Total Pageviews

Sunday, July 15, 2012

காருக்கு தேவையான 5 அணிகலன்கள் !


காரில் செல்லும்போது சொகுசான பயணத்திற்கும், கூடுதல் வசதிகளுக்கும் சில ஆக்சஸெரீஸ்கள் பெரிதும் உபயோகரமாக இருக்கின்றன. மார்க்கெட்டில் ஏராளமாக குவித்து கிடக்கும் ஆக்சஸெரீஸ்களில் சில முக்கியமான அணிகலன்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஆஷ்ரிட் கார் ரியர் வியூ மிரர் மற்றும் டிஸ்ப்ளே:

காரை ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் இருக்கும் பொருட்களை துல்லியமாக கவனிக்க முடியாது. இதனால், விபத்துக்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் ரிவர்ஸ் கேமராவுக்கான டிஸ்ப்ளே ஸ்கிரீன் தனியாக கிடைக்கிறது.

ஆஷ்ரிட் நிறுவனம் விற்பனை செய்யும் டிஸ்ப்ளே ஸ்கிரீன் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது. மேலும், யுஎஸ்பி போர்ட் இருப்பதால் பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும். இந்த சாதனம் ரூ.6,000 விலையில் கிடைக்கிறது.

கார் ரோலர் சன் ஷேட்:

காரில் கருப்பு கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கார் ரோலர் சன் ஷேட் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். காரில் அமர்ந்திருக்கும்போது வெயிலின் தாக்கத்தையும், அதிகப்படியான வெளிச்சம் வருவதையும் இந்த கார் ரோலர் சன் ஷேட் வெகுவாக தடுக்கும்.

சாதாரண துணி ஸ்கிரீன் போல இருக்கும் இந்த ரோலர் சன் ஷேடை தேவையில்லாத சமயங்களில் சுருள் போல சுருட்டிக் வைத்துக் கொள்ள முடியும். தேவையென்றால் மட்டுமே அதிலிருக்கும் கொக்கியை இழுத்து கண்ணாடியை மறைத்து மாட்டிக் கொள்லலாம். இந்த கார் ரோலர் ஷட்டர் ரூ.300 விலையில் கிடைக்கிறது.

ஆன்ட்டி ஸ்லிப் டேஷ் போர்டு மேட்:

டேஷ் போர்டில் மொபைல்போன், சாவி கொத்து, நாணயங்கள் ஆகியவை வைக்கும்போது சில சமயங்களி்ல் தவறி கீழே வந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆன்ட்டி ஸ்லிப் டேஷ்போர்டு மேட்டை வாங்கி டேஷ் போர்ட்டில் வைத்து அதன் மீது மொபைல்போன் மற்றும் இதர பொருட்களை வைக்கும்போது அதிக கிரிப்புடன் இருக்கும். கீழே வழுக்கிக் கொண்டு வந்து விழாது. ரூ.200 விலையில் இதை வாங்கலாம்.

கார் கம்போர்ட் கிட்(பியேஜ்):

பியேஜ் வண்ணம் இன்டிரியர் கொண்ட கார்களுக்கான கிட் இது. இதில், இரண்டு சிறிய தலையணைகள், கழுத்துப் பகுதியில் வைத்துக் கொள்வதற்கான குட்டி குஷன் தலையணைகள் மற்றும் டிஸ்யூ பாக்ஸ் ஆகியவை சேர்ந்து பியேஜ் வண்ணத்திலேயே கிடைக்கிறது. இதனால், உங்கள் காரின் உட்புறத்தின் சொகுசான தோற்றம் அதிகரிப்பதோடு, பயணத்தின்போது மிகவும் பயன்படும். இந்த கிட் ரூ.1,000 விலையில் கிடைக்கிறது.

கிராண்டி கார் பெர்ப்யூம்:

காருக்குள் நறுமணம் கமழச் செய்யும் வாசனை திரவியம்தான் இது. இதை காரின் டேஷ் போர்டு மேலே வைத்துக் கொள்ள முடியும். காருக்குள் எந்த நேரமும் இந்த வாசனை திரவிய புட்டி நறுமணத்தை பரப்பிக் கொண்டே இருக்கும். இது ரூ.350 விலையில் கிடைக்கிறது.

Thanks to Drivespark one india tamil.com 

எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.

 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...