Total Pageviews

Friday, March 29, 2019

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது ?????????

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கிளைமேட்டிற்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே  அல்லர்ஜி. ஒரு பூ கிட்ட வந்தாலே அவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப் படுவார். அதனால் ரோஜா மலர்களே அருகில் வராதபடி பார்த்துக் கொள்வார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்ய போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்
து ருந்தார்கள்.

'ஒரு பூ கிட்டே வந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப்ப போகிறோம்' என்று பயந்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில சென்று அமர்ந்தார். பூக்களை பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மல் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னால் இருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறார். அவர் சொன்னார் "இந்த பூக்களை பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள்.

இவர் யோசித்தார் "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..? இப்படி நினைத்த மறு வினாடியே அவருடைய அலர்ஜிக்கு
ண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

இது தான் நமது மனம்.

இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும், குணப்படுத்த வும் முடியும்.

இந்த மனதால் நமக்கு பிரச்னையை உருவாக்கவும் முடியும், அதற்கு தீர்வையும் தர முடியும்.

எனவே, நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...