தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேர மாற்றம்15.06.2015. இன்று முதல்
அமலுக்கு வந்துள்ளது.
இதுவரையில் தட்கல் டிக்கெட் பயணம் செய்யக் கூடிய தேதிக்கு ஒரு நாள்
முன்னதாக காலை 10 மணி முதல் வழங்கப் பட்டு வந்தது.
தற்போது இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஏ.சி.
வகுப்புகளுக்கு தனியாகவும், ஏ.சி. வசதி இல்லாத வகுப்புகளுக்கு தனியாகவும்
தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் அமல் படுத்தப் பட்டுள்ளது.
Railway Tatkal Booking Timings Changed From Today
இன்று முதல் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் புக்கிங்,
பயண நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு தொடங்குகிறது
இதேபோல், ஏ.சி.
வசதி அல்லாத வகுப்புகளுக்கு பயண தேதியின் முந்தைய நாள் காலை 11 மணிக்கு
தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி, ரயில்வே ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வழங்கும்
நேரமும் மாற்றப் பட்டுள்ளது.
இதுவரையில் ரயில்வே டிக்கெட் ஏஜென்சிகள்
ஆன்லைனில் காலை 8 மணி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தற்போது இந்த முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, இனி காலை
8 மணி முதல் 8.30 மணி வரை ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வினியோகம்
கிடையாது. அதேபோல தட்கல் புக்கிங்கிலும் 10 மணி முதல் 10.30 மணி வரை
அவர்கள் புக் செய்ய முடியாது.
இதன் மூலம், பொது மக்களுக்கு கவுண்டரிலும், ஆன்லைனிலும் எளிதாக இனி
டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகின்றது.
மேலும் தட்கல் டிக்கெட்டிற்காக ஒரே நேரத்தில் ரயில்வே வெப்-சைட்டை
பொதுமக்களும், ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் சிரமம்
ஏற்படுகிறது. இந்த நேர மாற்றம் மூலம் வெப்-சைட் ஒர்க்லோடு குறையும். எனவே
ஆன்லைனில் தட்கல் டிக்கெட் எடுக்க முயற்சிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும்
என எதிர்பார்க்கப் படுகிறது
Thanks to One india.com