பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம் முக்கிய காரணம் தான்.... அதை மறுக்க முடியாது.. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும், சாலை விதிமுறைகளை மதிக்காததும் தான்...
Total Pageviews
Sunday, December 11, 2011
சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம்-முக்கியகாரணம்
ஓய்வில்லாமல் வாகனம் ஓட்ட வைக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுங்கள் தினமும் விளம்பரத்தின் மூலம் பல கோடிகளை கல்லா கட்டுகின்றீர்கள்.. உங்கள் உழைப்பு அதனால் விளையும் நன்மை உண்மை தான்.. உங்கள் இஷ்ட்டம் தான்... ஆனால் ஒரு நாளில் ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக, பத்து நிமிடங்கள் நாம் வாழும் சமுக அமைப்புக்கு பயன் பெறும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதால் உங்கள் பேங்க் பேலன்சுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது.
மனிதநேயத்தை வளர விடுங்கள்.
உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?
மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது. அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக் கிறார்களே தவிர அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படி மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.
ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நொந்துக் கொள்வது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை பட முடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.
நெடுஞ்சாலையில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள் மிக குறைவானவர்கள் தான். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.
மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
மிஞ்சி இருக்கும் மனித நேயம்
இப்பொது பிச்சையாக மாறும் நேரம்! என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களிடம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை.
நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத்தான் யாருமில்லை. உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.
மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கழிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமா ? என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.
இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

பைக் திருட்டை தடுக்கும் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.
மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.
மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.
தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.
எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.
மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.
தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும், kartikplayer@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)
கிட்னியை சுத்தம் செய்வது எப்படி?
ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள் .(அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...
-
பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரத்திரத்திற்கான ஆண் நட்சத்திரங்கள் எவை பொருந்தும் என இங்கு ...