Total Pageviews

Thursday, January 21, 2016

கல்வித்தகுதி படிவம் -Resume

போட்டி நிறைந்த இந்த வேலை உலகில், வேலை தருபவர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் திறமைகள் பெற்றிருப்பது முக்கியமானதாகும். அதற்கு என்ன வழி? இதோ சில டிப்ஸ்... 



நேர்த்தியான கல்வித்தகுதி படிவம் -Resume : 

உங்களைப் பற்றிய சுய விவர குறிப்பான ‘ரெஸ்யூம்’ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை, மார்க்கெட்டிங் துறை என ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற வகையில் பயோடேட்டா தயார் செய்யப்பட வேண்டும். கலைப் படிப்புகளை முடித்தவர்கள் தாங்கள் நுழைய முயற்சிக்கும் துறைக்கு என்னென்ன திறமைகள் அவசியமோ, அதை முன்னிலைப்படுத்தி சுயவிவரப் பட்டியல் தயாரிக்க வேண்டும். எடுத்ததும் பெயர், முகவரி, பள்ளிப்படிப்பு என்று வழக்கமான பாணியில் பட்டியல் இருக்க வேண்டியது இல்லை. உங்களது தனித்திறமைகள் உடனே அதிகாரியின் கவனம் ஈர்க்கும் வகையில் தனியே தெரியும்படி, ரெஸ்யூம் தயாரிக்கப்பட வேண்டும். 

காலத்திற்கு ஏற்றபடி...: 

இப்போதெல்லாம் வேலை தேடுபவர்களின் திறமைகளை, கணினியின் மூலமாக தரம் பிரிக்கிறார்கள். அதாவது நீங்கள் கல்வித்தகுதி படிவம் - Resume மில் குறிப்பிட்டுள்ள திறமைகள், தங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பதை அந்த நிறுவனத்திற்கான கணினியே அலசி ஆராய்ந்து தகுதியானவர்களின் பட்டியலை தனியே பிரித்து காண்பித்துவிடும். எனவே நேர்காணலில் திறமையை நிரூபிக்கலாம் என காத்துக் கொண்டிராமல், ரெஸ்யூமிலேயே எல்லா திறமைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுவிடுங்கள். 

இணைய உலகில்: 

வலைத்தளங்கள் தற்காலத்திற்கான, உலகளாவிய முன்னணி வேலைத் தொடர்பு தளமாக விளங்குகின்றன. இவை வேலைதேடுபவர் மற்றும் வேலை வழங்குபவர்களுக்கான இணைப்பு பாலமாக இருப்பதால், பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணிக்கான தகுதி உள்ளவர்களை ‘வலைத்தளத்தின் எளிமையாக தனியே தேடி கண்டுபிடித்துவிடுகிறார்கள். எனவே வேலை தேடுபவர்கள், அத்தகைய இணைய தளங்களில் தங்களது விவரங்களை பதிந்து வைப்பதுடன் நில்லாமல் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை கவனித்து வர வேண்டியது அவசியம். இதேபோல ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இணையதளங்கள், வேலைதேடுனரின் பட்டியல்களையும், வேலை வழங்குபவர்களின் பட்டியலையும் ஒருங்கிணைத்து சேவையாற்றுகின்றன. இவற்றிலும் திறமைகளை, முக்கியமான விவரங்களை பதிவதன் மூலம், வேலை வழங்குபவரின் கவனத்தை ஈர்க்கலாம். 

முன்னுரை கடிதம்:

கல்வித்தகுதி படிவம் -Resume உங்களது அனைத்து விவரங்களையும் பட்டியலிடலாம். ஆனால் சிறந்த எழுத்தாற்றலுடன், வலிமையாக உருவாக்கப்பட்ட அறிமுகக் கடிதம் வேலை தருபவரின் கவனத்தை எளிதில் கவர்ந்துவிடும். கடிதம் உங்கள் மதிப்பை உயர்த்துவதாக அமைய வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொருத்தமான நபர் நீங்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

எச்.ஆர்.(மனிதவளம்): 

அலுவலக நிர்வாகத்திற்கு கல்வித்தகுதி படிவம் அனுப்பி, வேலைக்கான அழைப்பை பெற்றாலும். அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவுக்கு தனியே ஒரு கடிதம் அனுப்பி வைப்பது சிறந்ததாகும். 

ஈர்க்கும் இமெயில் முகவரி: 

எல்லா கம்பெனிகளுக்கும் ஒரே இமெயில் முகவரியை கொடுப்பது உங்களுக்கு எளிதாக தோன்றலாம். ஆனால் அவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கவர்ச்சியான இமெயில் முகவரி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக உங்கள் பெயரையும், அந்த நிறுவனத்தின் பெயரையும் இணைத்து ஒரு இமெயில் முகவரி உருவாக்கி, அந்த நிறுவனத்திற்கான விண்ணப்பத்துடன் இணைத்து இருந்தால் அதுவே அதிகாரிகளின் கவனத்தை கவர்ந்துவிடும். தகவல் தொடர்புக்கும் எளிதாக இருக்கும். மெயில்கள் வந்த உடனே, எந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை அறியலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப...: 

விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பும்போது அந்த நிறுவனங்களின் நிபந்தனைகளை கவனியுங்கள். தவறாமல் சரியான நேரத்திற்கு பட்டுவாடா செய்யும் முன்னணி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...