நிம்மதி என்றால், எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை…
தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே, நிம்மதியை அடைந்து விடலாம்…
தேவையற்ற எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால், நிம்மதி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று…
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந் தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.
இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்.
எல்லாம் உங்கள் மனம்தான் காரணம் இல்லாததை எண்ணி அலைந்து நிம்மதியைக் கெடுக்கிறது நீங்கள் அதற்கு அடிமையாக தொலைந்துபோய் இருக்கின்றீர்கள் அதனால் நிம்மதி இருப்பது தெரியாமல் எங்கோ தேடுகிறீர்கள்.
இருக்கும் இடத்தில் இருந்த பொருட்களை வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் நிம்மதி தானாய் தெரியும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தபடியே வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் முயற்சி இருக்கட்டும் ஆனாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முயன்றவரை நேர்மையான வழியில் உழைத்து சம்பாதித்து இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்று உங்கள் நிம்மதியை தொலைக்காமல் இருங்கள்!
மனதில் நிம்மதி, வீட்டில் நிம்மதி, பொருளாதாரத்தில் நிம்மதி எல்லாம் இறைவனை நினைவுக் கூர்ந்து வாழ்வதில் உள்ளது.
நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?
1.ஆரோக்கியமான உடல்
2.திருப்தி அடையும் மனம்
3.நேர்மையாக சம்பாதித்த பணம்
4.அனுசரணையான குடும்பம்
5.ஊக்கப்படுத்தும் துணை
6.உற்சாகம் தரும் நட்பு
7.சரி தவறு கணிக்கும் பக்குவம் !
8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை !
9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது !
10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின் மீது நம்பிக்கை !
செல்வம் தான் நிம்மதியா ?
அதுவும் ஒரு காரணம் !