Total Pageviews

Tuesday, December 30, 2025

இறந்தவர்களின் அஸ்தியை ஏன் நதியில் கரைக்கிறார்கள்? கண்ணதாசன் சொல்றதைக் கேளுங்க...!

 

வாழும் நாள்கள் எத்தனை என்று யாரும் கணக்குப் போட்டுக் கொண்டு வாழ முடியாது. சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாகிடும்னு சொல்வாங்க. அதனால நாம வாழப்போற நாள்கள் கொஞ்சமோ, அது நிறையவோன்னு தெரியாது. இருக்குற நாள்கள்ல அடுத்தவங்களுக்கு உபயோகமா வாழ்ந்துட்டுப் போயிடணும். யாரையும் பொல்லாங்கு சொல்லாம, நம்மோட கடமையை மட்டும் செஞ்சாலே போதும்.

நாம இந்த மண்ணுல பிறந்து வளர்ந்து வாழ்ந்ததுக்கான ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுட்டுப் போகணும். அதுதான் நம் பிறவியோட நோக்கம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சி மற்றவங்களுக்கு பிரயோஜனமா வாழ்றதுல தான் வாழ்க்கையோட அர்த்தமே இருக்கு. இருக்குற வாழ்க்கையில நீயா, நானான்னு போட்டி பொறாமை இல்லாம வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துட்டுப் போகணும்.

நம்மைப் பார்த்து மற்றவங்க வாழ்ந்தா அவனை மாதிரி வாழணும்னு சொல்லணும். அதுக்கு முன்னுதாரணமா நாம வாழ்ந்து காட்டணும். நாம இந்;த மண்ணில் இல்லாத போதும் அதுதான், அந்தப் பேருதான் என்னைக்கும் நிலைத்து நிற்கும். சரி இனி விஷயத்துக்கு வருவோம். நம்ம கவியரசர் கண்ணதாசன் ஐயா வாழ்க்கையை புட்டு புட்டு வச்சிட்டுப் போயிட்டாரு. இறந்தவங்களோட அஸ்தியை ஏன் ஆற்றுல, கடல்ல கரைக்கிறாங்கன்னு ஒரு விளக்கம் கொடுத்துருக்காரு. வாங்க பார்க்கலாம்.

வாழாமல் இறந்து போன குழந்தைகளை - வாலிபர்களை- கன்னிப் பெண்களை இந்துக்கள் புதைக்கிறார்கள். கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதி அடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்? ஆறு போல உன் ஆத்மா ஓடி கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும் என்பதற்கு.

இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள். இயற்கையாகவே மங்கலம் அமங்கலம் தெரிந்துவிடும்.

மங்கல சொற்கள் , மங்கல அணி, மங்கலவிழா இந்த வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும். அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு மட்டமாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம். 'பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' என்றான் வள்ளுவன்.

உலகத்தில் நாகரீகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களை குறிக்கிறது. நமது நாகரிகமோ 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது.

வாலிப கவிஞருக்கு நினைவஞ்சலிகள் !

 


கவிஞர் வாலிஅய்யா எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை,

சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!

வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள்,

நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.

வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப பிரபலம்.

இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்றுஎம்.ஜி.ஆர் வரும்போது அன்போடு கேட்பாரம்

1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல்,

ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார்.

1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்ந்தது

அவதார புருஷன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!

எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!

பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!

ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!

வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!

வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!

வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம்தர துடிப்பார்!

வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்,

போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!

எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்,

இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!

வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!

வாலிப கவிஞருக்கு நினைவஞ்சலிகள் 🤍

Sunday, December 28, 2025

பிச்சைக்காரர்களுக்கு உணவு + தண்ணீர் கொடுங்கள்! பாத்திரம் அறிந்து பிச்சை இடு !

 

பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது ...

Homeless desperate beggar begging — Stock Editorial Photo © Belish #73423267 

மும்பை- புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது....

எந்த வகையினரும் (பெண், ஆண் , மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்..., அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக, சர்வதேச, தேசிய , மாநில அளவில் பிச்சைக்காரர்கள் கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும். இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்...

ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.

உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள் வைத்துக் கொள்ளுங்கள். உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்... அதை கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள்...

இந்த பிரச்சாரத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால், இந்த யோசனையை அடுத்த மூன்று குழுக்களுக்கு அனுப்பவும்....

நான் ஒரு யாசகரிடம் வேலை தருகிறேன் செய்கிறீயா என்று கேட்டேன் அப்போ இந்த வேலையை யார் செய்வது என்று கேட்டார்.

இன்னொரு முறை வேறொரு யாசகரிடம் வேலை செய்கிறாயா என கேட்டபோது நான் ஒரு நாளைக்கு 1500 சம்பாதிக்கிறேன் என்று தெனாவட்டாக கூறினார்

சென்னை திருவல்லிகேனில் சுமார் 50 பேர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர், ஒரே ஊர்க்காரர்கள் அல்லது உறவினர் போல் உள்ளனர், வயது சுமார் 40 , 50 வயதுடையை ஆண்கள், பெண்கள்.

பிச்சை எடுக்கின்றனர், பிச்சை போடுபாவர்களும் மிகவும் சாதாரணமாக ரூ 10,ரூ 20 ரூ 50 வரை பிச்சை போடுகிறார்கள், ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் மினிமம், 2000 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு சம்பாதிக்கிறார்கள், அவர்கள் தங்குமிடம் pycrofts ரோடு platform. சின்ன கணக்கு 50×1000= 50000 30×50000=1500000 12 மாதம் ×1500000=18000000 ஒரு கோடியே 80 லட்சம், இது போல் சென்னை city யில் பல இடங்களில் தேன்படுகின்றனர்.

உதவி செய்வது கூட எந்த விதமான உதவி தேவை என்று தெரிந்து செய்யுங்கள். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று தெரியாமலா சொன்னார்கள். பிரபல அரசு கம்பெனியில் உயர் பதவியில் உள்ளவர்கள் கூட கைமாத்து என்று நண்பர்களிடம் வாங்கிவிட்டு, தன்னை வளப்படுத்தி கொண்டு, உதவிய நண்பர்களை தெருவில் நிற்கும் படி செய்துவிடுகிறார்கள்

Friday, December 26, 2025

டாஸ்மாக்கும்... திருப்பூரும் ! குடி குடியை கெடுக்கும் ! போதை தெளிவோம்

 டாஸ்மாக்கும்... திருப்பூரும்

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள்.

ஏன் இப்படி?....

ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர்.

வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.

அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை.

கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை.

இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது.

முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன்.

'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.

அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது.

அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர்.

அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார்.

மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.

இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர்.

அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள்.

இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.

50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 கோடி மணி நேரம்.

இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர்.

- போதை தெளிவோம் !

குடி குடியை கெடுக்கும் !

Wednesday, December 24, 2025

50 வயதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்!

 


ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்...

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,

சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்... முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...?

சாதித்தவர்கள் கோடிகளில் ஒருத்தராக இருக்கலாம். அதற்காக இந்த காலகட்டத்தில் கையில் இருப்பு உள்ளதை சவாலாக எடுத்துக்கொண்டு பதினைந்து, இருபத்தைந்து லட்சங்களை தொலைத்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடைய இந்த பதிவு கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோரின் கண்காணிப்பில் சவாலாக ஏதேனும் ஒரு வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டாலும் ஆறுதல் சொல்ல தாய் தந்தையர் இருப்பாங்க. ஐம்பது வயதிற்கு மேற்கொண்டு சவாலே சமாளி என்று பார்த்து, இழப்பு ஏற்பட்டால் முதலில் திட்டுவது மனைவியும் பிள்ளைகளும் தான்.

Friday, December 5, 2025

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

 

சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்கு செலவு செய்யும் பணத்தை உணவுக்காக செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் .

இதற்கான அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

#உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,

கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.

வாழ்வதற்காக உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்

அமைதியுடனும்

பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு

30 நிமிடம் முன்னதாகவும்

உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

எனவே,

நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்....

~பிரபு சண்முகம்

தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டால் !

 எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரின் தாய் , உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பூரி தொண்டையில் சிக்கி அவர் கண்முன்னே இறந்தார் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்

இத்தகைய நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இங்கே வாழைப்பழமோ? ரம்புட்டான் பழமோ? அதன் விதையோ? பூரியோ? தனிப்பட்ட காரணங்கள் அன்று

நாம் உண்ணும் எந்த உணவுப் பொருளும்

குறிப்பாக சிறார் சிறுமியிடத்திலும் முதியோர் இடத்திலும் சில நேரங்களில் இளையோர் இடத்திலும் கூட தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

பொதுவாக உணவை

லயித்து அமைதியாகப் பொறுமையாக உணவைப் பார்த்து ரசித்து நன்றாக மென்று உண்ண வேண்டும். வெடுக் வெடுக்கென வேகமாக விழுங்குவதோ, வேறு ஏதேனும் விஷயத்தில் கவனத்தை வைத்துக் கொண்டு உணவை விழுங்குவதோ தவறானது.

முக்கியமாகப் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவது மிகவும் ஆபத்து.

சோக்கிங் வாய்ப்பை அதிகரிக்கும்.

சிறார் சிறுமியர்

முதியோர்களிடத்தில் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும்.

இதனால் தொண்டைப்பகுதி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு நாம் உண்ணும் உணவோ அல்லது ஏதேனும் பொருளோ தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுப் பாதையில் தடையை ஏற்படுத்துவதை "சோக்கிங்"(CHOKING) என்று அழைக்கிறோம்.

இது யாருக்கு வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும்

எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால்

இதற்குண்டான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது சிறந்தது.

உணவாலோ வேறு பொருட்களாலோ

சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலில் இருப்பவர்களால் இரும முடிந்தால் அவர்களைத் தொடர்ந்து இருமுவதற்கு பணிப்பது நல்லது.

"இருமல்" என்பது சுவாசப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை வெளியே கொண்டு வரும் வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை அந்த நபரால் இருமவோ பேசவோ கத்தவோ முடியாத நிலையில் இருப்பின்

உடனே நாம் செய்ய வேண்டியது

அவருக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு

நமது கரங்களில் அவரது மார்புப் பகுதியைத் தாங்கிக் கொண்டு

அவரை இடுப்புப் பகுதியில் குனிவதற்குப் பணித்து

அவரது பின் புறத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில்

நன்றாக உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம்

அடைப்பு சரியாகும் வாய்ப்பு அதிகம்.

இந்த செயல்முறையில் பலன் கிட்டாவிடில் நாம் செய்ய வேண்டியது

"ஹெம்லிச் செயல்முறை"

அது என்ன?

எப்படி செய்வது?

மூச்சுத் திணறல் ஏற்பட்டவரின் பின் புறம் நின்று கொண்டு

அவரது இடுப்பை பின்புறத்தில் இருந்து ஒரு கைகொண்டு அணைத்துக் கொள்ள வேண்டும்.

கைகளின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவது போல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைத்து கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப் பகுதியில் இருக்குமாறு வைக்க வேண்டும்.

இப்போது மற்றொரு கையை பின்புறத்தில் இருந்து முன்பக்கமாக அவரை அணைத்து இன்னொரு கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போது வேகமாக அழுத்தமாக மேல்நோக்கி இரண்டு கைகளையும் வயிற்றுப் பகுதியில் அழுத்தித் தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த நபரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இந்த செயல்முறை அமையும்.

இவ்வாறு தொடர்ந்து வேகமாக ஐந்து முறை செய்ய வேண்டும்.

மேற்கூறிய பின்பக்கம் தட்டுதலை ஐந்து முறையும்

இந்த ஹெம்லிச் செயல்முறையை ஐந்து முறை என்று தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதற்கிடையில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர் மூர்ச்சை நிலைக்குச் சென்றால்

அவரை கீழே அவரது முதுகுப் பகுதி தரையில் கிடக்குமாறும் அவரது கைகள் இருபுறமும் இருக்குமாறும் கிடத்தி அவரது வாயை நோக்க வேண்டும்.

உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திய உணவுப் பொருள் அல்லது வேறு பொருள் கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் அதை கைவிட்டு லாவகமாக எடுக்க வேண்டும்.

கண்ணால் அந்த பொருளை பார்க்காமல் கையை விட்டு எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மேற்கொண்டு அந்தப் பொருளை உள்ளே தள்ளி விட்டு அதனால் மேற்கொண்டு சுவாசப்பாதை அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.

அந்த நபருக்கு மூச்சு இல்லாத நிலை இருப்பின் தொடர்ந்து சிபிஆர் எனும் உயிர்காக்கும் இதய மற்றும் சுவாசப்பாதை மீட்பு முதலுதவியை வழங்கி வர வேண்டும்.

ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது

நமது கைகளை இணைத்துக் கொண்டு நமது வயிற்றுப் பகுதியில் வைத்து கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். அந்த கடினமான தளம் என்பது நாற்காலியாக இருக்கலாம் அல்லது மேஜையாக இருக்கலாம்.

பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவர்கள் எளிதில் வாய்க்குள் போட்டுக் கொள்ளாத அளவில் விளையாட்டுப் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்மில் யாருக்கேனும் திடீரென உணவு சாப்பிடும் போது இத்தகைய சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டால்

மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

-பகிர்வு

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம் இந்தியா வில் கோடிக்கணக்கான மக்...