Total Pageviews

Tuesday, June 7, 2022

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க !

நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 பாஸ்வேர்ட்டில் எச்சரிக்கை:

நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மிக எளிதாக வைத்திருந்தால் ஹேக்கர்கள் எளிதில் உங்கள் ஆன்லைன் பேங்கிங்கை அணுகலாம். மிகவும் வீக்கான பாஸ்வேர்டுகளுக்கு உதாரணமாக, password, qwerty, 123456 போன்றவற்றைக் கூறலாம். இதனைத் தவிர உங்களின் மொபைல் எண் மற்றும் பிறந்த நாள் உள்ளிட்டவையும் உள்ளது. எனவே உங்களின் பாஸ்வேர்ட் தனித்துவமான மற்றும் யாரும் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் இருப்பது நல்லது. யாரிடமும் பாஸ்வேர்டை ஷேர் செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது:

உங்களின் தனிப்பட்ட விவரங்கள், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்பின் தெரியாதவர்களிடம் பகிரக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் பணத்திற்கு ஆபத்து. பிறந்த தேதி, திருமண தேதி, குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் கையெழுத்து போன்ற உங்களின் விவரங்களைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் நெட் பேங்கிங் லாகின் செய்து அக்கவுண்டில் உள்ள பணத்தை திருட நேரிடும். அதனைப் போலவே மொபைலுக்கு வரும் ஓடிபி யாரிடமும் பகிர கூடாது. எந்த விவரங்களையும் தரவேண்டாம்.

வங்கியின் பாதுகாப்பு ஆலோசனைகள்:

வழக்கமாக உங்கள் வங்கிகள் இ-மெயில் மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலம் தகுந்த பாதுகாப்பு ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிவருகின்றன. மோசடிகளை தவிர்த்து வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கப்படுகிறது. எனவே அதனை கவனமாக பின்பற்றுங்கள்.

பேங்க் ஸ்டேட்மெண்ட், மெசேஜ்களை செக் செய்தல்:

வங்கிகள் பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலமாக தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். அதனால் உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் மெசேஜ்களை தவறாமல் செக் செய்வது நல்லது.

பாதுகாப்பான நெட்வொர்க்கில் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துதல்:

ஹோட்டல்கள்,உணவகங்கள் போன்ற பொது நெட்வொர்க்கில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் அவசரத்திற்கு பொது நெட்வொர்க்கை பயன்படுத்தி பேங்க் அக்கவுண்ட் நீங்கள் அணுகினால், பாதுகாப்பான நெட்வொர்க்கை பெற்றவுடன் உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடுவது நல்லது.

செக்புக் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துதல்:

உங்களது செக் புக்கை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் உங்கள் கார்டு பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் pos மெஷினை பயன்படுத்தும் போது ஏதேனும் அசாதாரண இணைப்புகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வங்கிப் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...