அம்மா என்ன பெத்து போட்டுட்டு போய்டா!
அப்பா குடிகாரன்!
6வயசுல அனாதை ஆயிட்டேன்!
ஊர்ல இருந்த அம்மாச்சி வீட்டு வாசல்ல படுத்து கிடப்பேன்.
பசிச்சா கையேந்துவேன்.
ஸ்கூல் போற பசங்கள பார்த்து ஏங்குவேன்.
எனக்கும் யூனிபார்ம் போடணும், புத்தகப்பை மாட்டணும்னு ஆசை !
ஒருநாள் டீக்கடை ராமு அண்ணன் கூப்பிட்டாரு. "டேய் சின்ன பையா, கிளாஸ் துடைக்கிறியா? டீயும் பன்னும் தரேன்." சரின்னு தலையாட்டினேன். காலைல 5 மணிக்கு எழுந்து கடை கூட்டுவேன். கிளாஸ் கழுவுவேன். அதுக்கு பதிலா பழைய பேப்பர் படிக்க விடுவாரு. அதுல தான் நான் A for Apple கத்துக்கிட்டேன்.
8 வயசுல ஒரு சம்பவம். ஸ்கூல் வாத்தியார் டீ குடிக்க வந்தாரு. நான் பேப்பர்ல இருந்த கணக்க பார்த்து வாய்விட்டு சொல்லிட்டேன். "2+2=4 சார்". அவர் திரும்பி பார்த்தாரு. "உனக்கு எப்படி தெரியும்?"
"பேப்பர் பாத்து கத்துக்கிட்டேன் சார்"னேன்.
அடுத்த நாள் என்ன கூட்டிட்டு போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு. "ஃபீஸ் நான் கட்டுறேன். நீ ஒழுங்கா படி"னாரு. அன்னைக்கு தான் முதல் முறையா செருப்பு போட்டேன். கால் கூசுச்சு !😊
பகலில் ஸ்கூல்.! சாயங்காலம் டீக்கடை.!
இரவில் தெரு விளக்குல உட்கார்ந்து படிப்பேன். நோட்டு வாங்க காசு இல்ல. கடைல கிழிஞ்ச பேப்பர்ல எழுதுவேன். பேனா இல்ல. குச்சியால தரையில எழுதி பழகுவேன்.
10-வது ரிசல்ட். 475/500. டீக்கடை ராமு அண்ணன் ஊரையே கூட்டி பாயாசம் ஊத்தினாரு. "என் தம்பி பாஸ்"னு கத்தினாரு. அப்பா எங்கயோ குடிச்சிட்டு விழுந்து கிடந்தாரு. அவருக்கு தெரியாது.
காலேஜ் சேரணும். பணம்? ஊர்ல இருக்கிறவங்க ஆளுக்கு 10, 20 ரூபாயா கொடுத்தாங்க. "படிச்சு பெரிய ஆளா வாடா"னாங்க. சென்னைக்கு போனேன். ஒரு சின்ன ரூம்ல 6 பேரோட தங்கினேன். பகலில் காலேஜ். இரவில் ஹோட்டல்ல சப்ளையர் வேலை. தூக்கம் 3 மணி நேரம் தான். கண்ணு எரியும். ஆனா கனவு எரிய விடல 💪
http://B.Sc முடிச்சேன். UPSC எழுதணும்னு ஆசை. கோச்சிங் போக காசு இல்ல. லைப்ரரில பழைய புக் எடுத்து படிப்பேன். 4 தடவை ஃபெயில். ஊர்க்காரங்க கேலி பண்ணினாங்க. "டீக்கடை பையனுக்கு கலெக்டர் கனவா?"
ராமு அண்ணன் மட்டும் திட்டுவாரு. "அவனுங்க வாய மூடுற மாதிரி பாஸ் பண்ணுடா."
5-வது தடவை. மெயின்ஸ் பாஸ். இன்டர்வியூ. டெல்லி போக டிரெயின் டிக்கெட்டுக்கு காசு இல்ல. ராமு அண்ணன் தன் கடையை அடகு வச்சு 5000 ரூபாய் கொடுத்தாரு. "போய் ஜெயிச்சுட்டு வா தம்பி."
இன்டர்வியூ முடிஞ்சது. 3 மாசம் கழிச்சு ரிசல்ட். All India Rank 12. IAS. கண்ண மூடி திறந்தேன். பழைய டீக்கடை, தெரு விளக்கு, கிழிஞ்ச பேப்பர் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு !😭
முதல் போஸ்டிங். எங்க ஊருக்கே கலெக்டரா!
கார்ல இறங்கினேன். ஊரே திரண்டு நின்னுச்சு. டீக்கடை ராமு அண்ணன் ஓடி வந்தாரு. கட்டிப்பிடிச்சு அழுதாரு. "என் தம்பி கலெக்டர் ஆயிட்டான்"னு.
அப்பா. கூட்டத்துல ஓரமா நின்னாரு. கிழிஞ்ச வேட்டி. கூனி குறுகி. கண்ணுல தண்ணி. பக்கத்துல போனேன். கால்ல விழுந்தேன்.
"எந்திரிடா சாமி"னாரு நடுங்குற குரல்ல.
"இல்லப்பா. நீங்க பெத்ததால தான் நான் இங்க நிக்கிறேன். குடிச்சாலும் நீங்க என் அப்பா தான்"னேன்.
ஊரே அழுதுச்சு அன்னைக்கு.
முதல் வேலை என்ன தெரியுமா? எங்க ஊர்ல இருக்கிற அத்தனை அனாதை பசங்களுக்கும் இலவச ஹாஸ்டல். பேரு "ராமு அண்ணன் இல்லம்". ராமு அண்ணன் தான் வார்டன். இப்ப அவர் டீ ஆத்தல. பசங்களுக்கு சோறு ஆக்கி போடுறாரு ! 😊
என் ஆபீஸ் ரூம்ல ஒரு போட்டோ மாட்டியிருக்கு. தெரு விளக்கு கீழ உட்கார்ந்து படிக்கிற 8 வயசு பையன். கிழிஞ்ச டவுசர். கையில குச்சி. அது நான் தான்.
யார் வந்து "சார், என்னால முடியாது சார். நான் ஏழை சார்"னு சொன்னாலும், அந்த போட்டோவ காட்டுவேன்.
"தம்பி, பணம் இல்லாம இருக்கலாம். ஆனா கனவு இல்லாம இருக்க கூடாது. என்கிட்ட பேனா இல்ல. ஆனா எழுதணும்னு வெறி இருந்துச்சு. உன்கிட்ட என்ன இல்ல? சொல்லு"
இன்னைக்கு என் கையெழுத்துல 2 லட்சம் பசங்க படிக்கிறாங்க. நான் போடுற ஒரு கையெழுத்து ஒரு கிராமத்தோட தலையெழுத்தையே மாத்துது.
நேத்து ராமு அண்ணன் கேட்டாரு. "தம்பி, நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல?"
சிரிச்சேன். "அண்ணே, முதல்ல இந்த ஊர்ல ஒரு பையன் கூட பசியோட தூங்க கூடாது. அதுக்கு அப்புறம் தான் என் சோறு."
அம்மா பெத்து போட்டுட்டு போனா. அப்பா குடிச்சு தொலைஞ்சாரு. ஆனா ஒரு டீக்கடைக்காரன், ஒரு வாத்தியார், ஒரு ஊரு சேர்ந்து என்ன பெத்தெடுத்துச்சு.
நீயும் அனாதை இல்ல. உன்ன சுத்தி ஆயிரம் கை இருக்கு. கண்ண திறந்து பாரு. கீழ விழுந்தா கை தட்டி சிரிக்கிறவனுங்கள மறந்துடு. கை கொடுத்து தூக்கி விடுற ஒருத்தன் போதும். நீ ஜெயிச்சுடுவ 💙🚀
இன்னைக்கும் நான் தூங்குறதுக்கு முன்னாடி அந்த தெரு விளக்க நினைச்சுப்பேன். அது தான் என் முதல் கிளாஸ் ரூம். அந்த வெளிச்சம் தான் என்ன இன்னைக்கு லட்சம் பேருக்கு வெளிச்சமா மாத்தியிருக்கு.
அழுகை வந்தா அழுதுடு. ஆனா அடுத்த நிமிஷம் எழுந்து நில். உன் கண்ணீரை பார்த்து ஊரு பரிதாபப்படக்கூடாது. உன் வெற்றியை பார்த்து ஊரே கைதட்டணும். அதான் நிஜமான பழிவாங்குதல் 😊💙

No comments:
Post a Comment