Total Pageviews

Thursday, May 24, 2018

காது கேட்கும் திறன் குறைகிறது எனில் !

இன்று நம்மில் பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது. இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
Preventing Hearing Loss In 8 Easy Ways
நம்மில் எத்தனை பேர் டிவியில் 10 - 15 சப்த அளவில் ஒலி வைத்து கேட்கிறோம். கேட்டால் 5.1, 7.1 ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு வேறென்ன செய்வது என கேள்வி கேட்பார்கள். காது கேட்கும் திறன் போனால் கூட பரவாயில்லை, ஸ்பீக்கர் பயன்பாடு தான் முக்கியமாகிவிட்டதா என்ன?

இந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காது கேட்கும் திறனை அதிகரிக்க முடியும்.

வழி #1

வழி #1

புகைக்க வேண்டாம்! புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடவும்.
வழி #2

வழி #2

காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம்.

மேற்புறமாக தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!
வழி #3

வழி #3

ஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காத்து கேட்கும் திறனை பாதிக்கும். எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து ஏதுனும், காதுக்கு பிரச்சனை தருவது போன்று உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் அதை பற்றி கூறுங்கள்.
வழி #4

வழி #4

அதிக சப்த இரைச்சல் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டாம். இருக்க வேண்டிய கட்டாயம் நேரிடும் பட்சத்தில், காதுகளின் நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டு, பஞ்சு அல்லது காதை பொத்தியபடி துணி கட்டிக் கொள்வது நல்லது.
வழி #5

வழி #5

அமைதி அவசியம். நாள் முழுக்க நான் ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல, நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும் சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
வழி #6

வழி #6

ஹெட்போன், டிவி, கேம் ஆடும் போது அதிக சப்தம் வைத்து கேட்க வேண்டாம். உங்கள் காதை குறைந்த சப்தத்தை கேட்டுணர பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சப்தத்தை குறைத்து கேட்கும் போது, உங்கள் காதுகள் தானாக அதற்கு ஏற்ப பழகிவிடும்.
வழி #7

வழி #7

காதுகளை பாதுகாக்க வேண்டும். காதுகளின் வெளிப்புறத்தில் பஞ்சு வைத்துக் கொள்வதால் சப்தம் குறைவாக கேட்க முடியும். இதற்கென சந்தையில் Earplug-குகள் கூட விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் 15-30 டெசிபல் சப்தம் குறைவாக கேட்க முடியும்.
வழி #8

வழி #8

  • கேட்கும் திறன் குறைகிறது எனில்,
  • உங்களை சுற்றி எப்போதும் அதிக சப்தம் இருக்கிறது எனில்,
  • காதில் ஏதோ ரிங் அடிப்பது போன்ற சப்தம் கேட்கிறது எனில்..,
நீங்கள் உங்கள் காதை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Thanks to Oneindia.tamil

Thursday, March 29, 2018

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில வழிகள் !

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.

மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.

1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

2. நல்ல வேளை. இதோடு போச்சு.

3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.

6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.

9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.

19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....,வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

Tuesday, December 26, 2017

கொழுப்புக் கட்டிகள் - லைப்போமா (lipoma)



அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.


வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. 

கொழுப்புக் கட்டிகள் - லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும். 
 
பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும். 

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும். 

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை. 

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 
சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.


புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Thursday, December 14, 2017

சாலைகளில் கார் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது !

நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள் தான். இதன்_பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

விபத்தில்_சிக்கும்_வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்_பாட்டிற்காக வாங்கிய வண்டிகள்.

இதற்கு_காரணம்..


1. #சொந்த_வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. #சொந்த_கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

3. #தொலை_தூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரை கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. #காரை_அடிக்கடி ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.
1. #பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. #அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. #வாகனத்தை தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. #லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. அதனால் விபத்து ஏற்படுவது எளிது.
5. #நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. #அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

Monday, November 27, 2017

இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்..



சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்..

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே

இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்..

Wednesday, August 30, 2017

பாலிதீன் பைகள் .......தேசத்தின் தூக்கு கயிறு...



 அன்பு நண்பர்களே...
 

நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...

ஆய்வு சொல்லதுப்பா! 


நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.

புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.

தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்றுமடிகிறது
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....

நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.

கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி

சுகாதார கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே சகுனி.

பாலிதீன் பைகள்
பாவை நம் மண்ணோடு
பலவந்தமாக
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதை
தடுக்க வேண்டாமா ?

மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?

பொய்யும் புரட்டும் பேசும்
போலி உதட்டுக்கு
எதற்க்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி
தவிக்கும் நமக்கு
எதற்க்கப்பா பிளாஸ்டிக்?

பெண்சிசு கொலையைப் போல
மன்னிக்க இயலா
பெரிய குற்றம்
மண்சிசு கொலை.

ஊருக்கு விழிப்புணர்வு
ஊட்ட
ஊர் ஊராக
ஊர்வலம் வேண்டாம்
போலியாக
பேரணி வேண்டாம்.

நானிலம் நலம் பெற
நடைமுறை வாழ்வில்
நானினி நெகிழியை
பயன்படுத்த மாட்டேன்

டீக்கடையில் தந்தாலும்
நெகிழி குவளையில்
இனிக்கும் தேநீர்
இனியும் அருந்த மாட்டேன்.

இப்படி ஒவ்வொருவரும்
உறுதி கொள்வோம். -இதை
தனிமனித கொள்கையில்
இணைத்து கொள்வோம்.

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை
முடக்க பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.

பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல
தவிர்த்திடுங்கள் தோழர்களே
இனியெம் தலைமுறைகள்
உயிர் வாழ...

Thursday, August 24, 2017

தலைக்கவசம் உயிர் கவசம் !

தலைக்கவசம் உயிர் கவசம் !


தலைக்கவசம் போடாததால, தலைல அடிப்பட்டு இறந்த ஒரு சொந்தமோ, ஒரு நட்போ, அக்கம் பக்க உறவினரையோ நாம நிச்சயம் கடந்திருப்போம்
இருசக்கர வாகனங்களில் செல்வோர் [ஹெல்மெட்] தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்துதான் இந்த அதிரடி நடவடிக்கை.

விபத்துகளின்போது உயிர் காக்கும் கட்டாய ஹெல்மெட் தலைக்கவசம் விதி வரவேற்கப்பட்டாலும், அதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான்..! அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதுமிகவும் வருத்தத்துக்குரியது.! உலகளாவிய அளவில் இந்தியாவில் தான் அதிகவிபத்துக்கள் நடப்பதாக புள்ளியியல் விவரம் தெரிவிக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக நடை பெறுவதாகவும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு  சக்கர வாகனம்  ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது தான் தற்போதைய உண்மைநிலவரம்.

தலைக்கவசம் அணிவது என்னமோ காவல் அதிகாரியின் அபராத்திற்க்கு பயந்து தான் என்ற எண்ணம்  படித்தவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. போக்குவரத்து காவலர் இருக்கும் இடத்தில் அணிந்துக் கொள்வதும், பின்பு கழற்றி பெட்ரோல் டாங்க் மீது வைக்கும் பழக்கம்  நம்மில் பலருக்கு இருக்கிறது. தலைக்கவசம் நம் உயிரை காப்பாற்றத்தானே தவிர போக்குவரத்துக் காவலர் உயிரைக்  காப்பாற்ற  அல்ல. அல்லது  பெட்ரோல் டாங்க்கை காப்பதற்க்கு அல்ல! நாம் நமக்காகத்தானே மருந்து சாப்பிடுகிறோம். மருத்துவருக்காக அல்லவே.! இதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற சட்டம் அமலாக்கப்பட்ட ஆரம்பத்தில், மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டது. அபராதம் கூடவிதித்தார்கள். நாளடைவில் அச்சட்டம் நீர்த்து போய் விட்டது. யாரும் பின்பற்றவில்லை.  யாரையும் பிடிப்பதும் இல்லை. ! தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. எப்படிப்பட்டவிபத்தாக இருந்தாலும் , சிறு சிறு காயங்கள், எலும்பு முறிவுகள் என்று உண்டாக்குமேதவிர உயிருக்கு ஆபத்து ஏற்படாது. உயிர் பிழைத்துக் கொள்ளலாம். சமீப காலமாக நம்தமிழ்நாட்டில் அதிக மூளை சாவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைக்கவசம்அணிவதினால் இதை தவிர்க்கலாமே.!


தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை சமீபத்தில்  உணர்த்திய  என்அனுபவத்தை இங்கே பகிரலாமென நினைக்கிறேன். இக்கட்டுரையை எழுதத் தூண்டியதும் அந்தஅனுபவமே.!

சில வாரங்களுக்கு முன் என் நண்பர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர் திசையில்,  தவறாக ஒரு மூன்றுசக்கர மோட்டார் பொருத்திய மிதிவண்டி திடீரென்று வந்ததால் அதன் மீது மோதி விடக்கூடாது என்ற  எண்ணத்தில் சாலையின் ஓரமாக செல்ல எத்தனித்துள்ளார்கள். ஆனால்வண்டி கட்டுப்பாட்டை இழந்து பக்கத்திலுள்ள நடை மேடையில் இடித்து, மின் கம்பத்தில்மோதியுள்ளது. தலை மின் கம்பத்தில் மோதி, பிறகு கிழே விழுந்துள்ளார்கள். தலைக்கவசம் அணியும் பழக்கம் உள்ளதால் எப்போதுமே தலைக்கவசத்துடன் தான்செல்வார்கள்.  ஆதலால் அன்று உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாமல் போனது.  எலும்பு முறிவு ஏற்பட்டு , அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக உள்ளார்கள்.அன்று அவர்களின்உயிரைக் காப்பாற்றியது தலைக்கவசம் தான்..!  ‘

நம்மில் பல  பேருக்கு  நம்பிக்கை இருக்கிறது.,  நான் நன்றாக ஓட்டுவேன்.  , சாலை விதிகளை சரியாக பின்பற்றுகிறேன் என்று.! ஆனால்  நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் , எதிர் திசையில் வருபவர்கள் சரியாக இருக்கிறார்களா என்று நமக்கு தெரியாது.  இன்னும் சில பேர் மது அருந்தி விட்டுஓட்டுவார்கள். இளைஞர்கள் அவசரமாகவும், வேகமாகவும் ஓட்டும் போது சாலை விதிகளைமதிப்பதில்லை. மருத்துவமனைகளில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக வருவோரில் பலர்சாலை விபத்தின் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதிலும்இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள இளைஞர்களே என்பது மிகவும்வருத்தத்துக்குரிய செய்தியாக இருக்கிறது.!   இரவு நேரங்களில்கேட்கவே வேண்டாம். யாருமே கவனத்துடன் ஓட்டுவதில்லை. ஒருவழிப் பாதையைக்  கூடசரியாகப் பின்பற்றுவதில்லை.!

அடுத்து ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், சாலைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை . மின்சார  வாரியம், குடிநீர் வாரியம், கழிவு நீரகற்று  வாரியம் என அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள் பழுதுப் பார்க்கிறோமென்று அங்கெங்கேகுழித் தோண்டி விடுகிறார்கள். அதை சரியாக மூடுவதுமில்லை. அதிலும் மழைக்காலம்வந்து விட்டால் நீர் தேங்கி வழுக்கி விடும் அபாயமும் உள்ளது. எடைக் குறைவாக உள்ளவாகனங்கள் , அந்த சேற்றில் போகும்போது வழுக்கி விழ ஏதுவாகிறது. விபத்து என்பது எதிர்பாரா விதமாக நடப்பது தானே.! அது எந்த நேரத்தில், எந்த வடிவத்தில் , எப்படிவேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கை விசயத்தில் முதலில் இருப்பது தலைக்கவசம் தான்.!

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தையும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் ஒருமிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்காலத்தின் கட்டாயமாகிறது. இதற்கான புரிதலை நாம் உண்டாக்க வேண்டும். இந்த விடயத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படுவதும், பின்பு செல்லரித்து போவதுமாக இருந்தால்மக்களுக்கு எப்படி சட்டத்தின் மீது ஒரு மதிப்பு உண்டாகும் .?   சட்டங்கள் இயற்ற மட்டும் தான். பின்பற்ற அல்ல என்ற மனப்பான்மை தானே தோன்றும்.!  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்தி விட்டு ஓட்டுவது, சாலை விதிகளை மதியாமல் இருப்பது போன்றவற்றிற்கு கடுமையான தண்டனை, அபராதம் விதித்தல்என்பதை அமல்படுத்த வேண்டும். மக்களின் நன்மைக்காக சிலவற்றில் சமரசம் செய்துக்கொள்ளாமல் கட்டாயமாக்கினால் தான் அதன் முழு பயனையும் அடைய முடியும்.!   சாலை விதிகளை பற்றிய  அறிவை  நாம் மாணவர்களாக இருக்கும்போதே, பள்ளிப்பருவத்திலேயே உண்டாக்க  வேண்டும். சிறு  வயதிலேயே ஒருசரியான புரிதலை உண்டாக்கி விட்டோமானால், அது மனதில் நன்கு பதிந்து  பலதவறுகளையும், அதன் மூலம் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்கஏதுவாகயிருக்கும்.

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம்.!

சாலை  விதிகளை மதிப்போம்.!

விபத்துக்களைத் தவிர்ப்போம்.!

நன்றி! சிறகுகள்-ஆச்சாரி!

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...