ஒரு முக்கியமான பதிவு :
62 வயது மூத்த குடிமகன் ஒருவர், இரவு 11:00 மணிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.
அவரது திடீர் மரணம் மூத்த குடிமக்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறது - அவர்கள் என்ன செய்தாலும், இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்,
1.ஒன்று கீழே விழுவதைத் தடுப்பது,
2.மற்றொன்று புரையேறுவதைத் தடுப்பது.
60 வயதைக் கடந்த பிறகு, தன்னை பயிற்றுவிக்கத் தொடங்க வேண்டும்:
தண்ணீர் குடிக்கும்போது -
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, கவனமாகவும்,மெதுவாகவும் தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
வயதானவர்களுக்கு எளிதில் புரையேறக் காரணம், தொண்டை மற்றும் விழுங்கும் தசைகள் தேய்மானம் அடைந்து தசை வலிமை குறைவதே ஆகும்.
கீழ்க்கண்ட தகவல் மருத்துவத் துறையில் இன்னும் செயல்படும் ஒரு மருத்துவரால் பகிரப்பட்டது. நீங்களோ அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் முதியவர்களாக இருந்தால், இது குறிப்பிடத் தக்கது.
தண்ணீர், பால், சூப் போன்றவை புரையேறுவதால் ஏற்படும் நிமோனியா, வயதானவர்களிடையே பொதுவான பிரச்சனை.
வீட்டில் வயதானவர்கள் இருந்தால்:
தயவுசெய்து கவனிக்கவும்:
1. தண்ணீர் குடிக்கும்போது முடிந்தால் ஸ்ட்ரா பயன்படுத்தவும், விழுங்கும்போது தலையை கீழே குனிந்து கொள்ளவும்.
2. தெளிந்த சூப்பிற்கு பதிலாக கெட்டியான சூப் குடிக்கவும். தெளிந்த சூப் வேகமாக ஓடும், மூச்சு சீராக இல்லாதபோது எளிதில் புரையேறிவிடும்.
3. வாயில் திட உணவு இருக்கும்போது அல்லது மெல்லும் போது திரவம் குடிக்க வேண்டாம். தண்ணீர் வாயில் அதிக நேரம் இருந்தால், கவனக்குறைவாக இருக்கும்போது மூச்சுக்குழாய்க்குள் சென்று புரையேறும்.
4. வாயில் உணவு அல்லது தண்ணீர் இருக்கும்போது பேசவோ அல்லது தலையைத் திருப்பவோ வேண்டாம்.
5. வயதானவர்களுக்கு இளைஞர்களைப் போல உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்காது..
திரவம் அல்லது உணவு மூச்சுக்குழாய்க்குள் சென்று இருமி வெளியேற்றப்பட்டால்,
முகம் சிவந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சில நேரங்களில் புரையேறுதல் மரணத்தை விளைவிக்கும்.
வயதாகும்போது, தண்ணீரை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் குடிக்க வேண்டும்!!
SOURCE: Doctor's advice
No comments:
Post a Comment