Total Pageviews

Thursday, July 17, 2025

எது நிஜம்?

 


எது நிஜம்?
 
ஏன் மீசை முளைக்கிறது
 
ஆணுக்கு தெரியாது.
 
ஏன் பெண்மை பூக்கிறது
 
பெண்ணுக்கு தெரியாது.
 
குழந்தை எப்போது பிறக்கும்
 
மருத்துவருக்கு தெரியாது.
 
ஏன் பற்கள் முளைக்கிறது
 
மழலைக்கு தெரியாது.
 
எங்கு யாருக்கு என்ன நடக்கும்
 
எவருக்கும் தெரியாது.
 
எப்போது எந்த நோய் வரும்
 
எவருக்கும் தெரியாது.
 
ஏன் மரணம் அழைக்கிறது
 
முதுமைக்கு தெரியாது.
 
மரணத்திற்கு பின் எங்கு
 
போவோம் ஒருத்தருக்கும் தெரியாது.
 
ஏன் மனிதன் அழுகின்றான்
 
கடவுளுக்கு தெரியாது.
 
கடவுள் எங்கு இருக்கிறான்
 
மனிதனுக்கு தெரியாது.
 
எல்லாமும் எல்லோருக்கும்
 
எப்போதும் தெரியாது.
 
என்றாலும் வாழ்கின்றோம்
 
ஏன் என்று தெரியாது.
 
நாளைக்கு என்ன ஆகும்
 
என்பது தெரியவே தெரியாது.
 
இன்று தான் நிஜம்.
 
இந்த நேரம்தான் நிஜம்.
 
இந்த நொடி நிஜம்.
 
நாளை பற்றி
 
கவலைப்படாமல்
 
நிம்மதியாக வாழ்வோம் .....💗

No comments:

Post a Comment

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...