- தியானம்: தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக அமர்ந்து சுவாசத்தை மட்டும் கவனியுங்கள்.
- மூச்சுப்பயிற்சி: ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றுவது மன அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும்.
- இயற்கை சூழல்: மரங்கள் நிறைந்த பூங்காக்களுக்குச் சென்று இயற்கையை ரசிப்பது மனதை இலகுவாக்கும்.
- டிஜிட்டல் விலகல்: சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி பயன்பாட்டை சில மணிநேரம் தள்ளி வையுங்கள்.
- மன்னிப்பு மற்றும் ஏற்பு: கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து, மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.
மனிதர்கள் அனைவரும் மனதார விரும்புவது 'அமைதி'. ஒரு நிமிடம் மனஅமைதியை இழப்பது என்பது அறுபது வினாடிகள் மனஅமைதியின்றி அல்லல்படுவதே. மகிழ்வான வாழ்விற்கும் மனஅமைதியுடன் வாழ்நாளைக் கழிப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
அச்சம், கவலை, மன அழுத்தம், பரிதவிப்பு முதலியன இல்லாது நிறைவுடன் மனம் இருப்பதே மன அமைதி. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அமைதி போன்று சில நேரங்களில் நாம் மனஅமைதியை விழித்திருக்கும் போதும் அனுபவிக்கின்றோம். மிகவும் பிடித்தமான நண்பர்களுடன் பொழுதைச் செலவிடும் போதும், நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்றை அடையும் போதும், மகிழ்வு தரும் புத்தகங்கள் வாசிக்கும் போதும், குழந்தைகளுடன் விளையாடும் போதும், எந்த வேலைப் பளுவும் இன்றி ஓய்வு எடுக்கும் போதும் மனம் அமைதியுடன் இருக்கிறது.
ஒரு சில வழிகளைப் பின்பற்றினால், நாம் நம் வாழ்வில் மனஅமைதியைத் தொடச்சியாக அனுபவிக்க முடியும். பதட்டம் அடையவதையும், மனஅழுத்தம் அடைவதையும் தவிர்க்க முடியும். வாழ்வில் சோதனைச் காலங்களில் நேர்மறையாகச் சித்திக்க பழகுவதன் மூலமாகவும், எதிர்மறை சித்தனைகளால் மனதைக் காயப்படுத்தாமல் இருப்பதன் மூலமாகவும் மனஅமைதியை வாழ்வில் தொடர்ந்து அனுபவிக்க முடியும், மனஅமைதி அடைய பெரிய செல்வந்தராகவோ, சுற்றுத் தேர்ந்த அறிஞராகவோ, பிரபல வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. எல்லா நிலையில் உள்ளவர்களும் தங்கள் வாழ்வில் மனஅமைதியைக் காணலாம்.
எதிர்மறை உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒத்த கருத்து இல்லாத நபர்களுடன் சொற்போர் நடத்துவது மனஅமைதியைக் கெடுக்கும் சக்தி படைத்தது.
மன்னிக்கும் பழக்கத்தையும், மறக்கும் பண்பையும் பழக வேண்டும். தவறான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளா திருக்கவும் அவ்வுணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து விடுபடவும் இது உதவும். மன்னிப்பது, மனஅழுத்தத்தை மாற்றி மன நிம்மதியை வரவழைக்கும்.
மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் பழக்கத்தை அடியோடு விட்டுவிடுங்கள். எல்லாத் திறன்களையும் ஒருங்கே பெற்றவர்கள் எவரும் இல்லை. அதைப்போல் நம்மைவிட திறமை வாய்ந்தவர்களும், திறமை குன்றியவர்களும் சமுதாயத்தில் வலம் வரத்தான் செய்கின்றனர். தம் சுயமரியாதையை வளர்ப்பதன் மூலம் பொறாமைக்கு விடை தர முடியும்.

No comments:
Post a Comment