Total Pageviews

Tuesday, February 17, 2015

தன்னம்பிக்கையை அதிகரிக்க


1.எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2.யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,  தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3.நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.நடையில் தெரியும் அந்த சுறு சுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது


Thanks to R.K.Karthik

இலவச தமிழ்சேனல்கள் தொகுப்பு 2015

ALL TAMIL FREE CHANNEL  FREE TO AIR FEB.2015 


INTELSAT 17 @ 66 DEGREE EAST (C BAND)

1) KALAIGNAR TV
2) KALAIGNAR ISAI ARUVI 
3) KALAIGNAR MURASU 
4) KALAIGNAR SEITHIKAL
5) KALAIGNAR CHTHIRAM 
6) KALAIGNAR SIRIPOLLI
7) GTV SPV NEWS( SUSPEND TRANSMISSION)
8) G7 SPV MUSIC( SUSPEND TRANSMISSION) 
9) CAPTAIN TV 
10) CAPTAIN NEWS 
11) PUTHIYATHALAI MURAI NEWS 
12) SATHIYAM NEWS 
13) TAMILAN TV 
14) WIN TV 
15) IMAYAMTV 
16) MAKKAL TV 
17) ANGEL TV HD  (christian program) 
18) VASANTH TV 
19) MATHA TV  (christian program) 
20) DHEERAN TV 
21) 7S MUSIC 
22) MOON TV 
23) SRI SANKARA TV 
24) SHOPPING ZONE(audio feed)
25) POLIMER TV 
26) POLIMER NEWS 
27) MK TELEVISION 
28) VENDHAR TV 
29) SALVATION  (christian program)
30) THANTHI NEWS 
31) PUTHUYUGAM TV 
32) POWER OF GOD TV (christian program) 
33) NEWS 7 TAMIL 
34) CHANNEL UFX

INTEL SAT 20 @ 60.8 5 DEGREE EAST ( C BAND)
1) SUPER TV MUSIC  
2) LOTUS NEWS
3) SHALINI TV    

4) PEPPAR TV
5) HBNTV (audio feed) 

6) PENGAL TV(test run)
7) KALVI TV(test run) 

8) GREEN TV AGRI (test run)
9) TUNE6 MUSIC (test run)


           EUTELSAT 70B @ 70.5E (KU)


1) DAN TAMIL OLI                   
2) DAN MUSIC
3) SERENDIB TV ISLAM  

TOTAL COST TO SEE THE ABOVE CHANNELS WITH IN  RS.5,500/- ONLY IN ONE TIME INVESTMENT. NO MONTHLY CHARGES PAYABLE.

DETAILS GATHERED FROM

Kumar Electronics

14 U C H S West Veli St
Postcode/City:
625001 Madurai - Town Hall Road
State: Tamil Nadu
Phone:


Monday, December 22, 2014

பண நெருக்கடியை சமாளிப்பது எப்படி ?

மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பலரும் மாதக்கடைசியில் பண நெருக்கடியை சந்திக்கிறார்கள்.

ஆனால், கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், மாதக் கடைசி அவதியில் இருந்து தப்பித்துவிடலாம்.


இதோ ஐடியாக்கள்,


சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுவது மட்டுமின்றி, அப்படியே நடக்கவும் செய்ய வேண்டும்.


மாத மாதம் வழக்கமாகச் செய்ய வேண்டிய வீட்டு வாடகை, மளிகை, பால் போன்றவற்றை சம்பளம் வாங்கியவுடனே முடித்துவிட்டால், வேலை முடிந்த நிம்மதியும் ஏற்பட்டு, ஒரு தெளிவு பிறக்கும்.


வழக்கமான கட்டாயச் செலவுகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவதால் எந்தப் பலனுமில்லை என்பதை உணருங்கள்.


சம்பளம் கையில் கிடைத்ததுமே, அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.


ஒன்றுக்கு ஒதுக்கிய தொகையை அதற்கே செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம்தான் மிஞ்சும்.


கட்டாயச் செலவுகள் போக கையில் எவ்வளவு பணம் எஞ்சியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.


தள்ளிப்போடக்கூடிய, அவசியமற்ற செலவுகளை தாராளமாகத் தள்ளிப்போடலாம்.


ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதை, எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது.


உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தைப் போட்டுவிடலாம். இந்தப் பணத்தை மிகவும் அவசர தேவை எதுவும் ஏற்பட்டால் தவிர எடுக்கக் கூடாது.


இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது எதிர்பாராத செலவுகளின்போது பெரிதும் கைகொடுக்கும்.


ஆனால், இப்படி ஒதுக்கி வைத்திருக்கும் பணம் இருக்கும் தைரியத்தில் செலவுகளை கூட்டிக்கொள்ளக்கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், மாதக் கடைசியில் எடுத்துச் செலவழித்துவிடக் கூடாது.


மாறாக, உறுதியோடு பணத்தை தொடர்ந்து சேமித்து வந்தால், பின்னாளில் ஒரு பெருந்தொகை உங்களிடம் சேர்ந்திருக்கும்.


கடன் வாங்கிச் செலவு செய்வதை, அதிலும் ஆடம்பரச் செலவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


வீட்டுக் கடனுக்கு மட்டும்தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதையும், சொந்த வீட்டுக் கனவை நனவாக்க மட்டுமே கடன் பெறலாம், மற்ற கடன்கள் எல்லாம் தேவையில்லாதவை என்று மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ளுங்கள்.

Thanks to Lankasri.com

Sunday, December 7, 2014

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் "ஆப்" கண்டுபிடிப்பு! -என்ஜீனியர் ரெசிங்டன்

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும்போது, அவர்களை எச்சரிக்கும் வகையிலான செல்போன் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஒரு என்ஜீனியர் கண்டுபிடித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது எல்லைக்கோடு குறித்து தெரியாததால் இலங்கை எல்லை பகுதியில் சென்று விடுவது நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து கொடுமைப்படுத்துவதும், கடும் தண்டனை வழங்குவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் இதனை தவிர்க்கும் பொருட்டு ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் இணையத் தொடர்பு இல்லாமலும், கைத்தொலைபேசி சிக்னல் இல்லாமலும்கூட பயன்படுத்திட முடியும். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இந்திய கடல் எல்லைமுடிந்து அடுத்த நாட்டின் கடல் எல்லை நெருங்குவதை 1 கிலோ மீட்டருக்கு முன்பே அவர்களது மொபைல் போனில் அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். உதாரணத்திற்கு படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போதே இந்த செல்போன் எச்சரிக்கை ஒலியெழுப்பும். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி விட்டால், எச்சரிக்கை படம் திரையில் தோன்றுவதோடு, வெளியேறு என்ற எச்சரிக்கை வார்த்தைகளையும் இந்த செல்போன் எழுப்பும். இதனால் மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த என்ஜீனியர் ரெசிங்டன் என்பவர் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார். இதுகுறித்து ரெசிங்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இரவு பகல் பராது தொடர்ந்து மூன்று ஆண்டு முயற்சி, பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி இந்த சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் இந்திய-இலங்கை இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது. இது 1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. கடலில் இந்த எல்லைக் கோடுகள் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் அடிக்கடி பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி தடங்கலின்றி கடலில் மீன் பிடிக்கலாம். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்களின் படகு அடையும் போது, அவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரைடு மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். 
 
அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன் கூடிய ஒலியினை எழுப்பும். இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. ஜி.பி.எஸ்.கருவியில் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் வரைப்படங்கள் இருப்பதால், 

சாதாரண மீனவர்களுக்கு தெரிவதில்லை. நான் கண்டுப் பிடித்துள்ள புதிய சாப்ட்வேரில் மேப் வசதியுள்ளது. அதில் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் அனைத்து கட்டளைகளும் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை மீனவர்கள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டியற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த சாப்ட்வேரில் மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும், அவர்களது மொபைல் போனில் எல்லை தாண்டியதும் பதிவாகிவிடும். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் ஆபத்து நேரங்களில் மீனவர்கள் இந்த சாப்ட் வேரை மொபைலின் திரையில் தொட்டால் போதும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்.அதில் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., கோடுடன் வருவதால் பொய்தகவல்களை அனுப்ப முடியாது. மேலும் படகு இருக்கும் இடத்தை துல்லியமாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியவரின் மொபைல் எண்ணும் அதில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் குறித்த தகவலை எளிதில் கரையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து, கடற்படை மூலம் மீனவர்களை எளிதில் மீட்க வழி செய்யும், இதில் தகவல்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுவதால், இதற்க்கு மட்டும் அவர்கள் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை துன்பங்களில் இருந்து காக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்றார் அவர்.
 

Thanks to One india .com

Tuesday, November 25, 2014

மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ !1)இந்திய மீனவர் அனைவருக்கும் மத்திய அரசு அடையாள அட்டையுடன் , ஒரு அலைபேசி ஒன்றும் அளிக்க வேண்டும்.

2) அலைபேசியில் நமது எல்லை தாண்டும் போது அதற்க்கான அபாய அறிவிப்பினை மீனவருக்கு தெரிவிக்க வேண்டும்.

3) நமது நாட்டு கப்பலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.

4) எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை மற்ற நாட்டு கடற் படையினர் அந்தந்த நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும்.

5)  பத்து முறைக்கு மேல்  ஓப்படைக்கப்படும் மீனவருக்கு கடலில் மீன் பிடிக்கும் உரிமையை அந்தந்த அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

6) மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ இரு அரசுகளும் முழுமையான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.

Friday, September 26, 2014

மது - என்னதான் தீர்வு ?
மது குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், மது (ஆல்கஹால்) ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

1. மது பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...


2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் மது குடிப்பவர்களும்...3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் மது குடிப்பவர்களும்...

 

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...
 

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...
 

6. இன்று மட்டும்தான் மது குடிப்பேன் ( ! ) நாளை மது குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...
 

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...
 

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) மது போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...
 

9. மது குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...
 

10.மது  மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...
 

11.மது  குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...
 

12. மது போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

 
மது - என்ன தான் பாதிப்புகள் ?
 

1. ஞாபக மறதி
 

2. உடல் உறுப்புகள் பாதிப்பு
 

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்
 

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்
 

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்
 

6. தற்கொலை முயற்சி செய்தல்.
 

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில்  சந்தேகித்தல்
 

8. குழந்தையின்மை
 

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.
 

10.  இறுதியில் அகால மரணம்
மது 'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

 
என்னதான் தீர்வு ?
 

1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.
 

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.


3.மது போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.


4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.


5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.


6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.


7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!


1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.


15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

Saturday, June 14, 2014

நிம்மதியாய் வாழ் !

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :
 • உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே. 
 •  
 • உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
 •  
 • உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
 •  
 • நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
 •  
 • உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
 •  
 • உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
 •  
 • இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.

Friday, April 25, 2014

'என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா !'நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமா ? ' என உணர்த்தும் இந்தக் கட்டுரை, உறவுச் சிக்கல்களை அவிழ்க்கும்படியாக அமைகிறது. 'என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா…' எனப் புலம்புபவர்கள் இதைப் படித்து உணர்ந்தால், அற்புத உறவுகளை அனுபவிக்கலாம்…

சத்குரு:

உங்களை எரிச்சலடையச் செய்பவர்களை எப்படி நேசிப்பது? இது ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆழமாய் எழும் ஒரு கேள்வி. அவர்களை அன்பு செய்வது போல நடிக்க வேண்டாம், அவர்கள் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும்.

சரி, அவர்கள் உங்களை எதற்காக எரிச்சலடையச் செய்ய வேண்டும்?

 நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே பதில். 

அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அவர்கள் இல்லை. 

அதே சமயம் நீங்கள் தீவிரமான கடவுள் பக்தர் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறீர்கள்.

பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் சரிதான், ஆனால் அது நடக்கப் போவதில்லை!

நீங்கள் கடவுளை நம்புபவராக இருந்தால், நீங்கள் வெறுக்கின்றீர்களே அவரும் கடவுளின் படைப்பு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வெறுப்படைவதே 'எது சரி, எது தவறு' என்று நீங்கள் முன்முடிவு எடுத்துவிடுவதால்தான். தங்கள் செய்முறையை ஒருவர் கொஞ்சம் மாற்றிக் கொண்டாலே, "இது தான் சரி," என்ற உங்களுடைய பிடிவாதத்தை அசைத்து விடலாம். அதன் பிறகென்ன அவர்களை வெறுக்க வேண்டியதுதான்..

உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்னும் உங்களுடைய எதிர்பார்ப்பின் விளைவுதான் இது. உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல இருந்தால், உங்களால் இங்கு வாழ முடியுமா? ஏன் உங்கள் வீட்டில் உங்களைப் போல் இன்னொருவர் இருந்தால் உங்களால் அங்கு வாழ இயலுமா? உலகில் உள்ளோர் எல்லாம் தனி குணத்துடன் இருப்பது நல்லதுதான்.

இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அந்த மனிதரைப் பாருங்கள், உலகில் அவர் போல் இன்னொரு மனிதரை உங்களால் அடையாளம் காண இயலுமா? இவரைப் போல் ஒருவர் இல்லை, இவரைப் போல் இன்னொருவர் வரப்போவதும் இல்லை. இந்த மனிதர் தன்னேரில்லாத ஒருவர். இந்த உயிரைப் போல் இன்னொரு உயிர் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், எவ்வளவு விலை மதிப்பில்லாத உயிர் இது என்பதை நீங்கள் பார்த்தால், அவர் உங்களை எப்படி எரிச்சலடையச் செய்ய முடியும்?

உங்கள் எல்லைக் கோட்டை அவர் தாண்டினால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும், அவர் எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டினால் அவருக்கு பித்து பிடிக்கும்.

உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அவர்கள் அனைவரும் தனித்துவமான உயிர்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். அதன்பின் வெறுப்பது என்ற கேள்விக்கு இடமில்லையே? உங்கள் கண் குருடாக உள்ளது, நீங்கள் எரிச்சலடைவதற்கான காரணமும் அதுவே. உங்கள் கண்களைத் திறந்து உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை பார்த்தால், நீங்கள் எரிச்சலடைய முடியுமா என்ன?

இவ்வுலகில் பல்வேறு விதமான சிக்கலான உறவுமுறைகளுக்குள் நீங்கள் வாழ்கிறீர்கள். மனிதர்களின் குறைபாடுகளையும் அவர்களின் தகுதிகளையும் புரிந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து செய்யுங்கள். அப்போதுதான் சூழ்நிலையை உங்களுக்கு தேவையானவாறு மாற்றியமைக்க உங்களால் இயலும். பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் சரிதான், ஆனால் அது நடக்கப் போவதில்லை! ஒரு உறவு உங்களை நெருங்க நெருங்க அவரைப் புரிந்து கொள்ள நீங்கள்தான் இன்னும் பிரயத்தனப்பட வேண்டும்.

பல மாதங்களாக ஒரு மனிதர் கோமாவிற்கு செல்வதும் அதிலிருந்து மீண்டு வருவதுமாக இருந்தார். அவருடைய மனைவி இரவும் பகலும் அவர் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். கவனம் திரும்பிய ஒரு கணத்தில், அவளை அருகில் வருமாறு சைகை செய்தான் கணவன். அருகில் அமர்ந்த அவளிடம், "என்னோட கஷ்ட காலத்தை பத்தி நான் யோசிச்சிட்டு இருந்தேன்… என்னை வேலையிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணப்பவும் நீ என்னோட இருந்த, என்னோட வியாபாரம் மூழ்கிப் போனப்பவும் நீ என்னோட இரவும் பகலும் வேலை செஞ்சிட்டு என் கூட இருந்த, என்னை யாரோ சுட்டப்போ அப்பவும் நீ என்னோட தான் இருந்த, இப்போ… நான் உடம்பு சரியில்லாம சரிஞ்சு கிடக்கிறேன் இப்பவும் நீ என்னோட தான் இருக்கிற. இதை எல்லாத்தையும் நான் நினைச்சு பார்க்கும் போது என்னோட துரதிர்ஷ்டமே நீ தான்னு தோணுது," என்றார்.

ஏதோ அடுத்த நபருக்கு குறைபாடுள்ள புரிதல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. நீங்கள் உருவாக்கும் சூழ்நிலைகளால் மற்றொரு நபர் உங்களை சிறப்பான முறையில் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மற்றொருவரை புரிந்து கொள்ள இயலாத போது, அவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று உங்கள் எதிர்பார்ப்புகளை நீட்டிக் கொண்டே போனால், வம்புகளில் தான் போய் முடியும். உங்கள் எல்லைக் கோட்டை அவர் தாண்டினால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும், அவர் எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டினால் அவருக்கு பித்து பிடிக்கும்.

அதுவே உங்கள் புரிந்து கொள்ளும் திறனை அவர்களுடைய புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டு நீங்கள் வளர்த்துக் கொண்டால், அவர்களுடைய புரிதலும் உங்களுடைய புரிதலுடன் இணக்கமாகிவிடும். அவர்களுடைய வரையறைகளையும் திறன்களையும் உங்களால் அரவணைத்துப் போக முடியும்.

எல்லா மனிதர்களிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன, சில கெட்ட குணங்களும் உள்ளன. இதனை உங்கள் புரிந்து கொள்ளும் திறனிற்குள் உள்ளடக்கக் கற்றுக் கொண்டால் உறவுகள் உங்களுக்கு வேண்டியவாறு இயங்கும். அவர்களுடைய புரிதலின் போக்கிற்கு விட்டுவிட்டால் வாழ்க்கை தற்செயலாய் மாறிவிடும். ஒருவேளை உங்களுடைய உறவினர்கள் பெருந்தன்மையான மனதுடன் இருந்தால், உறவுமுறை சுமூகமாக போகும். அவர்கள் அப்படி இல்லாத பட்சத்தில் உறவு முறியும்.

உங்கள் நெருங்கிய உறவோ, உங்கள் அலுவலோ, உங்கள் வியாபாரமோ, இல்லை உலகமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாழ்க்கையை முடிவு செய்பவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், எல்லா மனிதர்களையும், எல்லா பொருட்களையும் உங்கள் புரிதலுக்குள் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

மக்களின் மடத்தனத்தையும் தாண்டியதாய் உங்கள் புரிதல் மலர வேண்டும். உங்களைச் சுற்றி மிக அற்புதமான பல மனிதர்கள் இருக்கிறார்கள், ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர்கள் கொஞ்சம் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் இழப்பது அவர்களைத்தான். அவர்களது கோபங்களையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் நிச்சயமாக அவர்களை இழப்பீர்கள். ஆனால் அவர்களை புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை எப்படி கையாள்வது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கை ஒரு நேர்கோடல்ல. வாழ்க்கை முறைப்படி நடப்பதற்கு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய வேண்டி வரும். உங்கள் புரிந்து கொள்ளும் திறனை கோட்டை விட்டால், உங்கள் திறமையையும் அதனுடன் சேர்த்தே இழந்துவிடுவீர்கள். தனிப்பட்ட உறவுகள் ஆகட்டும் அல்லது வேலை சூழ்நிலையில் நிலவும் மேலாண்மை ஆகட்டும் இரு இடங்களிலும் உங்களது தேவை - புரிதல். புரிதல் இல்லாத பட்சத்தில் கனிவு தரும் சுகமான உறவுகள் மலராது.

திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

Temple imagesதிருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது  பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.

அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.

தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.

இந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம்,  மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு -  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.

இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.         

Thanks to Dinamalar.com                                        

Wednesday, April 9, 2014

எல்இடி Vs பிளாஸ்மா

எல்இடி Vs பிளாஸ்மா : தொலைக்காட்சி தொழில்நுட்ப சிறந்த உள்ளது?

நீங்கள் LED மற்றும் பிளாஸ்மா தொலைக்காட்சிகள் பற்றிய உண்மைகள் கொடுக்கிறோம்ஜிம் மார்டின் | பிசி ஆலோசகர் | ஒரு HD தொலைக்காட்சி தேர்வு இந்த நாட்களில் ஒரு தந்திரமான வணிக உள்ளது. உங்கள் உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒரு நேர்முக மற்றும் நீங்கள் ஊடக பின்னணி , ஸ்மார்ட் இணைய தளங்களை மற்றும் , நிச்சயமாக, 3D உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறிப்பிட தேவையில்லை , வாசகங்கள் மற்றும் குறிப்புகள் தொடுத்த வேண்டும் .

அடுத்த வாசிக்ககாஸ்பர்ஸ்கை தூய்மையான 3.0 மொத்த பாதுகாப்பு ஆய்வு : மேல்- தூர இணைய பாதுகாப்பு தயாரிப்புகாஸ்பர்ஸ்கை தூய்மையான 3.0 மொத்த பாதுகாப்பு ஆய்வுஐபாட், ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அலுவலகம் : உங்கள் தொலைபேசி அல்லது மாத்திரை Office பயன்படுத்தி எவ்வளவு செலவு எப்படிஐபாட், ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அலுவலகம்7 சிறந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் : என்ன 2014 சிறந்த ஸ்மார்ட் டிவி2014 7 சிறந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகள்சாம்சங் UE55F8000 விமர்சனம் : உயர் செயல்திறன் தொலைக்காட்சிசாம்சங் UE55F8000 விமர்சனம்பரிந்துரைசெய்ய நீங்கள் வேறு முடிவை ஒரு LED அல்லது பிளாஸ்மா திரையில் தேர்வு என்பதை ஆகிறது . இங்கே, நாம் இரண்டு இடையே வேறுபாடுகள் , தங்கள் சாதக விளக்க நீங்கள் சிறந்த தேர்வாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன் .மேலும் காண்க: ஒரு ஓல்இடி தொலைக்காட்சி என்ன?எல்இடி தொலைக்காட்சிகள் விளக்கினார்இன் LCD குழப்பம் Vs LED வரை அகற்றுவதன் மூலம் ஆரம்பிக்கலாம். அழகான மிகவும் அனைத்து உற்பத்தியாளர்கள் அவர்கள் உண்மையில் LCD TV கள் என்றாலும் , இப்போதெல்லாம் தங்கள் தொலைக்காட்சிகள் 'லெட் ' அழைக்கின்றன . ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து LCD TV கள் ஒப்பிடும்போது , மாற்றம் என்ன , LCD பேனல் ஏற்றி வழி இருந்தது.பழைய LCD TV கள் மிகவும் நீங்கள் ஒரு அலுவலகத்தில் அல்லது கடையில் கண்டுபிடிக்க விரும்புகிறேன் போன்ற ஒளிரும் குழாய்கள் , இருந்தது, ஆனால் ஒரு மிக சிறிய அளவில் . அவர்கள் ஒளி பல வகையான என , ஆற்றல் திறன் எல்.ஈ. பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது , சக்தி நிறைய பயன்படுத்த .அவர்கள் ' ஒளிரும் ' அல்லது முன் ' குளிர்க்கதோட்டு ' என்று அழைக்கப்படும் இல்லை என்பதால் தொழில்நுட்ப, பின்னர் , உற்பத்தியாளர்கள் உண்மையில் அவர்களின் தொலைக்காட்சிகள் 'லெட் ' அழைக்க கூடாது. ஆனால் அது தான் வழி. நாம் விஷயங்களை எளிமையாக வைத்து இந்த பெயரிடல் முறை பின்பற்ற வேண்டும் .எல்.ஈ. ஒரு துண்டு மூலம் திரையில் விளிம்பில் இருந்து ஏற்றி அந்த , மற்றும் (சில நேரங்களில் லைட் நேரடி அழைக்கப்படுகிறது) முழு குழு பின்னால் எல்.ஈ. ஒரு கட்டம் , அந்த: LED TV இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . நீங்கள் மேலே டாலர் செலுத்தும் வரை, அதை மீண்டும் விளக்குகள் LED கண்டுபிடிக்க அரிதான விஷயம். இது ' லைட் விளிம்பில் ' என்று மிகவும் பொதுவான LED தொலைக்காட்சிகள் தான் .சாம்சங் ES7000 LED டிவிஎல்இடி தொலைக்காட்சிகள் நன்மைமாறாக போலும் எனினும் விளிம்பில் விளக்குகள், உற்பத்தியாளர்கள் தங்கள் தொலைக்காட்சிகள் சூப்பர் மெல்லிய மற்றும் செய்ய அனுமதிக்கிறது நன்மை உண்டு , விளிம்பில் விளக்கு ஒரு LED-பின்னால் தொகுப்பு விட ஒரு பிரகாசமான , மேலும் நிலையான காணப்படும் படத்தை ஏற்படலாம் .LED தொலைக்காட்சிகள் கடினமான இனப்பெருக்கம் சிவப்பு, பச்சை மற்றும் ப்ளூஸ் வழங்க குவாண்டம் புள்ளிகள் மற்றும் நீல எல்.ஈ. டி போன்ற சில தந்திரமான தொழில்நுட்பங்களை (உதாரணமாக சோனி , ) சில உற்பத்தியாளர்கள் , நிறங்கள் ஒரு பரவலான (மேலும் வரம்பு அழைக்கப்படுகிறது) உருவாக்க முடியும் . இது போன்ற சோனி KDL- 40W905A என தொலைக்காட்சிகள் துடிப்பான , தெளிவான வண்ணங்கள் கொண்ட ஒரு மிக வாழ்வாதார படத்தை வழங்க வேண்டும் என்று அர்த்தம் .எல்.ஈ. டி , நாம் சொன்னது போல , மிகவும் சக்தி பயன்படுத்த வேண்டாம் , அதனால் கூட ஒரு 42 அங்குல தொகுப்பு சிறிய 40 அல்லது 50 வாட்ஸ் பயன்படுத்த வேண்டும் . சரியான சக்தி பயன்பாடு, பெருக்கி சக்தி மற்றும் Wi-Fi உட்பட மற்ற விஷயங்களை காட்டப்படவில்லை படத்தை சார்ந்தது . LED தொலைக்காட்சிகள் , எனினும், இதுவரை இயக்க டிவி எந்த வகையான மலிவான இருக்கின்றன .எல்.ஈ. அது உங்கள் அறையில் சூரிய ஒளி வெள்ளம் என்றால் கூட, நடவடிக்கை பார்க்க வழக்கமாக ஒரு பிரச்சினை தான் அதாவது , மிகவும் பிரகாசமான இருக்க முடியும் . இது உற்பத்தியாளர்கள் நேரத்தில் தங்கள் தொலைக்காட்சிகள் மீது அனைத்து மிகவும் ஆர்வமாக தெரியவில்லை என்று பிரதிபலிப்பு பூச்சுகள் கடக்க உதவுகிறது.எல்இடி தொலைக்காட்சிகள் பாதகம்எல்இடி தொலைக்காட்சிகள் போராட்டத்தை ஆழமான கறுப்பர்கள் உருவாக்கும் எங்கே . உற்பத்தியாளர்கள் நீங்கள் சொல்ல கூடும் போதிலும் , அது அதே வழியில் நேரடி லைட் LED தொலைக்காட்சிகள் முடியும் என்று உள்ளூர் டிம்மிங்கால் செய்ய முடியாது . வேறுவிதமாக கூறினால், முழு படத்தை சிறிய பகுதிகள் மங்கி , ஆனால் முடியாது.இந்த ஒளிமங்கல் - பொதுவாக மெனுக்கள் மாறும் மாறாக அழைக்கப்படும் - எலெக்ட்ரானிக்ஸ் நீங்கள் காணும் திட்டம் காட்சி மாற்றங்களை பதிலளிக்க மெதுவாக இருக்க முடியும் என அடிக்கடி கவனத்தை திருப்பும் . ஒரு பிரகாசமான காட்சி திரும்பிய போது ஒரு இருண்ட , உள்ளரங்க ஒரு பிரகாசம் பகுதியை மிகவும் தாமதமாக வீழ்ச்சி மற்றும் பின்னர் தாமதமாக அதிகரிப்பு ஒரு பிரகாசமான , வெளிப்புற காட்சி நகரும் போது எரிச்சலூட்டும் முடியும் .பின்னொளி ஒழுங்கின்மை கூட LED தொலைக்காட்சிகள் ஒரு பிரச்சினை இருக்க முடியும். பொதுவாக நீங்கள் அதை எல்.ஈ. அமைந்துள்ள, அல்லது முனைகளில் எங்கே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும் என்று அங்கு இருட்டில் காட்சிகளில் இந்த கவனிக்க வேண்டும் .( ஏனெனில் அவர்களின் எல்சிடி பேனல்கள் ) LED தொலைக்காட்சிகள் மற்றொரு சிக்கல் குறுகிய கோணங்களில் உள்ளது. கோணங்கள் பயன்படுத்தப்படும் LCD பேனல் வகையை சார்ந்தது . பக்கத்தில் இருந்து பார்க்க (அல்லது வெறுமனே ஒரு சதுர -இல்லை) போது ஏழை கோணங்களில் LED தொலைக்காட்சிகள் பொதுவாக பூரித இழக்கின்றன ஆனால் நிறங்கள் முற்றிலும் அல்லது கவிழ் மாற்ற வேண்டும்.பிளாஸ்மா தொலைக்காட்சிகள் விளக்கினார்பானாசோனிக் VT60 பிளாஸ்மாஅதன் பிக்சல்கள் வடிகட்டிகள் மூலம் பிரகாசிக்கும் எல்.ஈ. மூலம் ஏற்றி LCD TV கள் , போலல்லாமல், பிளாஸ்மா தொலைக்காட்சிகள் ஒவ்வொரு பிக்சல் மூன்று தனித்தனியாக ஏற்றி பிளாஸ்மா சேம்பர்ஸ் ( சிவப்பு, பச்சை மற்றும் நீல ஒவ்வொரு ) வேண்டும் . தற்போதைய பயன்படுத்தப்படும் போது, அணுக்களின் உள்ளே வாயுக்கள் ஒரு பிளாஸ்மா மற்றும் ஒளி அமைக்கின்றன .பிளாஸ்மா ஒப்பீட்டளவில் பழைய தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்மா அமைக்க பயன்படுத்தப்படும் தற்போதைய பெரும்பாலும் அகச்சிவப்பு வெப்ப ஆஃப் வழங்கப்படும் என , அவர்கள் , LED தொலைக்காட்சிகள் விட நிறைய மின்சாரம் பயன்படுத்த . இன்னும் பிளாஸ்மா டி.வி. செய்யும் சில உற்பத்தியாளர்கள், மிகவும் உற்பத்தி சரிவின் உள்ளன - பானாசோனிக் ஏற்கனவே அதை வெளியே இழுக்க மற்றும் LED கவனம் செலுத்த விரும்புகிறது என்றார் . சாம்சங் மற்றும் எல்ஜி , பிளாஸ்மா தொலைக்காட்சிகள் தயாரிக்கின்றன .பிளாஸ்மா தொலைக்காட்சிகள் நன்மைபெரும்பாலான மக்கள் கண்களில் பிளாஸ்மா மிகப்பெரிய நன்மை சிறந்த கறுப்பு அளவுகள் ஆகிறது . ஒவ்வொரு செல் தனித்தனியாக எரிய இருந்து , ஒரு பிளாஸ்மா டிவி அந்த செல்களுக்கு எந்த தற்போதைய பயன்படுத்துவதன் மூலம், ஒரு கருப்பு படத்தை ( அல்லது கருப்பு சிறிய பகுதிகளில் ) உருவாக்க முடியும் . மாறாக - நோக்கம் இல்லை சிலேடை - LED தொலைக்காட்சிகள் மிகவும் grayer இருக்கின்றன . கூட நேரடி லைட் LED தொலைக்காட்சிகள் ஒன்றுக்கு பிக்சல் ஏற்றி இல்லை , அதனால் கருப்பு நிலைகள் ஒரு பிளாஸ்மா டிவி பொருத்த முடியாது .மீண்டும், பிளாஸ்மா டி.வி. இயல்பாகவே திரை முழுவதும் இன்னும் கூட பிரகாசம் அளவு உற்பத்தி , மற்றும் மாறும் மாறாக தேவை இல்லை என்பதால் காட்சிகளை மாற்ற போது , எந்த கவனச்சிதறல் மாற்றங்கள் பிரகாசம் உள்ளன .இதேபோல் , ஒவ்வொரு செல் சுய ஏற்றி கோணங்களில் , ஏனெனில் , LED தொலைக்காட்சிகள் பெரும்பாலான விட நன்றாக இருக்கும் . நீங்கள் 45 உட்கார முடியும் - அல்லது 80 டிகிரி சென்டர் ஆஃப் , மற்றும் நீங்கள் அமைக்க முன் நேரடியாக உட்கார்ந்து இருந்தால் இன்னும் நீங்கள் அதே பணக்கார நிறங்கள் பார்க்க .பிளாஸ்மா தொலைக்காட்சிகள் , திரவ படிகங்கள் உடல் நகர்த்த வேண்டும், அங்கு LCD TV கள் ஒப்பிடுகையில் ஒரு வேகமான பதில் நேரம் வேண்டும். அது வேகமாக நகரும் பொருட்களை கூர்மையாக இருக்கும் பொருள் , மற்றும் 3D உள்ளடக்கத்தை பார்த்து போது குறைந்து பன்முக தோற்றம் ( குறுக்கு பேச்சு அல்லது இரட்டை இமேஜிங் ) என்பதாகும்.பிளாஸ்மா தொலைக்காட்சிகள் பாதகம்கறுப்பர்கள் ஆழமான போது , வெள்ளையர் பொதுவாக சிறந்த LED தொலைக்காட்சிகள் போன்ற பிரகாசமான இல்லை , அதனால் பிளாஸ்மா , உச்ச பிரகாசம் ஒரு பற்றாக்குறை . அது என்ன நடக்கிறது பார்க்க கடினமாக இருக்கும் போது , குறிப்பாக சனி நாட்களில் தவிர, பொதுவாக ஒரு பிரச்சினை அல்ல .ஏனெனில் ஒரு படத்தை உருவாக்கிய வழி, சில மக்கள் பிளாஸ்மா ஃப்ளிக்கர் பாதிக்கப்படுகின்றன . இந்த திரையில் ஒரு பழைய CRT மானிட்டர் போன்ற பளபளப்பு அல்லது ஃப்ளிக்கர் தோன்றும் அங்கு பிரகாசமான படங்களை , குறிப்பாக கவனிக்கப்படுகிறது.அதிக சக்தி நுகர்வு மற்றொரு பிரச்சனை. நவீன பிளாஸ்மா டி.வி. திறமையான உள்ளன என்றாலும், அவர்கள் இன்னும் ஒரு சமமான அளவு LED TV விட பல மடங்கு அதிக சக்தியை பயன்படுத்தும் .பட வைத்திருத்தல் பிளாஸ்மா பேனல்கள் ஒரு பெரிய பிரச்சினை இருக்க வேண்டும், ஆனால் அது இன்று ஒரு பிரச்சினை இல்லை . ஒரு நிலையான படத்தை அல்லது குழு உள்ளது போது படம் ' தீக்காயங்கள் ' ( இது போன்ற ஒரு விளையாட்டு ஒரு சேனல் லோகோ இப்ராஹீமும் , நீங்கள் அடிக்கடி விளையாட ) மற்றும் வண்ண லோகோ அல்லது தொகுதி வீடியோ ஆதாரம் இருந்து சென்று கூட காட்டப்படும் . அடக்கமான முழு படத்தை நகர்த்தும் உற்பத்தியாளர்கள் சிக்கலை தவிர்க்க முயற்சி செய்ய பயன்படுத்த ஒரு தந்திரம் இருக்கிறது , ஆனால் விளைவுகள் ஒரு புதிய குழு மீது மிக மோசமான , எனவே அது முதல் மாதம் நீண்ட காலத்திற்கு ( பிபிசி செய்திகள், சொல்ல) சேனல்களை பார்க்கும் தவிர்க்க கவனமாக இருப்பது தகுந்தது அல்லது .

LED அல்லது பிளாஸ்மா : எந்த சிறந்த உள்ளது?எந்த வேறு ஒரு தெளிவான வெற்றி முதல் இரண்டு தொழில்நுட்பங்கள் இடையே முடிவு , பெரும்பாலும் உங்கள் விருப்பங்களை ஆகிறது .நீங்கள் 2D மற்றும் 3D இரு சிறந்த படத்தை தர , வேண்டும், மற்றும் மின்சாரம் செலவு பற்றி கவலை இல்லை என்றால், ஒரு பிளாஸ்மா செல்ல வழி இருக்க முடியும் . சில காரணங்களால் - - உங்கள் தொலைக்காட்சி முன் நேரடியாக பரந்த கோணங்களில் நன்றி உட்கார முடியாது நீங்கள் என்றால் அது ஒரு நல்ல தேர்வு .இயங்கும் செலவுகள் , மெல்லிய மற்றும் பிரகாசம் மிக முக்கியமானது என்றால் , ஒரு LED டிவி முறையிடுவேன்.நீங்கள் ஒரு வாங்க முன் எங்கள் தொலைக்காட்சி விமர்சனங்களை வாசிக்க மறக்க வேண்டாம்!

இரத்த சோகை என்றால் என்ன? Anemia [ Tamil ]

  இரத்த சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக...