Total Pageviews

Friday, March 7, 2025

வேலை !

 

ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவருக்கு சிறிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. சிறிது நாட்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் சரியான சிடுமூஞ்சி. எந்த ஒரு சிறு தவறு என்றாலும் உடனடியாக சற்றும் தயங்காமல் திட்டி விடுவார். மேலதிகாரியின் அத்தகைய குணம் அந்த இளைஞனுக்கு நாளுக்கு நாள் மன உளைச்சலை கொடுத்தது. வறுமையின் காரணமாக வேலைக்கு சென்றாலும் கூட அவரால் மேலதிகாரியின் குணத்துக்கு ஈடு கொடுத்து அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை.

தன் வாழ்வில் பிரச்சனை வரும்போது எல்லாம் தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசனை கேட்பது அவன் வழக்கம் அந்த வகையில் இந்த விஷயத்தை தன்னுடைய பேராசிரியரிடம் ஆலோசித்தான்..

"ஐயா, எனக்கு நெடு நாட்களாக வேலையே கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர் சரியான சிடுமூஞ்சியாக இருக்கிறார். சிறு தவறு செய்தாலும் உடனே கோபப்பட்டு வார்த்தைளை நெருப்பென கொட்டி விடுகிறார். என்னால் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் நான் வேலையை விட்டு விடலாம் என நினைக்கிறேன்," என்று கூறினார்.

இளைஞர் கூறியதைக் கேட்ட பேராசிரியர் சிறிது நேரம் அமைதி காத்தார். மெதுவாக இளைஞரிடம், "வேலையை விட்டு விடலாமா? அல்லது வேண்டாமா? என்பதை மூன்று மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம். அதற்கு முன் உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். நீ நாளைமுதல் அந்த மேலதிகாரியை ஒரு முறையேனும் பாராட்டி விடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி பாராட்டுவதற்காக அந்த மேலதிகாரியிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை உற்று நோக்கு. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டு என வைத்துக் கொள். மூன்று மாதங்கள் கழிந்த பின் மீண்டும் வந்து என்னை பார்!" என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார் துறவி.

மறுநாள் வழக்கம்போல் இளைஞன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றான். மேலதிகாரியுடன் பேசும் போது அவர் அணிந்திருந்த சட்டை நன்றாக இருந்ததால், "தங்களுடைய ஆடை தேர்வு நன்றாக இருக்கிறது" என பாராட்டினான். மறுநாள் மேலதிகாரி அந்த இளைஞனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை டைப் செய்து எடுத்து வருமாறு கூறினார். அந்தக் கடிதத்தை டைப் செய்யும் போது அதன் ஆங்கில நடை நன்றாக இருப்பதை கவனித்த இளைஞன், அவரிடம் மீண்டும் கடிதத்தை கொடுக்கும் போது, "இக்கடிதத்தில் எழுதியுள்ள ஆங்கில நடை நன்றாக இருக்கிறது!" என பாராட்டினான். இப்படியாக தொடர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தன.

அந்த இளைஞன் மீண்டும் தன் பேராசிரியரே சந்தித்தபோது அவர் கேட்டார் "இப்பொழுது நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? வேலையை ராஜினாமா செய்து விடலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞனோ, "வேண்டாம், நான் இப்பொழுது மேலதிகாரியுடைய தனிப்பட்ட உதவியாளராக பதவி உயர்வு பெற்று விட்டேன். நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து அவரிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே என்னுடைய பார்வைக்கு பட்டது. அதனால் இப்பொழுது வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கு இல்லை," என்று கூறினான்.

Thursday, March 6, 2025

எங்கே நிம்மதி ! நம் மனதில் தான் உள்ளது !

 

வாழ்நாள் முழுவதும், மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்க வேண்டும்  என்று நினைத்தான், ஒருவன். அதற்கு என்ன வழி என்று, நண்பர்களிடம் கேட்டான்.

'பணம் இருந்தால், மகிழ்ச்சி வரும். அதனால், பணம் சம்பாதிக்கிற வழியைப் பாரு...' என்றனர்.

இவனும், பாடுபட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளிலே அவனிடம் நிறைய செல்வம் சேர்ந்து விட்டது. அப்போதும், அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. திரும்பவும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.

'பணம் சம்பாதித்தால் போதாது. தாராளமா செலவு செய்யணும்...' என்று, ஆலோசனை தந்தனர், நண்பர்கள்.

இவனும், விருப்பப்பட்டதை எல்லாம் வாங்கிக் குவித்தான்; ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட்டான்; பல ஊர்களுக்கு சென்று வந்தான். இறுதியாக, திருமணம் செய்தும் பார்த்தான். அப்போதும், நிம்மதி இல்லை.

கடைசியில், ஒரு முனிவரிடம் யோசனை கேட்டான். சற்று நேரம் யோசித்தவர், 'துறவறத்தில் தான் உனக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால், அதற்கு எல்லாவற்றையும் துறக்கணும்...' என்றார்.

அவனும் சரி என்று, தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் மூட்டையாக கட்டி எடுத்து வந்து, முனிவர் காலடியில் வைத்து, 'எனக்கு, மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கச் செய்ய வேண்டும்...' என்று, வேண்டினான்.

திடீரென்று, காலடியில் கிடந்த பண மூட்டையை துாக்கிக் கொண்டு ஓடினார், முனிவர். உடனே, இவனும் அவரை துரத்திச் சென்றான்.

சந்து, பொந்தெல்லாம் மூச்சு இரைக்க ஓடியவர், புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்றார். துரத்தி வந்தவனும், அங்கு வந்து சேர்ந்தான்.

'என்ன, பயந்து விட்டாயா... இந்தா உன் மூட்டை...' என்று, திருப்பி கொடுத்தார், முனிவர்.

அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

'இதோ பாருப்பா... நீ இங்க வர்றதுக்கு முன்பும், இந்த செல்வம் உன்னிடம் தான் இருந்தது. ஆனால், அப்போது உனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இல்லை. இப்போதும் அது உன்னிடம் தான் இருக்கிறது. முன்பு இருந்ததை விட, இப்போது அதிக மகிழ்ச்சியும், நிம்மதியும் உன்னிடம் இருக்கிறது அல்லவா!

'இதிலிருந்து என்ன தெரிகிறது... மகிழ்ச்சியோ, நிம்மதியோ வெளியில் இல்லை. நம் மனதில் தான் உள்ளது...' என்று கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

நிம்மதி எங்கு உள்ளது என்று, நமக்கும் புரிந்ததல்லவா!

பி. என். பி.,


Thursday, February 27, 2025

குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும் ?

குழப்பங்கள் நிறைந்த குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும் ?

வாழ்க்கையில் பிரச்சனைகள் குழப்பங்கள் அவ்வப்போது வரலாம், போகலாம். ஆனால், சில வீடுகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் சண்டை சச்சரவுகளும் தான் வாழ்க்கையாக இருக்கும். இப்படிப்பட்ட குடும்பத்தில் மன நிம்மதி இருக்காது. குடும்பத்தில் ஒரு அமைதி இருக்காது. சூனியம் பிடித்த வீடு போல இருக்கும். திடீரென்று பிரச்சனை தலை தூக்கும். நேற்று வரை நன்றாக இருந்த குடும்பம், இன்று நடுத்தெருவில் வந்து நிற்கும். அவமானப்படும். வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பாதை மாறி சென்றிருப்பார்கள். பெற்றவர்களுக்கு கோடி கோடியாக பணம் இருந்தும் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு. நம் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை எப்படி சரிசெய்வது?  

1.குடும்பத்தில் உள்ள அனைவரும் புரிதல் உணர்வுடன் நடந்தது கொள்ள வேண்டும் .

   2.விட்டு கொடுப்பதில் தான் வாழ்க்கை உள்ளது .     

 3.அவரவர் வேலைகளை அவர் அவர் செய்ய வேண்டும்.   

    4.வீண்  விவாதம்  செய்யக்கூடாது!       

  5.நம் செயல்கள் மற்றவர் மனம் புண்படும் படி இருக்கக்கூடாது .      

   6.பெரியவர்கள் சிறியவர் பாகு பாடின்றி ஒருவரை ஒருவர் மதிப்பு கொடுத்து வாழ வேணடும் .     

   7. நான் இல்லை என்றால் இந்த குடும்பம் சிறப்பாக இருக்காது போன்ற எண்ணம் யாருக்கும்  இருக்கக்கூடாது . 

  8.குடும்பத்து உறுப்பினர் அனைவரும் சேர்ந்து வாரம் ஒரு முறையாவது பேச மற்றும் சேர்ந்து உணவு உட்க்கொள்ள வேண்டும் .       

   9.குடும்பம் வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி குடும்ப உறுப்பினர் களுடன் மனம் விட்டு பேசவேண்டும்.

10.குடும்பத்தில்உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வேலை செய்து குடும்ப பொருளாதாரத்தில் பங்கு அளிப்பு செய்ய வேண்டும். 

11.குடும்பத்தில்குழப்பம்,பிரச்சனை, ஏற்பட்டால் அனைவரும் கலந்து பேசி சரியான தீர்வு காண வேண்டும்.

 12.கடன் வாங்க கூடாது. தேவை இல்லாமல்  ஊர் சுத்த கூடாது.

13.அடுத்தவர் சொல்லும் பிரச்சனைகளை மூளையில் ஏற்றி வருத்தம் கொள்ளக் கூடாது.

14.மற்றவர்உங்களிடம்ஏதாவதுஅறிவுரையோ அல்லது ஏதாவது ஒன்று பற்றி உங்களிடம் விளக்கம் கேட்டால், உங்களுக்கு அது பற்றி தெரிந்தால் மட்டும் அது பற்றி பேசுங்கள்! இல்லையனில் எனக்கு தெரியாது என்பதனை சொல்லுங்கள் !

15.குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல் பட வேண்டும்.

16.குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் உணவு சுவையாகவும், தரமானதாகவும் இருக்கும் படி செய்ய வேண்டும் .

17.குடும்ப உறுப்பினர்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை யுடனும் மறுபடியம் அதே தவறை செய்யாமலும் இருக்க வேண்டும்.

18.தேவை இல்லாமல் யாராவது மூன்றாம் நபரை குடும்ப உறுப்பினர் அழைத்து வரக் கூடாது.

19.பிரச்சனைக்குரிய நபர் எனஒருவர் பற்றி தெரிந்தால், அவரிடம் தேவை இல்லாமல் விவாதம் செய்யக் கூடாது .

20.மொத்தத்தில் குடும்ப உறுப்பினர் கள் அடுத்தவர் மன நிம்மதியுடன் வாழ தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

Wednesday, February 26, 2025

முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு !

 முதியோர் நலன் !

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனை வரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.

 முதுமை என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி, ஆனால் பல முதியவர்களுக்கு, அது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்  சவால்களுடன் வருகிறது. 

நமது பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையை நம்மை வளர்ப்பதிலும், வழி நடத்துவதிலும், துன்பத்திலும் நமக்குப் பக்கபலமாக இருப்பதிலும் செலவிட்டுள்ளனர். அவர்கள் வயதாகும் போது, ​​அவர்களுக்குத் தகுதியான அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதை கிடைப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பாகிறது. வயதான அன்புக்குரியவர்களைப் பராமரிப்பது என்பது அவர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, அவர்களை மதிப்பு மிக்கவர்களாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணர வைப்ப தாகும்.

1.முறையான மருத்துவப் பராமரிப்பை உறுதி செய்தல்.

2.குறிப்பாக மனைவியை இழந்த அல்லது தூரத்தில் வசிக்கும் குழந்தைகளைக் கொண்ட முதியவர்களுக்கு, முதியோர் பராமரிப்பு விஷயத்தில், உணர்ச்சி நல்வாழ்வு உடல் ஆரோக்கியத்தைப் போலவே முக்கியமானது.

 நீங்கள் எப்படி உதவலாம்:

3.அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள், உரையாடல்களில் ஈடுபடுங்கள், அவர்களின் கதைகளைக் கேளுங்கள்.

4.சமூக நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும்.

5.நீங்கள் அடிக்கடி அவர்களுடன் இருக்க முடியாவிட்டால், ஒரு தொழில்முறை துணை பராமரிப்பாளரை பணியமர்த்துவதைக் கவனியுங்கள்.

6.விபத்துகளைத் தடுப்பதற்கும், எளிதாக நடமாடுவதை உறுதி செய்வதற்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டுச் சூழல் அவசியம். பல வயதான நபர்கள் இயக்கம் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதனால் வீழ்ச்சி மற்றும் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

 நீங்கள் எப்படி உதவலாம்:

7.தளர்வான கம்பளங்கள், குப்பைகள் மற்றும் வழுக்கும் தரைகள் போன்ற தடுமாறும் அபாயங்களை நீக்குங்கள்.

8.குளியலறையிலும் படிக்கட்டுகளிலும் கிராப் பார்களை நிறுவவும்.

9.விழும் அபாயத்தைக் குறைக்க அனைத்து அறைகளிலும் போதுமான வெளிச்சத்தை உறுதி செய்யவும்.

ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும்.

 10.ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சமச்சீர் உணவு மற்றும் உடல் செயல்பாடு முக்கிய கூறுகளாகும். பல மூத்த குடிமக்களுக்கு பசியின்மை அல்லது உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது, இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

நீங்கள் எப்படி உதவலாம்

11. அவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சத்தான, சாப்பிட எளிதான உணவுகளைத் தயாரிக்கவும்.

12.நீர்ச்சத்தை ஊக்குவிக்கவும், அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும்.

13. நடைபயிற்சி, நீட்சி அல்லது பிசியோதெரபி அமர்வுகள் போன்ற லேசான உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும்.

 அவர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் மதிக்கவும்.

14. வயதானவர்களுக்கு உதவி தேவைப்படலாம் என்றாலும், அவர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் மதிப்பது முக்கியம். பல மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள், இது விரக்தி மற்றும் சோகத்திற்கு வழிவகுக்கும்.

 நீங்கள் எப்படி உதவலாம்:

 15.அவர்களின் பராமரிப்பு மற்றும் அன்றாட வழக்கங்கள் தொடர்பான முடிவெடுப்பதில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

 16.முடிந்தவரை எளிய வேலைகளை அவர்களாகவே செய்ய ஊக்குவிக்கவும்.

17.அவர்களை பொறுமையுடனும், கருணையுடனும்,மரியாதையுடனும் நடத்துங்கள்.

 முடிவுரை

 18.   வயதான அன்புக்குரியவரைப் பராமரிப்பது அன்பு, பொறுமை மற்றும் பக்தியின் செயல். இது மருத்துவ உதவியை வழங்குவதை விட அதிகம் - அது அவர்களைப் பாதுகாப்பாகவும், கேட்கப்பட்டதாகவும், அன்பாகவும் உணர வைப்பது பற்றியது. அவர்கள் வயதாகும்போது, ​​அவர்களின் தேவைகள் மாறுகின்றன, மேலும் அவர்களுக்குத் தகுதியான பராமரிப்பை வழங்குவதும், மாற்றியமைத்துக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது.

 வாழ்க வளமுடன்.!

வேலை !

  ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவரு...