Total Pageviews

Sunday, November 6, 2016

பானை வயிறு தட்டையாக என்ன செய்யவேண்டும்?

பானை வயிறு தட்டையாக என்ன செய்யவேண்டும்?

சிலரது வயிறைக் கவனித்திருக்கிறீர்களா? 

அவர்களது வயிறு பானை போன்று வீங்கிக் காணப்படும்.இது அவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தையும்  ஏற்படுத்தும். இந்தப் பானை வயிறு பிரச்னையால்,உலகில் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.



சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதாலும் ஏற்படும். ஆனால் இந்த வயிறு வீக்கம் ஒருவருக்கு அடிக்கடி ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கிறது செய்தி ஒன்று.



அப்படி பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு சில டிப்ஸ்களையும் அந்தச் செய்தி கொடுத்திருக்கிறது.அது என்னவென்று பார்க்கலாமா?



அதிகப்படியான உப்பு , உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, உடலில் உப்பு மற்றும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி, அதன் காரணமாக வயிற்றை வீக்கத்துடன் வெளிக்காட்டும்.


எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட், உப்புமிக்க ஸ்நாக்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு அதை வருவதை உடனே நிறுத்துங்கள்.



தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக குடிக்கிறோமோ, அந்த அளவில் செல்களில் தேங்கியுள்ள நீர்மம் வெளியேற்றப்படும்.


இப்படி நீர்மம் வெளியேற்றப்பட்டால், தட்டையான வயிற்றை எளிதில் பெறலாம். எனவே உங்களுக்கு வயிறு வீங்கி இருப்பது போல் உணர்ந்தால், சில டம்ளர் நீரைப் பருகுங்கள்.



நீங்கள் எந்நேரமும் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அதிகப்படியான காற்றினை விழுங்கக்கூடும். இதன் காரணமாக வயிறு உப்புசத்துடன், காற்று ஊதிய பலூன் போன்று எப்போதும் வீங்கி இருக்கும். எனவே சூயிங்கம் மெல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.



கார்போனேட் பானங்களை அதிகம் பருகினாலும், வயிறு வீங்கி காணப்படும். எனவே சோடா பானங்களை அதிகம்குடிப்பவராக இருந்தால், , உடனே அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.


செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருட்களை உட்கொண்டாலும், அது தீவிரமான இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதனாலும் வயிறு வீங்கலாம்.


ஆகவே உணவில் இனிப்பு சுவை வேண்டுமானால், சர்க்கரைக்கு பதிலாக தேன் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

1 comment:

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...