உறவினர்களிடம் கடன் வாங்கி வீடு வாங்கலாமா?
வேண்டாம். அவ்வாறு வாங்கி வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ சில நேரத்தில் தவறாக முடிந்து விட வாய்ப்புள்ளது.
உங்கள் நிம்மதியும் தொலைந்து, அவமானத்தை யும் சந்திக்க வேண்டி வரலாம்.
எனக்கு தெரிந்த ஒருவர்
பழைய ஓட்டு வீட்டில் வசித்தார் அவர் பக்கத்தில் இருந்த காலி மனையில் வீடு கட்ட ஆரம்பித்தார். நானும் என் நண்பர்களும் அங்கதான் விளையாடி கொண்டிருப்போம்.
பார்த்து பார்த்து கட்டினார். மிக அழகான வீடு. குடிசையில் வாழும் எனக்கு அந்த வீடு பெரும் பிரம்மிப்பை தந்தது.
எல்லாம் முடிந்து வண்ணம் பூசி கொண்டிருக்கிறார்கள். பிரச்சனை ஆரம்பம் ஆனது. அப்போதுதான் தெரிகிறது பலரிடம் அவர் கடன் வாங்கி இருக்கிறார்.
பலர் வீட்டின் முன்னே சத்தம் போட ஆரம்பித்தனர். மிக அமைதியான அந்த ஆசிரியர் மிகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
பல அவமானங்கள். வேறு வழியில்லாமல் அந்த வீட்டை விற்க வேண்டி வந்தது. கடன்கார்ர்களின் பெரும் தொல்லையினாலும், மன வேதனையில் இருந்த்தாலும் உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலையினாலும் மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்ய நேரிட்டது.
எல்லோருக்கும் கடனை அடைத்தார். அவர் சேமிப்பையும் சேர்ந்து இழந்தார்.
கண்டிப்பாக அவர் மனதில் ஒரு திட்டத்துடனே கடன் வாங்கி இருப்பார். ஆனால் காலம் என்ன கணக்கு வைத்திருக்கும் என்று யாருக்கு தெரியும்.
நிகழ்காலத்தில் நாம் போடும் கணக்குகள் எல்லாம், எதிர்காலத்தில் சரியான விடையை அளிக்கும் என்று சொல்ல முடியாது.
கடன் வாங்கலாம். அது நம்மை படு குழியில் தள்ளி, ஏற முடியாத அளவிற்கு கடனாக இருக்கக்கூடாது. முட்டிகால் அளவுக்கு கடன் இருந்தால் எளிதாக ஏறிவிடலாம்.
இன்றும் அக்கட்டிடம் சாட்சியாக நிற்கிறது.
நான் வீடு கட்டும்போது ஒரு ரூபாய் கடன் இல்லாமல் தான் கட்டினேன். கடன் வாங்கி ஆடம்பரமாய் கட்டாமல் என் தேவைகளுக்கு ஏற்ப கட்டினேன். எவர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இல்லை எனக்கு.
வீட்டை கட்டிபார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள். நாம் எதிர்பார்க்கும் செலவுகளை தாண்டி செல்லும். நாம் தான் விழிப்போடு இருந்து கடன்களை தவிர்த்து, நம் விரல்களுக்கு ஏற்ற வீக்கத்தை பொறுத்து கடன் வாங்க வேண்டும்.
முழுதாக கடன் வாங்கி முழுகி விட கூடாது.
பணத்தை கடன் வாங்கியவர்👇
சிலர் அன்பை இழக்கின்றனர்...
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்...
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...
இது ஆடம்பர வீடு.....
No comments:
Post a Comment