Total Pageviews

Monday, April 18, 2016

கோடையை சமாளிப்பது எப்படி ?

*உஸ்... என்ற களைப்புப் பெரு மூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி..

*வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

*இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும்.

*கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா...

*அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ்.

*கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

*கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது.

*முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

*அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.

*குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும்.

*மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.

*அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம்.

*இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

*ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.

*குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம்.

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும்.

*கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.

*கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சிரணமாகும்.

*மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சிரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.

*தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது.

*மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

*வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

*வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

*கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.

*சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

*வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்படுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது..........

Friday, April 15, 2016

வெற்றியைக் கொண்டாட...தோல்வியை ஏற்றுக்கொள்ள... கற்றுக் கொடுங்கள்.




ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை...
 

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய
கடிதங்களின் சில பகுதிகள்.

👉 தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்,
 

வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

👉 பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...

👉 வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
 

பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

👉 பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள்...

👉 சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
சொல்லுங்கள்.

👉 மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து
கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

👉 குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

👉 அளவுக்கு அதிகமாய் இனிமையாகப்
பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்...

👉 தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!

ஒரே ஒரு மாதம் காபி, டீ அருந்துவதை நிறுத்துங்க !! தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள் !

ஒரே ஒரு மாதம் காபி,டீ அருந்துவதை நிறுத்துங்க !

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ யைக் குடித்து அன்றைய நாளைத் தொடங்குவோம். பின் பகல் நேரத்தில் மிகவும் தாகமாக இருக்கும் போது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றி ஜூஸ் குடிப்போம். அதுவே பகலில் தூக்கம் வந்தால் ஒரு கப் காபி குடிப்போம்.

உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நீரைத் தவிர மற்ற பானங்களைத் தான் குடிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இந்த நேரங்களில் தண்ணீரைக் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படுகிறது என்று தெரியுமா?

வேண்டுமானால் ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

⭕ நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

ஆம், தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

⭕ கலோரிகள் குறையும்

ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

⭕ மூட்டுகள் ஆரோக்கியமடையும்

உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

⭕ ஆரோக்கியமான இதயம்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

⭕ ஆற்றல் நிலையாக இருக்கும்

சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்

⭕ முதுமை தடுக்கப்படும்

தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

⭕ எடை குறையும்

தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!

பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!

இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!

நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்!

Thursday, April 14, 2016

மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

மிக மிக முக்கியமான செய்தி:

சில முக்கிய இந்திய நகரங்களின் பதிவான உச்ச வெப்பநிலை:
லக்னௌ: 47° C
டில்லி: 47° C
ஆக்ரா: 45° C
நாக்பூர்: 46° C
கோட்டா: 48° C
ஹைதராபாத்: 45° C
பூணே: 42° C
அஹ்மதாபாத்: 42° C

வரும் வருடங்களில் இந் நகரங்களின் வெப்பநிலை 50° C ஐ தாண்டும். ஏ.சி.யோ, இல்லை மின் விசிறியோ வரும் வெயில் காலங்களில் நம்மை காப்பாற்றாது.

ஏன் இவ்வளவு வெப்பம்????

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணியில் சென்ற 10 வருடங்களில் 10 கோடி மரங்களுக்கு மேல் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
ஆனால் அரசாலோ அல்லது பொது மக்களாலோ ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நடப்படவில்லை.

நமது இந்திய நாட்டை எப்படி குளிர்விக்கலாம்???

அரசு மரங்களை நடும் என காத்திருக்க வேண்டாம்.
மரம் நடுவதற்கோ அல்லது விதைகள் நடவோ அதிக செலவாகாது.
🌳🌲🌿🌳🌴
மா, பலா, சீதா, வேம்பு, ஆப்பிள், எலுமிச்சை, நாக மரம் போன்ற பழ மரங்களின் விதைகளை சேகரிக்கவும்.
🍎🍏🍊🍋🍒🍇🍐🍍🍈🍑
திறந்த வெளிகளிலோ, சாலை, நடைபாதை, நெடுஞ்சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, மேலும் உங்களது குழு அல்லது பங்களாக்களிலோ இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்கு துளையிடுங்கள்.

சேகரித்த விதைகளை ஒவ்வொரு துளையிலும் புதைத்து விட்டு இரு தினங்களுக்கு ஒரு முறை இக் கோடைக்காலத்தில் நீர் விட்டு வரவும்.ا
🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.

15 முதல் 30 நாட்களுக்குள் சின்ன சின்ன செடிகள் முளைத்து வளரும்.م
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அவைகளை பராமரித்து பெரியதாக வளரச்செய்யுங்கள்.

நாம் இதனை தேசிய வேள்வியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா முழுவதிலும் 10 கோடி மரங்களை நடுவோம்.ا
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
50° C வெப்பநிலை அடைவதை தவிற்போம்...

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவும். மேலும் இச்செய்தியை எல்லோரிடத்திலும் பரவச் செய்யவும். விசேஷங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் பரிசுப் பொருட்களாக மரக் கன்றுகளை வழங்கி நடச் செய்வோம்.م
🎁🌱🎁🌱🎁🌱🎁🌱🎁🌱
அதிகமாக பகிர்வு செய்யவும் . மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

Monday, April 11, 2016

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?



இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.

கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிக்காமலிருக்க...

கோடைக்காலத்தில் கார் டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்:

# டயர்களில் காற்றழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காற்றழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

# முடிந்த வரை டயர்களில் நைட்ரஜன் வாயுவை (Nitrogen air) நிரப்புவது நல்லது. ஏனென்றால் சாதாரண காற்று வெப்பத்தினால் விரிவடையும் தன்மை கொண்டது. காற்று விரிவடையும் போது டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோடைக்காலத்தில் டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்புவது நல்லது.

# கோடையில் அதிகமாக தேய்ந்த நிலையில் இருக்கும் டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் அதிக வெப்பத்தின் காரணமாக எளிதில் வெடிக்கும் வாய்ப்பு கொண்டதாக இருக்கும்.

# முடிந்த வரை முன் பக்க டயர்கள் அதிக தேய்மானம் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதைப் பயன்படுத்தவும், அதோடு கோடைக்காலத்தில் ரீ பில்ட் (Re built) செய்த டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

# கோடைக் காலத்தில் அதிகமாக பஞ்சர் போடப்பட்ட டியூப்களை பயன்படுத்துவதைத் தவிர்பது நல்லது. வெப்பத்தின் காரணமாக பஞ்சர் போடப்பட்ட இடங்களில் இருந்து காற்று வெளியேற வாய்ப்பு உள்ளது.

# அதிக தூரம் பயணிக்கும் போது, தொடர்ந்து பயணிக்காமல் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி டயரின் வெப்பம் தணிந்த பின் பயணத்தைத் தொடர்வது நல்லது.

தகவல் உதவி:
கே.ஸ்ரீனிவாசன்,உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும். -
 மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in

முடி கொட்டுவது நிற்க !

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...