Total Pageviews

Thursday, January 29, 2026

அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது தேவையற்றது! தவறு ! பல வித இன்னல்களுக்கு ஆழக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 

 இன்றய தலைமுறை யுவதிகளும் இளஞர்களும் தெரிந்துதான் செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை !

நிர்வாணமா புகைப்படும் எடுக்கிறதே தப்பு !

அதிலும் மொபைலில் வைப்பது அதைவிட தப்பு.

இன்று பல குடும்ப பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது .இப்படி பெண்களின் அந்தரங்க வீடியோ போட்டோக்கள் இணையத்துக்கு வர காரணம் எந்த முன்னறிவும் இன்றி விளையாட்டாக மொபைலில் எடுப்பது தான்.

ஆனால் விளையாட்டாக அதை படம் பிடிக்கிறார்கள்.

தனிமையில் ரசிப்பதற்கு என காரணம் வேறு கூறுவார்கள்.

இந்த தெய்வீக காதலர்கள் சண்டை போட்டு, சலித்து போனாதால் பிரிந்து போகிறார்கள்.

இவர்கள் எடுத்த வீடியோ போட்டோ மட்டும் உயிர்ப்புடன இருக்கும்.

கோபத்திலோ வெறுப்பிலோ இணையத்தில் பதிவேற்றப்படும்.

திருமணம் முடிந்து தேன்நிலவுக்கு செல்லும் ஜோடி, தேன் நிலவை மட்டும் கொண்டாடிவிட்டு வருவதில்லை.

அத்தனையும் பதிவு செய்துவிட்டு வருவது. பிறகு மொபைலில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைப்பது.

மொபைலில் அழித்தாலும் ரிக்வெரி சாப்டுவேர் போட்டு எடுக்க முடியும். லேப்டாப் ரிப்பேர் என்று கொடுக்கப்படும் இடத்திலும் எடுத்துவிடுவர்.

கணவன் மனைவி வேலை விஷயமாக பிரிந்துள்ளனர்.

கணவன் வற்புறுத்தால் மனைவி அந்தரங்க வீடியோ எடுத்து அனுப்புகிறார். பார்த்துவிட்டு அழித்தாலும் இருவர் மொபைல் நினைவகங்களிலும் போட்டோ வீடியோ இருக்கும்.

மறுநாள் இணையத்தில் உலகமே பார்க்கும் உங்கள் உடலில் உள்ள மச்சங்களை.

இந்த கள்ளகாதல் ஜோடிகளின் அலப்பரைகள் அதுக்கு மேல… பல வயது வித்தியாசத்தில் சேர்ந்த ஜோடிகள் காதல் மயக்கத்தில் விதவிதமாய் எடுத்து தள்ளுகிறாரகள். இணையத்தில் பல்லிளிக்கிறது பலர் அந்தரங்கம்.

முதல் டிஜிட்டலாக அந்தரங்கத்தை பதிவு செய்வதே தவறு. என்றாவது ஒரு நாள் வெளியே வந்து தீரும்.

வீடியோ கால் பேசினால் இருவரில் யாரோ ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தாலும் ஒரு நாள் கசிந்துவிடும்.

யார்க்கும் தெரியாமல் உங்கள் மொபைலில் வைத்திருந்தாலும் உங்கள் மொபைலை ஹாக் செய்யும் ஹாக்கர் அழகா எடுத்து ஆபாசதளத்திற்கு விற்றுவிடுவான்.

பெண்கள் / ஆண்கள் யாரும் உங்கள் அந்தரங்கத்தை படம் பிடிக்காதீர்.

Instagram காதலர்கள், Facebook காதலர்கள் என, பலருக்கு புகைப்படம் அனுப்பும் பெண்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம்.

ஒன்று அந்தரங்கத்தை வைத்து மிரட்டுவது.

இல்லயென்றால் ஆபாசதளத்திற்கு விற்பது.

பல ஆண் பெண்களின் வாழ்வு அஸ்தமனமாகியுள்ளது.

படம் பிடித்து பார்த்துவிட்டு அழித்தால் போய்விடும் என நம்பி கொண்டிருக்காதீர்.

பல நாட்கள் கழித்தும் அழிந்து போனதை recovery செய்யலாம்.

அனைத்தையும் ஹாக் செய்யும் காலம் இது,

அனைவரும் பார்த்து ரசிக்கும் இடத்தில் நீங்கள் இருக்காதீர்.

கவனம்…

அதிலும் பெண்ணை பெற்றவர்கள் மிக கவனம்.

இரண்டாம் கெட்டான் வயதில் உள்ள பெண்களை காதல் என்ற வலை வீசி, இம்மாதிரியான வீடியோ ஆடியோ புகைப்படங்களை பெற்று இணையத்தில் உலாவ விட்டுக்கொண்டிருக்கிறது இன்றைய காதல்.

No comments:

Post a Comment

அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது தேவையற்றது! தவறு ! பல வித இன்னல்களுக்கு ஆழக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

    இன்றய தலைமுறை யுவதிகளும் இளஞர்களும் தெரிந்துதான் செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை ! நிர்வாணமா...