Total Pageviews

Wednesday, April 6, 2016

பெற்றோர்கள் கவனத்திற்கு !

பெற்றோர்கள் கவனத்திற்கு-:

விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..

மரணம் என்ற இறுதிப்பயணம்….!



🚀🚀மரணம் என்ற இறுதிப்பயணம்….!🚀







🚀

🛀🛀பிறந்த அன்றே தேதி குறிக்கப்பட்ட பயணம்….🛀🛀

⏳⏳மாற்ற இயலாத மறுமை பயணம். ⏳⏳

👩👩👧👦துணைக்கு யாரும் வரத தொலை தூரப்பயணம்..🎎

✈✈கட்டணம் இல்லா இலவசப்பயணம்.✈✈

🙀நீ மறந்தாலும் உன்னை மறக்காத பயணம்.🙀

😭நீ வர மறுத்தாலும் தானாகவே உன்னை வந்தடையும் பயணம்.😭

💐💐நல்ல ஆத்மாக்களுக்கு சுபச் செய்தி சொல்லும் பயணம். 💐💐


🌾🌷சொர்க்கச் சோலையில் இன்பம் காண செல்லும் பயனம்.🌾🌷


👹👹தீய ஆத்மாக்களுக்கு தீர்ப்பு சொல்லப்படும் பயணம்.👹👹


👉👉அதுவே மரணம்...


Thanks to Malathi C:

மன்னித்து விடுங்கள் !

ஒரு நாள், சிங்காரம் என்பவரின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். 

பரிசோதனை செய்து விட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த சிங்காரம் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன சிங்காரம் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.

கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார், "சிங்காரம் , உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..

Friday, April 1, 2016

நாள் பட்ட புண் குணமாக - மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு

அதிசய மூலிகை..!

ஒரு வயதான அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். 
மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.

அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு!
மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.!
அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.
அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது..

கடவுள் எப்படி உதவி செய்வார்?

கடவுள் எப்படி உதவி செய்வார்?

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த 

காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு 

வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க 

நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். 

அப்போது, 

சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு 

சக்கரம் பள்ளத்தில் போய் விழ, 

வண்டி சாய்ந்து விட்டது. 

"கடவுளே! 

இது என்ன சோதனை? 

எனக்கு உதவி செய்!" 

என்று அவன் மனமுருக வேண்டினான். 

கடவுள் உதவிக்கு வரவில்லை
 இரண்டாம் முறை, 

மூன்றாம் முறையென 

பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், 

அவர் வரவில்லை. 

வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், 

பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி

 சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். 

என்ன ஆச்சரியம்? 

தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் 

நினைத்திருக்க, 

எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. 

அப்போதுதான், 

அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு 

வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி 

செய்தது தெரிய வந்தது. 

அவனை வணங்கியன் 

"மிகவும் நன்றி ஐயா! 

கடவுள் செய்யாத உதவியை 

நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! 

உதவி செய்!" 

என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு 

உட்கார்ந்திருந்தால், 

கடவுள் எப்படி உதவி செய்வார்? 

நீயே முயற்சி செய்தால்தான், 

கடவுள் உனக்கு உதவி செய்வார். 

அதற்கு நீதான் அவருக்கு, 

ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" 

என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

'தெய்வம் மனுஷ்ய் ரூப்ய'

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள் !

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல். வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களைகொடுத்துள்ளோம்.

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in


இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

Monday, March 28, 2016

காமராஜர் - ஜீவா ! அழகிய நட்பு இது தானோ...?

அழகிய நட்பு இதுதானோ...?
 


பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக

இருந்த போது, சென்னை தாம்பரம்


குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்


என்று ஜீவா போராடினார்.

அப்போது, தாம்பரத்தில் ஓர்


ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார்


 காமராஜர்.

போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்


ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்


செல்வது தான் சரியாக இருக்கும்


என்று நினைத்து,


காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்


சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
 

வீட்டுக்கு காமராஜர்
 

வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
 

என்று கேட்டார்" ஜீவா.
 

"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
 

என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
 

உடனே ஜீவா,
 

"நான் மட்டுமா..?
 

இங்கே இருக்கிற
 

எல்லோரையும் போலத்தான் நானும்
 

இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
 

உட்கார வைக்க,
 

ஒரு நாற்காலி கூட
 

இல்லாததால், இருவரும், நின்று கொண்டே 

பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 

பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
 

அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
 

வந்தேன்"
 

என்றார் காமராஜர்.

"காமராஜ்,
 

நீ முதலமைச்சர்,
 

நீ திறந்தா போதும்"
 

என்று ஜீவா மறுக்க,
 

"அட... ஆரம்பிச்ச
 

நீ இல்லாம,
 

நான் எப்படிப் போக,
 

கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,

"அப்படின்னா,
 

நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல 

வந்துடுறேன் "
 

என்று அனுப்பி வைத்தார்.
 

"கண்டிப்பாக வரணும்"
 

என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
 

தாமதமாகவே வந்தார் ஜீவா.

 

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
 

என்று காமராஜர் உரிமையுடன்
 

கடிந்து கொண்டார்.

 

உடனே ஜீவா, "நல்ல
 

வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
 

அதை உடனே துவைச்சு,
 

காய வைச்சு,
 

கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
 

தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
 

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
 

ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் 

வாட்டியது.
 

அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது 

கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
 

"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
 

மாட்டான்.
 

காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
 

ஆனா,
 

அவனைப் போல தியாகிகள் எல்லாம்
 

இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
 

செய்யலாம்"....? என்றார்.
 

கூட்டத்தில் இருந்த ஒருவர்,
 

"ஜீவாவின்
 

மனைவி படித்தவர். அதனால்
 

அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை 

கொடுத்தா, அந்த குடும்பம்
 

நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா, அவன்
 

பொண்டாட்டியை வேலை செய்ய விட
 

மாட்டான்.

 

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
 

பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
 

பள்ளிக்கூடத்துல
 

ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு 

போடச் சொல்லுங்க.

உடனே,
 

நான் வேலை
 

போட்டுத் தர்றேன்...

ஆனா,
 

இந்த விஷயம்
 

வேறு யாருக்கும்
 

தெரியக்கூடாது

அவன் முரடன்,
 

உடனே வேலையை
 

விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அதன்படியே
 

ஜீவாவுக்குத்
 

தெரியாமல்,
 

அவருடைய
 

மனைவிக்கு
 

அரசு வேலை
 

கொடுத்தார்
 

காமராஜர்.

அதற்குப்
 

பின்னரே
 

ஜீவாவின்
 

வாழ்க்கையில்
 

வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
 

இருவருடைய நட்பும்

வார்த்தைகளால் 


வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு 


சென்னை அரசு பொது 


மருத்துவமனையில்


சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
 

கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
 

காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
 

என்பது தான்.

இனி எங்கே
 

காணமுடியம்

இது போன்ற
 

தலைவர்களை.

அடித்தட்டு
 

மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
 

பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்
 
காமராஜர்,
 
ஜீவா,
கக்கன்

போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம் 

என்று நினைத்தால்,

செய்யலாமே... !! 

நண்பர்களே....!!
Thanks to C Malathi !




வாழ்க்கையில் உன் சாதனை என்பது !

    வாழ்க்கையில்  உன் சாதனை என்பது !  4 வயதில் உன் சாதனை என்பது உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன...