Total Pageviews

Tuesday, January 31, 2012

மின்சாரத்தை சேமிப்போம்



தினமும் பல மணி நேர மின்வெட்டை சந்திக்கும் நாம் சிந்தித்தால் மின்சாரத்தை நிச்சயமாக சேமிக்க இயலும். மின்சாரப் பற்றாக்குறை நம் நாட்டை பலமாக உலுக்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலம் என்னவாகும்? ஒரு குடிமகனாய் நம்மால் முடிந்ததை நாட்டிற்காக செய்வோமே.......

Ø வீடுகளில் CFL பல்பை பயன்படுத்தவும்.
...
Ø பயனற்ற இடங்களில் பல்பை எரியூட்டாதீர்.

Ø தொலைக்காட்சி, கணினி போன்ற மின்சாதனங்களை வேலை முடிந்தவுடன் அனைத்துவிடவும்.

Ø மொபைல் சார்ஜ் ஏற்றிய பின் சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை கழட்டி வையுங்கள்.

Ø மின்சாதனங்களை வாங்கும் போதே அரசின் மின்சிக்கன நட்சத்திரங்களை பார்த்து வாங்கவும்.

Ø வீட்டை விட்டு வெளியில் அல்லது வெளியூர் செல்லும்போது வீட்டின் மைய இணைப்பை நிறுத்தி செல்லவும்.

முடிந்தவரை எளிமையாய் வாழக் கற்றுக்கொண்டாளே போதும் நம்மால் உலகை வளப்படுத்திட முடியும்


நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

PAN கார்டு பெறுவது எப்படி?



PAN - Permanent Account Number.

பான் கார்டு என்பது இந்திய மக்களுக்கு அளிக்கபடும் நிலையான எண் அடங்கிய அடையாள அட்டை.வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கு இந்த பான் கார்டு மிக அவசியம்.பான் கார்டு இருந்தால் மட்டுமே பங்குச்சந்தை மட்டும் வங்கிகளில்.ரொக்க பணம் வைப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய இயலும்.

பான் கார்டு பெற்றுத் தருவதாக சொல்லி பல நபர்கள் பல நூறு ரூபாய்களை செலவழிக்கின்றனர். அனால் அதன் உண்மைநிலை வேறு. உண்மையில் பான் கார்டு பெற தற்போது அரசு விதிகளின் படி வெறும் 110 ரூபாய் மட்டுமே ஆகிறது. பான் கார்டை பெற விரும்புவோர் வங்கிகள் அல்லது பங்குசந்தை அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெற பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் - படிவம் எண் 49A.



நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

 

வணக்கம்"


ஆங்கிலம் நம்மை எவ்வளவு அதிக்கதிற்கு ஆட்படுத்தியிருக்கிறது என்பதை சிறு தொலைப்பேசி உரையாடல் உணர்த்திவிடும். தொலைபேசியை எடுத்த உடனே நாம் முதலில் பயன்படுத்தும் வார்த்தை HELLO என்ற வேற்று மொழி வார்த்தையை தான். நம் தமிழில் அழகான "வணக்கம்" என்ற வார்த்தை இருப்பதை ஏன் நாம் மறந்து விடுகிறோம்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

தமிழக மாவட்டங்களின் இணையதளங்கள்


தமிழக மாவட்டங்கள் அனைத்தின் இணைய முகவரியையும் தேசிய தகவல் மையம் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. உங்கள் மாவட்டம் எதுவாய் இருந்தாலும் இனி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இருந்த இடத்தில இருந்தே உங்கள் மாவட்டங்களின் நிலையை
கண்காணிக்கலாம்.
http://www.tn.nic.in/tnhome/tndis.html
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.
 
திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
 

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற



இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். ...அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.


PNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:

இணையத்தின் மூலம் பதிவு :

1) முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.
2) தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
3) அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில் sms ஆக வந்து சேரும்.

இணையவசதி அற்றோர் தங்களது மொபைல் மூலமாக எப்படி இந்த வசதியைப் பெறுவது:

Ø மொபைலில் MYPNR என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பின் தங்களது பத்து இலக்க PNR Number ஐ டைப் செய்து இந்த குறுந்தகவலை
92200 92200 என்ற எண்ணிற்கு அணுப்பவும்.
எடுத்துக்காட்டு MYPNR0123456789 to 9220092200.

இனி டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு நீங்கள் அதனை பின்தொடர வேண்டாம் இனி நிலவரங்கள் உங்களை பின்தொடரும் நீங்கள் நிம்மதியாக இருங்கள்.

இந்த சேவை முற்றிலும் இலவசமானது .

http://mypnrstatus.com/

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.
 

Friday, January 27, 2012

இந்திய கனவு


 
தட்டுப்பாடில்லா தண்ணீர்

கலப்படமில்லா உணவு

மாசில்லாக் காற்று

சுகாதாரமான சூழ்நிலை

விபத்தில்லா பயணம்

மதவெறியற்ற மக்கள்

சிதைவில்லா கோவில்கள்

லஞ்சமில்லா அலுவகங்கள்

ஊழலில்லா அரசியல்

நேர்மையான தலைவர்கள்

கலவரமில்லா வீதிகள்

தாதாக்கள் இல்லாத நகரங்கள்

இன்னும் நீள்கிறது கனவுப் பட்டியல்

விடிவு மட்டும்தான் இல்லை
.
...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.
 

கணவரை மகாராஜாவைப் போல மதியுங்கள்


தம்பதியர் இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய கால கட்டத்தில் இருவரும் இணைந்து இருக்கும் நேரங்கள் குறைவு
 
அவர்களின் புரிதலின்மையினால் சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விரிசல் உருவாகின்றன
 
மகாராஜாவைப் போல மதியுங்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நமக்கான மதிப்பும் மதிக்காத இடத்தை ஒதுக்கலாம் சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம்
 
தோற்றுப் போவது நல்லது வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள் நீங்களே முதல் தோழி உங்களவரை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
 
அக்கறை அவசியம் உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள்
 
ஒப்பிட தேவையில்லை உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம்
 
நிதி மந்திரியாகுங்கள் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்
 
மறதி நல்லதிற்கே உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார்
 
நீங்களே தொடங்குங்கள்
 
கணவன்தான் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள்
 
தன்னையே ரசிக்கலாம் உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்
 
சந்தோச கூடாரம் 

வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள்."ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்"என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.
.

 உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள்இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.


 இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன்.ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

 மறந்து விடுங்கள்.
 ஆடம்பரம் வேண்டாம். உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை.

இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

 ஒருவர் போல் மற்றவர் இருக்கமுடியாது. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!
எனவே கணவரை உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட தப்பித்தவறி ஒப்பிட்டு பேச வேண்டாம்.
இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள்.
 நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்

நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
 அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.
மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பது சராசரி மனித மனத்தின் எதிர்பார்ப்பு.
 அதிலும் இல்லத்தரசியிடம் கிடைக்கும் மதிப்புதான் கணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அவார்டு.
எனவே கணவரை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம்
ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். அப்புறம் பாருங்கள் இந்த மகாராணியை கேட்காமல் மகாராஜா ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார்.
 இதற்கு காரணம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்தாததுதான் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்
இல்லத்தரசிகள் சின்னச்சின்ன வழிகளை கையாண்டு கணவரிடம் அன்பை வெளிப்படுத்தினாலே வாழ்க்கை வசந்தமாகும் என்கின்றனர் அவர்கள். இருவரிடையே பிணைப்பை அதிகரிக்கும்,
 உற்சாக ஐடியாக்களை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.
 வீட்டிற்குள் என்னதான் தம்பதியர் மனமொத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதல் அரிதாகிவருகிறது!
 தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும்.நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள்

உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.. இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று..பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள்.நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம்.. 

கணவனின் வரவுக்குள் செலவு ! .. . 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவருடைய நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த தோழியாக நீங்கள் மாறிவிடுவீர்கள்., சந்தேகங்கள் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது. உடனுக்குடன் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுவது இருவருக்குமே நல்லது.. ., .. அந்த சில மணி நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.
 

Monday, January 23, 2012

நடைமுறை நாகரீகம்

   

நடைமுறை நாகரீகம் என்பது பொது இடங்களிலும் விருந்தினர்களிடமும் பிறர் முன்னிலையிலும் நாம் நடந்து கொள்ளும் முறையாகும். நடைமுறை நாகரீகம் தெரியாமல் நாம் ஏடாகூடமாக நடந்து அசடு வழிவதைத் தவிர்க்க ஒரு சில யோசனைகளை தெரிந்து கொள்வோம். 


மற்றவர்கள் முன் பொது இடத்தில் உரக்கப் பேசுவது, நாகரீகம் அல்ல. மற்றவர் பார்வை நம் மேல் பதியும்படி உரக்கச்சிரிப்பதும் நல்லதல்ல.
நமக்குத் தெரிந்ததையே பேசிக்கொண்டு, மற்றவர்களின் வாயை அடைக்க நினைப்பதும், நமது பிரச்சினைகளையே சொல்லிச் சொல்லி புலம்புவதும் பிறருக்கு விருப்பமில்லாத ஆர்வமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

விருந்தினர் முன்னிலையில் நாம் இரகசியம் பேசுவதைப்போல் வீட்டாரோடு காதோடு காதாக பேசுவது தவறு.... அப்படி மிகவும் முக்கியமாக பேச வேண்டியது இருந்தால் தனியே போய் பேசுவதே நலம்.
நாம் விருந்தினராக செல்லும் இடத்தில் நமது வீட்டையும், அவர்கள் வீட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதல்ல. அதிலும், ‘எங்கள் வீடு உசந்தது’ என்ற ரீதியில் பேசுவது அநாகரீகம்.

பொது இடத்தில் பல் குத்துவது, காது குடைவது, குறும்பு செய்வது தவறானது. 

தும்மல் வந்தால் முகத்தைத் திருப்பி தும்முதல் நலம். பொது இடத்தில் நடைபெறும் விருந்துகளில் அரக்க பரக்க உண்ணக்கூடாது. நிதானமாய், சத்தம் வராமல் நாகரீகமாய் சாப்பிட வேண்டும். 

தண்ணீர், குளிர்பானங்களை “மடக் மடக்” என ஒலி வரும் வகையில் குடிக்கக்கூடாது. பெண்கள் அதிக நகை அணியாமல் வெளியில் வருவது நல்லது. தூய்மையாக உடை அணிவதும் எளிய அலங்காரமும் போதும். இவை மற்றவர்களின் முன்னிலையில் உங்கள் மதிப்பை உயர்த்தும்.

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...