Total Pageviews

Tuesday, December 30, 2025

சாந்தி முகூர்த்தம்னா என்ன? கவியரசர் என்ன ஒரு அழகான விளக்கம் கொடுத்துருக்காருன்னு பாருங்க..!

மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகிலுள்ள வாழ்க்கை பேறுகள் இந்துக்களால் 16 வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதே இந்துக்கள் 16 பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுது விட்டு விழுது விட்டு தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்.

ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படி தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பெயர்கள் அனைத்தையும் மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள். கணவனின் பெயரை மனைவி சொன்னால் கூட மரியாதையும் குறையும் மங்களமும் குறையும் என்று நம்பினார்கள்.

யாராவது ஒருவர் தும்மினால் பக்கத்தில் இருக்கிறவர் வாழ்க என்பார்கள். தும்மினேனாக வழுத்தினாள் என்றான் வள்ளுவன். தும்மும் போது சிலர் நூறு வயது என்பார்கள். பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும் போது சோறு இல்லை என்றால், இல்லை என்று சொல்லமாட்டார்கள். நிறைய இருக்கிறது நாளைக்கு வா என்பார்கள்.

தீபத்தை அணைக்கச் சொல்லும் போது அணையுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். வளர்த்து விடு என்பார்கள். வீட்டில் ஒருவர் இறந்து விட்டதை குறிக்கும் போது சிவலோகப் பதவி அடைந்தார்; பரலோக பிராப்தி அடைந்தார் என்பார்கள். பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதி ஆனாள் என்பார்கள். அதாவது பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது அதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை சாந்தி முகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம் ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது என்பது அதன் பொருள். இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்களமே நிறைந்திருக்கும். நான் சொல்லுவது சராசரி இந்துக்களை ஆத்திரக்காரர்கள் அமங்கலமாக பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்தது அல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை வாழ்வரசி என்பார்கள். பெரும்பாலான இந்து சமூகங்களில் கணவனை இழந்தவன் வெள்ளைச் சேலை அணிய வேண்டும் என்று விதி வகுத்து வைத்திருப்பது ஏன்? இவள் கணவனை இழந்தவள் என்று தனித்து காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் தூய்மையானவள் என்று குறிப்பதற்காகவும் ஆக மங்கள மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே!

அமங்கலங்கள் குறிக்கப்படும் போதெல்லாம் அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப் படுகின்றன. இந்த துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன இவற்றை நீ ஏற்றுக்கொள் எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடி பரிந்துரைப்பதன் நோக்கம்.

நன்றி: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்

No comments:

Post a Comment

பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது ஏன்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

  பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்ட...