Total Pageviews

Friday, July 27, 2012

இலஞ்சம் குறைய கடும் நடவடிக்கை தேவை !



இங்கு அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இலஞ்ச  லாவண்யங்கள்  அதிகமாக உள்ள துறைகள்          
        
1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகாரவர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

 குறைப்பதற்க்கான வழி முறைகள்

1 முதல்வர், சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.

Thanks to  R. Natarajan

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...