Total Pageviews

Saturday, April 23, 2022

தலையில் பேன் வருவதற்கான காரணமும், தீர்வும்...

பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.

பேன்பேன் தொல்லையிலிருந்து மீள வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும்.

துளசி இலை

துளசி இலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் இறந்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

100 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் வேப்பம்பூவை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

குப்பை மேனி கீரை

பேன் தொல்லைப் போக்குவதில் குப்பை மேனி கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை எடுத்து சாறு எடுத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.

வெங்காயச் சாறு

தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்துவிடும்.

கருவேப்பிலை

தேங்காய் எண்ணையை காய்ச்சி, அதில் நிழலில் உலர்த்தி காய்ந்த கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வந்தால்பேன் வரவே வராது.

வசம்பு

வசம்பை அரைத்து தலையில் தடவி, பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்!

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...