Total Pageviews

Monday, February 3, 2014

எல்லாம் உனக்குள்ளிருந்துதான்







1) சுதந்திரமானவனாக இரு.  

2) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

   நான் உறுதியாகச் சொல்வேன்.

 உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப்               பார்ப்பாயானால்

 நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய்

 வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

Monday, January 27, 2014

வருங்கால வைப்புநிதி திட்ட சலுகை





வருங்கால வைப்புநிதி திட்ட சலுகையை பெறுவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஒப்புதல்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட பலன்களை பெறுவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பு, ரூ.6,500 ஆக இருந்து வருகிறது. அதாவது, ரூ.6,500–க்கு மேல், அடிப்படை ஊதியம் பெறுபவர்கள், இந்த திட்டத்தில் சேர முடியாதநிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் சேருவதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்தும் யோசனைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், கூடுதலாக 50 லட்சம் ஊழியர்கள் இந்த பலன்களை பெறுவார்கள். அத்துடன், அவர்களால், அதிகமான பணம், வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும்.
மத்திய அரசு அறிவிக்கை வெளியான பிறகு, இந்த முடிவு அமலுக்கு வரும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000
மேலும், அமைப்புரீதியான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கும் யோசனைக்கும் மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

தற்போது, சுமார் 44 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில், 5 லட்சம் விதவைகள் உள்பட 27 லட்சம் பேர், மாதம் ரூ.1,000–க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.

கூடுதல் செலவு
2014–2015–ம் நிதி ஆண்டில் (ஏப்ரல் 1–ந்தேதி) இருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும். இதன்மூலம், மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1,217 கோடி மானிய செலவு ஏற்படும்.

இருப்பினும், இந்த ஓய்வூதிய உயர்வு நடவடிக்கைக்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் தேவையா, இல்லையா என்பது பற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில் 1.16 சதவீதத்தைபணியாளர்கள் ஓய்வூதிய திட்டம்–95’–ல் மத்திய அரசு சேர்த்து வருகிறது. கடந்த 2012–2013–ம் நிதி ஆண்டில், இத்திட்டத்துக்காக, மத்திய அரசு ரூ.1,400 கோடி அளித்தது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (.பி.எப்..) ரூ.5 லட்சம் கோடி தொகுப்பு நிதி உள்ளது. அதில், ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி, ஓய்வூதிய நிதியத்தில் உள்ளது. .பி.எப்..வில், சுமார் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமேபணியாளர்கள் ஓய்வூதிய திட்டம்–95’ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...