Total Pageviews

Sunday, March 8, 2020

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

கொரானாவை விரட்டும் மூலிகைகள் !

சைனா வின் சீதோஷ்ண நிலை வேறு, நம் நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. சைனா போல் லாம் நம் நாட்டில் கொரானா வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் பலர் சொல்கிறார்கள். சைனா, பிரான்ஸ் போல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த ஒரு சிலருக்கு  மட்டுமே இந்த நோய் இருக்கு. சாதாரண சளி, தும்மல் ஆகியவை வந்தாலே கொரானா வைரஸா என்று  பயந்து விடவேண்டாம்.

ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

ஒரு பாலைவனம் அந்த பாலைவனத்தில் ஒரு ஞானி கண்களை மூடி அமர்ந்தவாறு தியானத்தில் இருந்தார். அப்பொழுது புதிதாக உருவான  ஒரு  அபாயகரமான வைரஸ் கிருமி அவரை கடந்து சென்று கொண்டிருந்ததது. தியானத்தில் இருந்து கண் விழித்த அந்த ஞானி ஏ கிருமியே எங்கே செல்கிறாய் என்று கேட்க  இயற்கை நியதிப்படி ஆயிரம் உயிர்களை காவு  வாங்க நான் பக்கத்து நாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்  என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு அந்த கிருமி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. வந்த வேலையை கச்சிதமாக முடித்த அந்த கிருமி மீண்டும் வந்த அதே வழியில் திரும்பி கொண்டிருந்தது. அப்ப அதே ஞானி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார்.

ஆயிரம் பேரை காவு வாங்க போறேன் ன்னு சொன்ன  ஆனால் 20 ஆயிரம் உயிர்களை கொன்று இருக்கிறாயே  என்று  அவர் கேட்க அதற்கு அந்த கிருமி ஞானியிடம் என்ன பதில் சொன்னது தெரியுமா?

இயற்கை நியதிப்படி நான் கொன்றது ஆயிரம் பேரை தான். ஆனால் பயத்தால் செயற்கையாக செத்தவர்கள்  கூடுதலாக 19 ஆயிரம் பேர். ஆகமொத்தம் 20 ஆயிரம் பேர்.

இந்த பேய் னு ஒன்னு இருக்கோ, இல்லையோ இருக்கு னு ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டாலும். யாரிடம்  அதிக  பயம் இருக்கோ அந்த பயம் இருப்பவர்களை தான் பேய், பிசாசு, நோய் கிருமி அனைத்தும் முதலில் தாக்கும். இருக்கும் கிருமிகளில் மிக, மிக அபாயகரமானது பயம் தான். உங்களின் அந்த பயத்தை முதலில் கொல்லுங்கள்.

விழிப்புணர்வு தேவை தான். அதே சமயம் இந்த உலகில் பிறந்த அணைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். மரணம் நமக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். துணிந்தவனுக்கு ஒருமுறை  மட்டுமே மரணம். பயந்தவனக்கு தினம், தினம் மரணம்.

பயத்தால் தினம், தினம் செத்து பிழைக்கும் ஒரு பிழைப்பு உனக்கு தேவையா? என்று பயம் இருப்பவர்கள் தங்களை தாங்களே இதுபோல் கேட்டு கொள்ளுங்கள். அதாவது ஆட்டோ சஜ்ஜஷன்.

கொரானா போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை காக்கும் அருமருந்துகள், மூலிகைகள் சிலவற்றை இப்பதிவில் கீழே  தந்துள்ளேன். இப்பதிவில் குறிப்பிட்டிருக்கும்  மூலிகைகளை அளவாக தினமும் உண்டு வந்தால்  அது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு  சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

1] கற்பூரவல்லி [ Oregano ]

2] தழுதாழை என்கிற வாதமடக்கி இதற்கு முனிவர் மூலிகை என்றும் பெயர் உண்டு  இதன் ஆங்கில பெயர்  [Sage]

3] திருநீற்றுப்பசிலை எனும் [ Basil ]

4]  அனைவர்க்கும் தெரிந்த வில்வம் எனும் [ Bael ] 

வில்வ இலைகள் சிவபெருமானுக்கு உகந்தது. வில்வ மரம் மூலம்  கிடைக்கும் காய், பழம், பட்டை, இலை, பூ என அனைத்தும் மகத்தான மருத்துவ குணங்கள்  வாய்ந்தது.  வில்வப்பூவை தண்ணீரில் போட்டு லேசான சூட்டில் கொதிக்க வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்தாலே  போதும். நம் உடலில் உள்ள விஷத்தை கூட முறிக்கும் ஆற்றல் வில்வப்பூவிற்கு உண்டு.

5] புதினா எனும் மின்ட்.

கற்பூரவல்லி, தழுதாழை கூட புதினா குடும்பத்தை சேர்ந்த மூலிகைகள் தான்.

தினமும் காலை இட்லி, தோசை போன்ற  உணவுகளை உட்கொள்ளும் பொழுது கொஞ்சம் புதினா  சட்னியை, புதினா தொகையலை சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் நாக்கு ருசிக்கு ஏற்றவாறு வெங்காய சட்னி, சாம்பார் போல் ஏதேனும் தனியாக ஒரு சைடிஷ் இருக்கட்டும். உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, ரத்தத்தை சுத்தப்படுத்த  தினமும்   புதினா கூடுதலாக இருக்கட்டும்.

புதினா சட்னி செய்வதும் எளிது.

இதைதவிர்த்து கீரைகளில் வள்ளலாரால் தெய்வீக மூலிகை என்று அழைக்கப்பட்ட  கரிசலாங்கண்ணி கீரை  மற்றும்  முடக்கத்தான் கீரை இரண்டும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.

மிக முக்கியமாக  நான் மீண்டும்  சொல்கிறேன். பயத்தை காட்டிலும் மோசமான ஒரு நோய்  உலகில் வேறு எதுவும் இல்லை. நம்பள ஏதாவது நோய் தாக்கி விடுமோ என பயந்து, பயந்து முகமூடியோடு சுற்றுபவர்களை தான்  நோய் கிருமிகள் முதலில் தாக்கும். மண்ணில் உருண்டு, பிரண்டு விளையாடும் குழந்தைகளுக்கு  இம்யூனிட்டி  யும் டெவலப் ஆகும், கம்யூனிட்டியும் டெவலப் ஆகும்.

அதனால் உங்களிடம் இருக்கும் பயம் எனும் கிருமியை முதலில் கொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...