பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றிஇ தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான தாத்பரியம் இதுதான்.
பெருமாள் கோவிலைப் பொருத்தவரையில் 3 முறையில் தீர்த்தம் வாங்க வேண்டும். இதைக் கேட்டும் வாங்கலாம். முதல் முறை தீர்த்தம் ப்ரதமம்இ காரீய சித்யர்த்தம் என்று பெயர். நம் செயல்களில் வெற்றி பெற வேண்டி இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை தவிதீயம். தர்மஸ்தாபனம் என்கிறார்கள். நாம் வாழ்க்கையில் தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. மூன்றாம் முறை தீர்த்தத்தை சத்ரிதீயம் சமோஷ ப்ரோக்தம். அதாவது குணார்னவம் என்கிறார்கள்.
மெய்ப்பொருளான பகவானை உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. மூன்று முறையும் பருக வேண்டும். தலையில் தடவ கூடாது. கண்ணிலும் ஒத்திக் கொள்ளக் கூடாது. அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியிலோ வாங்க வேண்டும். பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும். கீழே சிந்தாமல் இருக்க வேண்டும். பருகியதும் நாராயணா என்று 3 முறை சொல்ல வேண்டும்.
கோவிலுக்குச் சென்றால் அங்கு போய் முறையாக எப்படி சாமி கும்பிடுவது, வலம் வருவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரகாரம் சுற்றும்போது எதை எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். சாமி கும்பிட்டதும் என்ன செய்ய வேண்டும்? என நம் முன்னோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஒழுக்க நெறிகள் இருக்கும். அதைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக லுங்கி அணிந்து செல்லக்கூடாது. சில கோவில்களில் சூடம் ஏற்றக்கூடாது என்று ஒரு நியதி இருக்கும். அதைக் கடைபிடிக்க வேண்டும்.
சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?
சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனைஇ தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என சரணடைந்து விடுகிறோம். அதுவரை நாத்திகராக இருப்பவர்கள் கூட இதுபோன்ற ஒரு கட்டத்தில் இத்தனை நாளும் நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்டவா. என்னை மன்னிச்சிக்கோன்னு இறைவனிடம் சரணாகதி அடைவதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒரு நேரத்தில்தான் நாம் சரணாகதி அடைய வேண்டுமா? நாம் தினம் தினம் நம்மையே அறியாமல் சரணாகதி அடைகிறோம்.
No comments:
Post a Comment