Total Pageviews

Saturday, August 17, 2024

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் !

 


 1.  இன்றிருப்போர் நாளை இல்லை .

2.   இதில் யாரும் விலக்கும் இல்லை

3.  வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

4.   எண்ணம் போல் வாழ்க்கை. நம் எண்ணங்கள் நன்றாக இருந்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

5.வாழ்க்கையில் எதையும் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக நடக்கும்.

6.மற்றவர்களை திருப்திப்படுத்த எதையும் செய்ய கூடாது.

7.செய்யும் செயல் சிறியதோ பெரியதோ செய்வதை சிறப்பாக         செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

8. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது.

9.நீ எதை இழந்தாலும் உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

10.நீ இழந்ததை நினைத்து வருந்தினாள் இருப்பதையும் இழந்துவிடுவாய். இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள் இழந்தடையும் அடைந்து விடுவாய்.

11.அன்பை செயல்களால் வெளிப்படுத்தமுடியாத போது தான் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

12.மகிழ்ச்சியை விட மிகப்பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

13.துன்பம் வரும் வேளையில் அமைதியாக அல்லது சிரிப்புடன் இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம்! 

14.வெற்றி கிடைக்கும் வேளையில் அமைதியாக இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம் !

15.தனக்கென கடுமையான நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன் பிறரிடம் எளிதான கட்டுக்கோப்பையும் எதிர்பார்ப்பதும் பக்குவம்! 

16.புத்திக்கும் மனசுக்கும் நடக்கும் போராட்டம் தான் நாம். 

17.ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு விளைவுகளையோ அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கவலைப்படாதே! 

18.  நீ பேச முடியாத இடங்களில் உன் திறமையை பேச விடு கண்டிப்பாக வாழ்வில் வெற்றி நிச்சயம்!

19.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது. 

20.வெற்றியை தலைக்கு கொண்டு செல்லா மலும்,தோல்வியை இதயத்துக்கு எடுத்து செல்லாமல் சரியாக கையாள்வது.

21.  தோல்வியை கண்டு பயப்படாமல் இருப்பது.

22.தன் எந்த ஒரு செயலும் பிறரை புண்படுத்தாமல் பார்த்து கொள்வது.

23.மற்றவர் சந்தோஷத்திற்காக சிலவற்றை விட்டு தருவது.

24.நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டி ருக்கிறோம்.

25.நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

 26.  இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது  ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

28.எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள,உங்களை விட நல்ல வேலை. நல்ல கார். வங்கியில் நிறைய பணம்.நல்ல படிப்பு. அழகிய மனைவி. அழகான கணவன். நல்ல குழந்தைகள். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை. நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

29.நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

30.சிலர் தங்கள் கவனத்தை, அடுத்தவர்கள் எப்படிஇருக்கின்றார்கள்,எங்கேசெல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,என்ன வாகனம் ஓட்டு கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்?..என்பதிலேயே கவனத்தை, செலுத்துவதால் பாதுகாப் பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கிய மான ஒரு வாழ்வை வாழுங்கள்.நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாரும் நமக்கு போட்டி இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.

வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்தான்!


Friday, August 16, 2024

நீண்ட காலம் நிம்மதியாக, வாழ வழிகாட்டும் வள்ளலார்!

 


1. சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

2. பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும்.

3. உணவில் உப்பு, புளி, மிளகாய் குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவை அதிகமாகவும் சேர்த்து சார்ப்பிட வேண்டும்.

4. விருந்து என்றாலும் குறைவாகவே உண்ண வேண்டும்.

5. பகலில் சாப்பிடும் உணவில் அரைப்பங்கு அளவு உணவை மட்டுமே இரவில் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. உறங்கும் போது இடது கைப் பக்கமாகவே உறங்க வேண்டும்.

7. பதற்றம் அதிகரிப்பதால் பிராணவாயு அதிகமாக செலவாகும். இதனால் பதற்றமின்றியும், ஆரவாரமின்றியும் அமைதியான வாழ்க்கை வாழ பழக வேண்டும்.

8.வாழ்க்கை என்பது வாழும் வரை மட்டுமே. அதனால் அனைத்து உயிர்களிடத்தும் அன்புடனும், கருணையுடன் வாழ்.

9. முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்.

10 மரணத்திற்கு பிறகு எதையும் கொண்டு செல்ல போவதில்லை. அதனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்காதே.

11. வாழும் வரை ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்.

12. பணத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து விடாதே.

13. மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் என சிந்திக்காதே.

14. வாழும் போதே உறவுகள், நண்பர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை ஆத்மார்த்தமாக நேசி.

15. பிள்ளைகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவோ, அவர்களை உனது அடிமைகளாக நடத்த வேண்டும் என நினைக்காதே.

16. என்னுடைய மரணத்திற்கு பிறகு என ஒரு போதும் உன் பிள்ளைகளிடம் சொல்லாதே. பிறகு உனது மரணம் எப்போது வரும் என அவர்கள் காத்திருக்க துவங்கி விடுவார்கள்.

 

17. உன்னால் முடியாததை மாற்ற முயற்சி செய்யாதே.

18. மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து பொறாமை கொள்ளாதே.

19. வாழ்க்கையை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்.

20. மற்றவர்களின் நல்ல பழக்கங்களை மனம் திறந்து பாராட்டு.

21. வாழ்க்கை வாழ்வதற்கு தான். காலம் ஓடி விடும். ஆர்வத்துடன், வாழ்க்கையை நேசித்து வாழ்.

22. ஆதரவற்றவர்கள், ஏழைகள், வயதானவர்கள், நோயுள்ளவர்களிடம் ஒரு போதும் கடுமையாக நடந்து கொள்ளாதே.


23. உணவு, தூக்கம், ஓய்வு, பேச்சு ஆகியவற்றை குறைத்து, அதிகமாக உழை.

24. நல்ல மனிதர்களுடன் வாழ பழகு. அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடு.

25. தியானம், படிப்பு, உடற்பயிற்சி, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு அதிக நேரம் செலவிடு.

இதுவே சரியான வாழ்க்கை முறை என்றும், இந்த முறையில் வாழ்க்கையை நடத்தினால் நீண்ட காலம் நிம்மதியாக, சரியான வாழ்க்கையை வாழலாம் என வள்ளலார் வழிகாட்டுகிறார்.

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...