Total Pageviews

Friday, March 29, 2019

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்.

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன் பின் அதை எப்படிச் செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் அவன் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்குவான். அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெறுவான். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான் அவன் கவனம் இருக்கும்.

ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய புகழ்பெற்ற விஞ்ஞானி வான்பிரான். அவர் ராக்கெட் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதாவது, ராக்கெட்டின் நுனியில் வெடிமருந்து குண்டை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியும். 360, 450 கி.மீ., தொலைவிற்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்து கொண்டிருந்தனர். அதில் தான் ஈடுபட்டிருந்தார் வான்பிரான்.

பல ராக்கெட்டுகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு விண்வெளியில் செல்கிறது. நாம் ஏன் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டை அனுப்பக் கூடாது? " என்று எண்ணினார். இப்படித் தான் ஒன்றிலிருந்து ஒன்றாக மனித மனதில் எண்ணங்கள் புறப்படுகின்றன. எண்ணங்கள் வேர் விடவும், வலிமை பெறவும் சில நாட்கள் ஆகின்றன. அதன் பின் இது நிஜமாக நிகழ்கிறது; செயல் வடிவம் பெறுகிறது.

தன்னம்பிக்கை உள்ளவன், ஏன் அப்படி - நாம் நினைக்கிறபடி செய்து பார்க்கக் கூடாது என்று எண்ணுகிறான். அதையே இரவு, பகலாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதன் விளைவாக தெளிவு பிறக்கிறது; அதைச் செய்து முடிக்கிறான்.

நமது திருமந்திர நூலில் ஓர் இடத்தில், " தத்துவமசி " என்ற வார்த்தை வருகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். அசி என்றால், ஆகிறாய் என்று பொருள்படும். அதாவது, " நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்! " என்பது பொருள். இன்று நாம் எண்ணுகிறோம். அதே நினைவாக இருக்கும் போது அதை செய்து முடிக்கிறோம். தன்னம்பிக்கை தான் இதன் மூலம். அது தான் நம்மை எண்ணங்களிலிருந்து, செயல்வரை அழைத்துச் செல்கிறது.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...