாலிசிஸ் மையத்தையும் பொறுத்தது மாறுபடும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் செய்யலாம். இருப்பினும் ரூபாய் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவாகக்கூடும்.

டயாலிசிஸ் வாழ்நாள் முழுவதும் தேவையா?

Chronic disease என்கிற நிலையை அடைந்துவிட்ட நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

டயாலிசிஸில் நவீன முன்னேற்றங்கள்

ஆரம்ப காலங்களில் டயாலிசிஸ் சிகிசிச்சையின் வெற்றி விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது டயாலிசிஸ் செய்த பிறகு நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. இப்போது டயாலிசிஸ் சிகிச்சை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. காவேரி மருத்துவமனையில் ஒரு நோயாளி 17 ஆண்டுகளுக்கும் மேல் டயாலிசிஸ் செய்துகொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்திய அளவில் 30, 40 ஆண்டுகள் வரை டயாலிசிஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

சிறுநீரக நலம் காக்க என்ன செய்ய வேண்டும்?

  • பொதுவாக வரும் முன்னர் காப்பது என்று மருத்துவ உலகில் சொல்வோம். எனவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
  • உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
  • புகை, மது பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.]
  • உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
  • 40 வயது தாண்டியவர்கள் ஆண்டுதோறும் மாஸ்டர் ஹெல்த் செக் அப்
    செய்துகொள்ள வேண்டும்.
  • வலிநிவாரணிகளை தன்னிச்சையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...