Total Pageviews

Wednesday, January 7, 2026

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள். ஆனால், இதற்கு இணையச் சேவை கட்டாயம் தேவைப்படுகிறது. விரைவில், இணைய இணைப்பு இல்லாமலேயே இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு 'டைரக்ட்-டு-மொபைல்' (Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் வரவிருக்கிறது. இந்தச் சேவை, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D2M தொழில்நுட்பம் செயல்படுவது எப்படி?

D2M தொழில்நுட்பம், மொபைல் டேட்டா அல்லது வைஃபை இல்லாத மொபைல் போன்கள் கூட, நேரடியாகச் செயற்கைக்கோள் மற்றும் ஒளிபரப்பு கோபுரங்களில் இருந்து நேரடி உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பம், அடிப்படை ஃபீச்சர் போன்கள் உட்பட ₹1,000 முதல் ₹2,500 வரையிலான குறைந்த விலை போன்களில் அணுகக் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர்.

இது அடிப்படையில் உங்கள் போனை ஒரு ஒளிபரப்பு சிக்னல்களைப் பெறும் தொலைக்காட்சி பெட்டியாக மாற்றும்.

எந்தெந்த சாதனங்களில் பயன்படுத்தலாம்?

 

டாடா குழுமத்திற்குச் சொந்தமான சாங்க்யா லேப்ஸ் (Saankhya Labs) உருவாக்கிய SL-3000 சிப்செட் மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படும்.

லாவா மற்றும் எச்எம்டி (Lava and HMD) போன்ற போன் தயாரிப்பாளர்கள் ₹2,000 முதல் ₹2,500 விலையில் D2M திறன் கொண்ட ஃபீச்சர் போன்களை உருவாக்கி வருகின்றனர். முதற்கட்டமாக, பொது ஒளிபரப்பாளரான பிரசார் பாரதியின் உள்ளடக்கங்கள் இந்தச் சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும். டெல்லி மற்றும் பெங்களூருவில் இதன் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

எதிர்கால திட்டங்கள்

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில், பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சுமார் இரண்டு டஜன் நகரங்களில் மேலும் பல சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், அரசு அவசரகால எச்சரிக்கைகள் மற்றும் பொது அறிவிப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே கோடிக்கணக்கான மக்களுக்கு அனுப்ப முடியும்.

இருப்பினும், டேட்டா மூலம் வருமானம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

எனினும், D2M தொழில்நுட்பம் இந்தியாவின் டிஜிட்டல் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Thursday, January 1, 2026

தலைவர்கள் குருபூஜை பொதுமக்களை தொந்தரவு பண்றது !

 


தெய்வமா போற்ற படும் தலைவர்கள் குரு பூஜைக்கோ, கோவிலுக்கோ எங்க போறதுனாலும் சாராயம் குடிக்காம மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம போயி வணங்கிட்டு வர்றது தான் தெய்வங்களுக்கு செய்யுற அதிகபட்ச மரியாதை...

அங்க போறப்போ அலப்பறைய கூட்டுறோம்னு சரக்க போட்டுட்டு ஆடுறது, வாகனங்கள் மேல ஏறி குதிக்குறது,  பஸ் மேல ஏறி பொதுமக்களை தொந்தரவு பண்றது , ரயில் மேல ஏறி கரன்ட் கம்பிய பிடிக்குறது ன்னு சில அல்ற சில்றைங்க பண்ணிட்டு தான் இருக்கு... 

இதெல்லாம் அறுவறுக்க தக்க விஷயம்... சிலர் பண்ற தப்பால அந்த தலைவர்கள் மேல கூட பொது மக்களுக்கு வெறுப்புதான் வரும்...

கோபி சுதாகர் வீடியோ பாத்தப்போ உள்ளததான் போடுறான்னு தோணுச்சு...

ஆனா புரியாத ஒரே ஒரு விஷயம் என்னன்னா இந்த அலப்பறை பண்றதெல்லாம் ஆதிக்க சாதி ன்னு சொல்ற பெரும்பான்மை சமுதாய பசங்க மட்டும் தானா?

தேவர்,  தீரன் சின்னமலை,  அழகு முத்து கோன், சித்திரை முழுநிலவு மாநாடு, இம்மானுவேல் சேகரன்,  ஒன்டிவீரன், ன்னு   தமிழகத்துல அத்தனை சாதிக்கும் ஒரு விழா நடந்துட்டு தான் இருக்கு...

எல்லா சாதிலயும் அசிங்கம் பிடிச்சவனுங்க இருக்கதான் செய்யுறானுக... அவன் பண்றான் அவன கேளுன்னு சொல்றத விட முதல்ல நான் சரியா இல்லேங்குறத ஒத்துக்கணும்.‌‌ என் சமூக இளைஞன் தப்பு பண்ணா அத நான் கண்டிக்கணும் முதல்ல... 

அப்புறம் மத்தவங்கள குறை சொல்லலாம்...

கடந்த பத்து வருஷங்கள்ல ஆணவக்கொலை எத்தனை நடந்துருக்கு?? காதலிக்க மறுத்த மேல் சாதி பெண்ணை வெட்டி கொன்னது, கத்தியால குத்துனுது எத்தனை சம்பவம் நடந்துருக்கு??

தப்புன்னா எல்லாமே தப்புதான... சாதிக்கொரு சட்டம் நீதிலாம் வேணாம்.. யார் தப்பு பண்ணாலும் தப்புதான்.. எவன் பண்ணாலும் கண்டிக்கணும்.‌‌..

என் சாதிக்காரன் தப்பு பண்ணா சரி.. பாதிக்க பட்டது என் சாதிக்காரன்னா பொங்குவோம்னா அதுதான் உண்மைலயே ஊறிப்போன சாதிவெறியின் உச்சம்...

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம் இந்தியா வில் கோடிக்கணக்கான மக்...