Total Pageviews

Monday, June 10, 2024

Life Certificate ! வீட்டிலிருந்தே உயிர் வாழ் சான்றிதழ்!

 

தபாலில் பென்ஷன்தாரருக்கு சூப்பர் வசதி! வீட்டிலிருந்தே வாழ்நாள் உயிர் வாழ் சான்றிதழில் !

சென்னை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற வேண்டு மானால், ஒவ்வொரு வருடமும் வாழ்க்கை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.. அந்தவகையில், ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO ​​எளிமைப்படுத்தியுள்ளது.  

ஊழியர்கள்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

 அதேபோல, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் ஏராளமான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தபால் துறை: இவைகளை தவிர்க்கவே, தவிர்க்க தபால் துறையின் மூலம் சமீபத்தில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..

 அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா POST PAYMENTS [போஸ்ட் பேமெண்ட்ஸ்] வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70- தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் நம்பர், செல்போன் நம்பர், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கை விரல் ரேகையை பதிவு செய்தாலே போதும்..  

 அடுத்த சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியதாரர்கள்: டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை பதிவு செய்யலாம்

  மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. உயிர்வாழ் சான்றிதழ்: இந்நிலையில், மாநில அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30 செப்டம்பர் 30ம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

https://ccc.cept-gov.in/covid/request.aspx > service request >IPPB Jeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...