Total Pageviews

Tuesday, May 28, 2024

வங்கியில் செக் பவுன்ஸ் ஆகிவிட்டதா? கவலையை விடுங்க! கொடுத்த கடனை திரும்ப பெற ஈஸி வழி இருக்கு!

 

செக் பவுன்ஸ் ஆகிவிட்டால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 chennai bank cheque
கடன் அன்பை முறிக்கும் என பல இடங்களில் எழுதி வைத்திருப்பார்கள். தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். அது போல் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கினால் பிறகு பாசமும் நட்பும் போய்விடும் என்பார்கள். 
 
 பணத்திற்காக எத்தனையோ வீடுகளில் சண்டை நடந்துள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறில் எத்தனையோ கொலைகளும் அடிதடிகளும் நட்பில் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. அது போல் பணம் பத்தும் செய்யும் என்பார்கள். 
 
பணத்தை பார்த்தால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். எனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சரியாக இருந்தால் மட்டுமே நட்போ குடும்ப உறவோ மேலும் தழைக்கும். இல்லாவிட்டால் சிக்கல்தான்
 
நண்பர் ஒருவர் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதாம். இதற்காக அந்த நபர் செக் எனப்படும் காசோலையாக கொடுத்தாராம். அந்த செக்கை வங்கியில் கொடுத்து பணத்தை எடுக்க முயன்ற போது வங்கியில் பணம் இல்லை என கூறி அந்த செக் மீண்டும் தனக்கே வந்துவிட்டது. அதாவது செக் பவுன்ஸாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்
 
நீங்கள் கொடுக்கும் செக் பவுன்ஸ் ஆகிவிட்டால், அதை திருப்பி கொடுக்கும் போது அதனுடன் ஒரு மெமோவை அனுப்பியிருப்பார்கள். அந்த மெமோவையும் அந்த நபர் கொடுத்த செக்கையும் வைத்து வக்கீல் நோட்டீஸை அனுப்பலாம். அந்த நோட்டீஸை பார்த்துவிட்டு 15 நாட்களுக்குள் பணம் கொடுத்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் வக்கீல் நோட்டீஸை அனுப்பியும் அந்த நபர் பணத்தை செட்டில் செய்யவில்லை என்றால் அந்த செக், அந்த மெமோ, ஸ்பீட் போஸ்ட் செய்த ரசீது, வக்கீல் நோட்டீஸ் ஆகிய நான்கையும் வைத்துக் கொண்டு கோர்ட்டில் கேஸ் போடலாம். அப்படி கேஸை பதிவு செய்தால் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர் கொடுக்க வேண்டிய பணத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். செக் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
ஒரு சிலர் பணத்தை கடனாக வாங்கிவிட்டு பத்திரமாக திருப்பி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பட்டை நாமத்தை குழைத்து போடுபவர்களும் இருக்கிறார்கள்.
 
கொடுத்த கடனை கேட்டு நடையாய் நடப்பதால் அந்த நேரத்தில் அவர்களின் வாயை அடைக்க வங்கிக் கணக்கில் பணமே இல்லாத அக்கவுன்ட்டில் இருந்து செக்கை கொடுப்பார்கள். அதை நாம் வாங்கிக் கொண்டு வங்கியில் கொடுத்தால் பணம் இல்லை என கூறி பவுன்ஸ் ஆகிவிடும். இது போன்ற நேரங்களில்தான் நாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Thanks to One india tamil !

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...