அசைவ உணவுகள் இலைகளில் வரிசைக்கட்டும் பந்திகளில்தான் பின்னால் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் இருக்கிறது.
சைவபந்திகளில் முந்திக்கொள்வார்களேத் தவிர, பிந்தி நின்று மந்திபோல் இலைகளில் பார்வையால் குந்திக் கொள்வதில்லை.
தமிழ் நாட்டில் தெற்கேதான்
இந்த பழக்கம் உண்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பழக்கம்
கிடையாது அங்கு ஒரு
பந்தி ஆரம்பித்தவுடன்
சாப்பாட்டு ஹால் கதவை
மூடி விடுவார்கள் அந்த
பந்தியில் ஒரே ஒருவர்
சாப்பிட்டு கொண்டு
இருந்தாலும் கதவை
திறக்க மாட்டார்கள்
அனைவரும் சாப்பிட்டு
முடித்து சாப்பட்ட இடத்தை
சுத்தம் செய்து இலை
போட்ட பின்தான் கதவை
திறந்து அடுத்த பந்திக்கு
ஆட்களை அனுமதிப்பார்கள்
அதுபோலவே அங்குள்ள
மனிதர்களும் பொறுமையாக இருந்து
உனவருந்தி செல்வார்கள்
பின்னாடி நிக்கிறாங்கன்னு தெரிந்திருந்தும் எல்லாரும் எழுந்த பின்னாடி கடைசியா ஒருத்தன் உக்காந்து பாயசத்த ரசிச்சு சாப்பிட்டு கிட்டு இருப்பான் பாருங்க!! நாம மொத்த டீமும் எல்லாம் கையில வச்சிக்கிட்டு நின்னுகிட்டு பேப்பரையும் சுருட்ட முடியாம இலையும் போட முடியாம அவன் எப்போ எழுந்திருச்சு நாம எப்போ அடுத்த பந்திய போடுறதுன்னு ஒரு எரிச்சல் வரும் பாருங்க🤣🤣😂😂🤨🤨🤨
No comments:
Post a Comment