Total Pageviews

Wednesday, January 17, 2024

அறம் என்பதன் விளக்கம் !

அறம் என்பதன் விளக்கம் !

      

 அறம் என்பது !

  • மனசாட்சியுடன் இருப்பது அறம்!

    உண்மையாக இருப்பது அறம்!

  • நேர்மையாக இருப்பது அறம்!

  • ஒழுக்கநெறியுடன் இருப்பது அறம்!

  • அன்பாய் இருப்பது அறம்!

  • இனிமையாய்ப் பேசுவது அறம்!

  • கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்!

  • நல்லதையே நாடுவது அறம்!

  • தூய துறவியரைப் பேணுவது அறம்!

  • மானத்துடன் வாழ்வது அறம்!

  • உயிருக்கு ஊக்கம் தருவது அறம்!

  • அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்!

  • மனதில் குற்றமற்று இருப்பது அறம்!

  • பொய்யைத் தவிர்ப்பது அறம்!

  • சினத்தைத் தவிர்ப்பது அறம்!

  • பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்!

  • பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்!

  • பிறருடன் பகிர்ந்து உண்பது அறம்!

  • பிற உயிர்களைக் கொல்லாமை அறம்!

  •  நல்வழியில் பொருளீட்டுவது அறம்!

  • இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்!

  • அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்!

     திருக்குறள் கூறும் அறம்:


    உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் திருக்குறளின் அறத்தின் கருத்துக்களை திருக்குறள் மூலம் காணலாம்.

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்!

    இந்த திருக்குறளில் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் கடும்சொற்கள், பொறாமை, தீய குணங்கள் போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று சொல்லப்படுகிறது.

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்!

    இந்த திருக்குறளின் மூலம் ஒருவன் செய்ய கூடிய எல்லாவிதமான செயல்களையும் அறவழியில் செய்வதே நல்லது என்றும் சொல்லப்படுகிறது!

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...