Total Pageviews

Thursday, February 20, 2025

வாழ்க்கை!

 


எவரது துணையும் இல்லாமல் தனியாக நீ
நடந்து போகும் பாதைகள் தான் உன்    உன்னில் எந்தளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறது என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டும்...!!!

ஆயிரம் பேரை கூட எதிர்த்து நில்...!
ஆனால் எப்போதும் ஒருவரை கூட எதிர்பார்த்து நிற்காதே...!

நீ எப்போதும் நீயாகவே இரு...!  உனக்கான தனித்துவம் தான் உனது
அடையாளம்...!!!

எல்லோருக்கும் பிடிக்கும்படி சுயமரியாதை இழந்து வாழ்வதை விட  சிலருக்கு மட்டுமே பிடித்தாலும் திமிர் கலந்த தன்மானத்துடன்
வாழ்வதே மேல்...!

எத்தனை முறை விழுந்தாலும் துணிவே
துணை என்று எழுந்து
நிற்போம். விழுவதும் எழுவதும் நமக்கு புதிதல்ல. எண்ணங்கள்
எளிமையாக இருந்தாலும் செயல்கள்
வலிமையாக இருக்கும்...!!!

தன்னம்பிக்கையோடு
இருங்கள்... எதையும் ஒரு கை பார்த்து கொள்ளலாம்...
தனக்குள் தன்னம்பிக்கையை
விதைத்தவன் என்றுமே தோற்று போக மாட்டான்...!!!

இறுக்கமான சூழலை
எதிர்கொண்டு எல்லாமே
உங்களுக்கு எதிராக இருந்தாலும்...
இன்னும் ஒரு நிமிடமும்
நீடிக்க முடியாது என்று தோன்றினால் கூட, கைவிட்டு விடாதீர்கள்...
ஏனெனில் அந்த இடத்தில்... அந்த நேரத்தில் தான், வாழ்வு
திசை திருப்பும்...!!!

நாம் இன்று எதையெல்லாம் அவசியம் தேவை என்று பிடிவாதம் பிடிக்கிறோமோ, ஒரு நாள் அவற்றை எல்லாம் வேண்டவே வேண்டாம் என்று சொல்ல வைத்துவிடும் இந்த வாழ்க்கை. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை நாம் எப்போது தேடிச் செல்கிறோமோ, அப்போதுதான் கவலைகள் இல்லாத வாழ்க்கை நம்மைத் தேடி வரும். விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும்தான் தெரியும், அது எங்கு தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்

1 comment:

  1. அவசியமான அறிவுரைகள்... பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்....

  உங்கள் பாதங்களின் உட்புறம்  தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.... என் தாத்தா தனது 87 வயது, முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்...