Total Pageviews

Wednesday, November 26, 2025

நம் முன்னோர்களே நமது அடையாளம்!

 


ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

இது இந்தியாவின் உண்மை.

அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக.

ஆம்...

அது நாமாகவோ,

நம் தாயாகவோ, தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,

அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.

வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்,

அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள்

இரு கைகளை கூப்பி வணங்குபவர்கள்.

வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்

அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்

அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்,

அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும், அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது.

செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்

தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்

எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்,

கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்

சமூக பயம் உள்ளவர்கள்,

பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்

பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள்

வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.

இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா?

ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.

மரியாதை கொடுங்கள்

அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்

இல்லையெனில் அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்

அதாவது, மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை,

கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை,

மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை

எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்.


நம் முன்னோர்களே நமது அடையாளம்.

அவர்களே நமது முகவரி

மற்றும் நமது பெருமை!

அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்.

அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும், நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு"

Tuesday, November 25, 2025

ஆண் வாரிசுகள் இல்லாத பெண் மட்டுமே உள்ள குடும்பங்களில் அவர்களின் பெற்றோரின் இறுதிக் காலம் எப்படி முடிவுக்கு வருகிறது?

 


  • இதுவும் ரொம்ப உணர்வுபூர்வமான, ஆனா சமூகத்துல நாம பார்க்கிற ஒரு முக்கியமான கேள்வி. ஆண் வாரிசுகள் இல்லாத, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்கள்ல பெற்றோரோட இறுதிக் காலம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
  • இந்தக் காலத்துல, "ஆண் வாரிசுதான் பாதுகாப்பான்"ங்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வருது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாதிரி, பெற்றோரைப் பார்த்துக்கிற விஷயத்துலயும் ரொம்பவே பொறுப்பாவும், அக்கறையோடும் இருக்காங்க.
  • பெண் குழந்தைகள், திருமணத்துக்குப் பிறகும், பெற்றோரின் உடல்நலம், மருத்துவச் செலவு, உணவு போன்ற விஷயங்கள்ல முழுப் பொறுப்பை எடுத்துக்குறாங்க. மகன்களைவிட உணர்ச்சிபூர்வமான அக்கறை பெண்கள்கிட்ட அதிகமா இருக்குன்னு நிறைய ஆய்வுகள் சொல்லுது.
  • பெரும்பாலான நேரத்துல, மகள்களோட கணவர்கள் (மாப்பிள்ளைகள்) இந்தப் பொறுப்புகளைப் புரிஞ்சுகிட்டு ஆதரவு தர்றாங்க. பெற்றோரின் வீட்டுச் செலவு அல்லது மருத்துவச் செலவை மகளும் மாப்பிள்ளையும் சேர்ந்து ஏத்துக்குறாங்க.
  • மகள்கள் வெவ்வேறு நகரங்கள்ல அல்லது வெளிநாடுகள்ல இருக்கும்போது, நேரடியா அவங்களோட இருக்க முடியாது. அப்போ, பெற்றோர்கள் சில சமயம் தனிமையையோ அல்லது உதவிக்கு ஆள் இல்லாமலோ கஷ்டப்படலாம்.
  • இந்தக் குடும்பங்கள், வீட்டு வேலை மற்றும் பராமரிப்புக்கு ஆட்களை நியமிப்பது, அல்லது வசதியைப் பொறுத்து முதியோர் இல்லங்கள் போன்ற தீர்வுகளை நோக்கிச் செல்வதுண்டு. இதுதான் இந்தப் பிரிவில் இருக்கும் ஒரு பெரிய சவால்.
  • பெற்றோர்கள் தங்கள் கடைசி காலத்துல, மகளோட வீட்லயே போய்த் தங்குற பழக்கம் இப்போ அதிகமாயிட்டிருக்கு. அவங்க தங்கள் மருமகன் வீட்டிற்குப் போறதைப் பத்தித் தயக்கம் காட்டுறது இல்ல.
  • ஆண் பிள்ளை வேணும்னு எதிர்பார்த்த பெற்றோர்கள்கூட, தன் மகள்கள் நல்லா பார்த்துக்கும்போது, "ஆண், பெண் வித்தியாசம் இல்லை; நல்ல குணம்தான் முக்கியம்"னு சொல்லி மனநிறை வடையறாங்க.
  • பெற்றோரின் கடைசி காலத்தில் இருக்கும் ஒரே சவால், மகள்கள் தங்கள் புதிய குடும்பம் மற்றும் பிறந்த வீடு ஆகிய இரண்டையும் சமன்செய்வதில் ரொம்பவே சிரமப்படுறதுதான்.
  • சுருக்கமா, ஆண் வாரிசுகள் இல்லாதது பெரிய பிரச்னையே இல்லை. மகள்கள் மனசு வெச்சா, பெற்றோரின் இறுதிக் காலம் அன்பு, அரவணைப்பு, மற்றும் பொறுப்போடுதான் நிறைவடைகிறது.

திருமணமே செய்துகொள்ளாத பிரம்மச்சாரிகளின் கடைசி கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

 

இளமையில் சிங்கிள்தான் கெத்து. திருமண வாழ்க்கையை விட பிரம்மச்சாரியம் தான் சிறந்தது என செல்லும் பல ஆண்களுக்கு முதுமையில் இந்த நிலைதான் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.....

மிக கடினமாக இருக்கும்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியது மிகவும் வேதனைக்குரியது.

அந்த பெண்ணின் சகோதரர் "சிங்கிள்தான் கெத்து" என்ற மனநிலையில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இளமை தீர்ந்தது.திருமணம் வயதை கடந்தாயிற்று. இப்போது திரும்பி பார்த்தால் சிங்கிள்தான் கெத்து என‌ சொல்லி அவருடன் சுற்றிய சக நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவரை விட வயதில் குறைந்த உறவினர்கள் அணைவரும் திருமணம் முடித்து விட்டார்கள் ,

இப்போது அவர் மட்டும் தனி மரமாக வாழ்கிறார். சுகர் போல எதோ நோய் வேறு உள்ளதாம்.

"நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னால், நீங்களாவது என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே" என அழுதாராம்.

திருமணம் ஆகாத தனி மனிதராக இருப்பதால் வெட்கத்தில் உறவு முறைகளில் நடக்கும் விஷேசத்திற்க்கு, திருமணத்திற்கு கூட அவர் சகோதரர் செல்லாமல் தவிர்ப்பதாக சொல்லி அந்த சகோதரி அந்த நீயா நானா அரங்கத்திலேயே அழுது காணும் நம்மையும் அழ வைப்பார். 

Thursday, November 13, 2025

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?

பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.

அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தேன்- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது? | Home Remedies To Remove Hair From Face In Tamil

அதன் பின் நீரில் நனைத்த துணியால் முடி வளரும் எதிர்திசையை நோக்கியவாறு துடைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

2. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்கும்.

Thanks to Lakasri.com 

முடி உதிர்வை நிரந்தரமாக தடுக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

 பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.

முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.

அந்தவகையில், முடி உதிர்வை தடுக்க பூசணி விதை எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் பூசணி விதை எண்ணெய்யை நேரடியாக எடுத்து, கூந்தலின் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

பின் இதை ஒரு நாள் முழுக்க அப்படியே விடவும். அதன் பிறகு, மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் அலசிக்கொள்ளலாம்.

முடி உதிர்வை நிரந்தரமாக தடுக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது? | Pumpkin Seed Oil For Healthy Hair Growth In Tamil

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிரந்தமாக நின்றுவிடும்.

பூசணி விதை எண்ணெய் உச்சந்தலையையும், கூந்தல் இழைகளையும் ஈரப்பதமாக்குகிறது. இதனால் வறண்ட கூந்தல் மென்மையாக மாறும்.

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பூசணி விதை எண்ணெய் கூந்தலை வலுப்படுத்துகிறது.

Thanks to Lankasri.com 

நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

 இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்- 1 கப்
  • வெந்தயம்- ஒரு ஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

பின் அதில் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து மிதமான சூட்டில், எண்ணெய் நிறமாறும் வரை கலக்க வேண்டும்.

இதற்கடுத்து, அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய்யை ஆறவிட்டு அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

நரைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது? | Home Made Natural Hair Oil For Grey Hair In Tamil

தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும்.

பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.

இந்த எண்ணெய்யை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வர முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் மாறும்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ.., எப்படி தயாரிப்பது?

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் பேருதவியாக இருக்கும்.

அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • முருங்கை இலை- ½ கைப்பிடி
  • தண்ணீர்- 2 கப்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • தேன்- 1 ஸ்பூன்

எப்படி தயாரிப்பது?

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ.., எப்படி தயாரிப்பது? | Moringa Leaf Tea For Diabetes In Tamil

கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

கடன் வாங்கி வீடு வாங்கலாமா?

  உறவினர்களிடம் கடன் வாங்கி வீடு வாங்கலாமா? வேண்டாம். அவ்வாறு வாங்கி வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ சில நேரத்தில் தவறாக முடிந்து விட வாய்ப்ப...