Total Pageviews

Wednesday, February 25, 2026

மல்லிப்பூ வாசனைக்கு மயங்காதவா எவரும் இல்லை!

 

இன்னைக்கு பல கருத்தரிப்பு மையங்கள் உருவாகியிருக்கு. ஒரு கருத்தரிப்பு மையத்துல EMI வசதி உள்ளதுன்னு போர்டு வச்சிருக்காங்க. இதுக்குக் காரணம் என்ன?

கொஞ்சம் விரிவா அலசலாம்.

நம்ம வெறும் செங்கல்லுலயம், கரித்துண்டுலயும், வேப்பங்குச்சிலயும் பல் விளக்கினோம்.

இதைக்கேலி செஞ்சி நம்மை பேஸ்ட் வாங்க வைத்த, அதே பேஸ்ட் கம்பெனி உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா கார்பன் இருக்கான்னு கேட்குறாங்க.

அப்பலாம் எல்லா வீட்லயும் தென்னை வாழை பலா மாமரம் முருங்கை மரம் இருக்கும். இதை மாற்றி நர்சரி கார்டன்ல க்ரோட்டன்ஸ் விற்று, இப்ப தேங்காயையும் வாழைப்பழத்தையும் முருங்கைக்காயையும் எடை போட்டுக் கொடுக்குறாங்க.

இது போலத்தான் பெண்களை மல்லிப்பூ வைக்கிறது கிராமத்துப் பழக்கம். டியோடரன்ட் மற்றும் செண்ட் யூஸ் பண்ணுன்னு சொல்லி இன அழிப்பை ஏற்ப்படுத்துறாங்க.

மல்லிப்பூ வாசனைக்கு மயங்காத ஆண்கள் இல்லை.

அப்பலாம் நம்ம ஊர்ப் பெண்கள் காலைல ஒரு முறை மாலைல ஒரு முறை முகம் கழுவி தலை பின்னி மல்லிப்பூ வைத்து பொட்டு வைத்து தழைய தழைய புடவை கட்டி ஆணை ஈர்க்கும் விதமா இருப்பாங்க.

இன்று பெண்கள் அழுக்கு நைட்டியோடு சுத்துறாங்க. சுத்தபத்தமா இல்லை, ஆணுக்குப் பிடித்த மல்லி முல்லை வாசனையும் இல்லை .

ஆணுக்கு அவள் மீது ஈர்ப்பும் இல்லை.

நாம் உபயோகிக்கும் பொருளை மாற்றச் சொல்லி விளம்பரங்கள் நம் மீது திணிக்கப்பட்டால், அதே பொருள் பல மடங்கு விலையோடு நம் மீதே திணிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.

பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்புத...