இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்! உயிரே போய் விடும்!
தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான்.
இப்போது இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை காண்போம்.
இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கியுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!
பக்கவாதம் - இதயத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்பும் இரத்த குழாயில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக பக்கவாதம் ஏற்படும்.
களைப்பு மற்றும் தலைச்சுற்றல் - ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் அல்லது உடலின் மற்ற உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த அளவு குறையும் போது, தலைச்சுற்றல் மற்றும் அதிகப்படியான களைப்பை உணரக்கூடும்.
மூச்சு விடுவதில் சிரமம் - இரத்தம் ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், சிரமம் ஏதுமின்றி சுவாசிக்க முடியும். ஆனால் எப்போது இரத்த ஓட்டமானது ஒருவரது உடலில் குறைவாக உள்ளதோ, அப்போது மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை அல்லது அசௌகரியத்தை உணரக்கூடும்.
மார்பு வலி - இதயத்தில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது தான் மார்பு பகுதியில் வலி ஏற்படும். அதுவும் மார்பு பகுதியில் வலி மட்டுமின்றி, ஏதோ ஒரு அழுத்தம், இறுக்கம், பிழிவது போன்ற உணர்வு அல்லது நெஞ்செரிச்சல் போன்றவற்றையும் உணரக்கூடும்.
கீழ் முதுகு - வலி எப்போது கீழ் முதுகுப் பகுதியில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோ, முதுகெலும்புகளுக்கு இடையிலான வட்டு உடையக்கூடியதாக மாறும். இதன் விளைவாக கீழ் முதுகுப் பகுதியில் உள்ள நரம்புகள் கிள்ள ஆரம்பித்து, கடுமையான வலியை உண்டாக்கும்.
கை மற்றும் கால் வலி - கை மற்றும் கால்களில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி இருந்தால், வலியுடன், அடிக்கடி மரத்துப் போவது மற்றும் மிகுதியான குளிரை உணரக்கூடும்.
Thanks to Manithan.com