நெருப்பு / தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது . அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..
நெருப்பு என்றால் என்ன ?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது . நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது .
- வெப்பம்
- ஆக்சிஜென்
- எரிபொருள்
- தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன . அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .
இந்த நெருப்பு 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
- Class A நெருப்பு
- Class B நெருப்பு
- Class C நெருப்பு
- Class D நெருப்பு
Class A தீ / நெருப்பு :
சாதாரணமாக பேப்பர் , மரம் , துணி போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது . இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் . தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது . எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது . இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers ) பயன்படுத்தலாம் .
Class B தீ / நெருப்பு :
எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் . ஆனால் அது தவறான நடவடிக்கை
இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும் , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் , நெருப்பு அதிகமாகும் . எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப் படும்
Class C தீ / நெருப்பு :
மின்சார தீ இந்த வகையில் வருகிறது . இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் . அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .
Class D தீ / நெருப்பு :
தொழிற்சாலைகளில் உள்ள சோடியம், பொட்டாசியம் , டைட்டானியம் போன்ற உலோ கங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது சோடியம் க்ளோரைட் எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .