Total Pageviews

Monday, June 10, 2024

Life Certificate ! வீட்டிலிருந்தே உயிர் வாழ் சான்றிதழ்!

 

தபாலில் பென்ஷன்தாரருக்கு சூப்பர் வசதி! வீட்டிலிருந்தே வாழ்நாள் உயிர் வாழ் சான்றிதழில் !

சென்னை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற வேண்டு மானால், ஒவ்வொரு வருடமும் வாழ்க்கை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.. அந்தவகையில், ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO ​​எளிமைப்படுத்தியுள்ளது.  

ஊழியர்கள்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

 அதேபோல, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் ஏராளமான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தபால் துறை: இவைகளை தவிர்க்கவே, தவிர்க்க தபால் துறையின் மூலம் சமீபத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..

 அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா POST PAYMENTS [போஸ்ட் பேமெண்ட்ஸ்] வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70- தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் நம்பர், செல்போன் நம்பர், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகையை பதிவு செய்தாலே போதும்..  

 அடுத்த சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியதாரர்கள்: டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை பதிவு செய்யலாம்

  மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. உயிர்வாழ் சான்றிதழ்: இந்நிலையில், மாநில அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30 செப்டம்பர் 30ம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

https://ccc.cept-gov.in/covid/request.aspx > service request >IPPB Jeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!

Friday, June 7, 2024

வாழ்க்கையின் நோக்கம் !

 வாழ்க்கையின் நோக்கம் என்ன?

புகழும் பெருமையும் பெறுவதா?

அன்பையும் காதலையும் அனுபவிப்பதா?

வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதா?

மதத்தையும் கடவுளையும் மதிப்பதா

 இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன.

உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு. அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது.

வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.

வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை. அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது.

'முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?'

இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம். ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும்.

வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும்.

இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும்.

இந்த அறியாமையை எப்படிக் களைவது?

முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில்  வாழ்க்கையை ஆனந்தமாக வாழ முடியும்.

தடைகள் தான் உங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும்!

 


வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்...

இடையூறுகள், அய்யப்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் வருவது இயல்பானதுதான். ஆனால்!, சிலர் அதிலே துவண்டு வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது...

ஆனால்!, வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்து போய்விடுகிறார்கள்...

எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினால், தடைகள் உறுதியாக குறுக்கிடத்தான் செய்யும். எல்லோருக்கும் இப்படி நேர்ந்திருக்கும். ஆனால்!, அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தி விடக்கூடாது...

பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் போகக்கூடாது, அதைத் தாண்டிப்போவது எப்படி என கண்டுபிடிக்க வேண்டும்...

வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடையிடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற சிக்கல்களெல்லாம் ஏற்படும்...

அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன...

அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான்...

வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா!, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள்...? இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள்...

பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடரவேண்டியதுதான்...

அதற்காக அங்கேயே அமர்ந்துவிடுகிறோமா...? என்ன...!?

ஆம் தோழர்களே...!

நம்மை தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும்போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்...!

அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றி பயணம் செய்யுங்கள்...!!

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள். அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள். ஏனெனில்!, தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன...!!!✍🏼🌹

வாழ்க்கையில் உன் சாதனை என்பது !

    வாழ்க்கையில்  உன் சாதனை என்பது !  4 வயதில் உன் சாதனை என்பது உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன...