Total Pageviews
Wednesday, December 31, 2025
Tuesday, December 30, 2025
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது ஏன்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றிஇ தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான தாத்பரியம் இதுதான்.
பெருமாள் கோவிலைப் பொருத்தவரையில் 3 முறையில் தீர்த்தம் வாங்க வேண்டும். இதைக் கேட்டும் வாங்கலாம். முதல் முறை தீர்த்தம் ப்ரதமம்இ காரீய சித்யர்த்தம் என்று பெயர். நம் செயல்களில் வெற்றி பெற வேண்டி இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை தவிதீயம். தர்மஸ்தாபனம் என்கிறார்கள். நாம் வாழ்க்கையில் தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. மூன்றாம் முறை தீர்த்தத்தை சத்ரிதீயம் சமோஷ ப்ரோக்தம். அதாவது குணார்னவம் என்கிறார்கள்.
மெய்ப்பொருளான பகவானை உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. மூன்று முறையும் பருக வேண்டும். தலையில் தடவ கூடாது. கண்ணிலும் ஒத்திக் கொள்ளக் கூடாது. அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியிலோ வாங்க வேண்டும். பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும். கீழே சிந்தாமல் இருக்க வேண்டும். பருகியதும் நாராயணா என்று 3 முறை சொல்ல வேண்டும்.
கோவிலுக்குச் சென்றால் அங்கு போய் முறையாக எப்படி சாமி கும்பிடுவது, வலம் வருவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரகாரம் சுற்றும்போது எதை எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். சாமி கும்பிட்டதும் என்ன செய்ய வேண்டும்? என நம் முன்னோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஒழுக்க நெறிகள் இருக்கும். அதைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக லுங்கி அணிந்து செல்லக்கூடாது. சில கோவில்களில் சூடம் ஏற்றக்கூடாது என்று ஒரு நியதி இருக்கும். அதைக் கடைபிடிக்க வேண்டும்.
சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?
சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனைஇ தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என சரணடைந்து விடுகிறோம். அதுவரை நாத்திகராக இருப்பவர்கள் கூட இதுபோன்ற ஒரு கட்டத்தில் இத்தனை நாளும் நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்டவா. என்னை மன்னிச்சிக்கோன்னு இறைவனிடம் சரணாகதி அடைவதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒரு நேரத்தில்தான் நாம் சரணாகதி அடைய வேண்டுமா? நாம் தினம் தினம் நம்மையே அறியாமல் சரணாகதி அடைகிறோம்.
சாந்தி முகூர்த்தம்னா என்ன? கவியரசர் என்ன ஒரு அழகான விளக்கம் கொடுத்துருக்காருன்னு பாருங்க..!
மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகிலுள்ள வாழ்க்கை பேறுகள் இந்துக்களால் 16 வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதே இந்துக்கள் 16 பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுது விட்டு விழுது விட்டு தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்.
ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படி தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பெயர்கள் அனைத்தையும் மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள். கணவனின் பெயரை மனைவி சொன்னால் கூட மரியாதையும் குறையும் மங்களமும் குறையும் என்று நம்பினார்கள்.
யாராவது ஒருவர் தும்மினால் பக்கத்தில் இருக்கிறவர் வாழ்க என்பார்கள். தும்மினேனாக வழுத்தினாள் என்றான் வள்ளுவன். தும்மும் போது சிலர் நூறு வயது என்பார்கள். பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும் போது சோறு இல்லை என்றால், இல்லை என்று சொல்லமாட்டார்கள். நிறைய இருக்கிறது நாளைக்கு வா என்பார்கள்.
தீபத்தை அணைக்கச் சொல்லும் போது அணையுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். வளர்த்து விடு என்பார்கள். வீட்டில் ஒருவர் இறந்து விட்டதை குறிக்கும் போது சிவலோகப் பதவி அடைந்தார்; பரலோக பிராப்தி அடைந்தார் என்பார்கள். பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதி ஆனாள் என்பார்கள். அதாவது பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது அதன் பொருள்.
மணமக்களின் முதலிரவை சாந்தி முகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம் ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது என்பது அதன் பொருள். இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்களமே நிறைந்திருக்கும். நான் சொல்லுவது சராசரி இந்துக்களை ஆத்திரக்காரர்கள் அமங்கலமாக பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்தது அல்ல.
நன்றாக வாழ்கிற பெண்ணை வாழ்வரசி என்பார்கள். பெரும்பாலான இந்து சமூகங்களில் கணவனை இழந்தவன் வெள்ளைச் சேலை அணிய வேண்டும் என்று விதி வகுத்து வைத்திருப்பது ஏன்? இவள் கணவனை இழந்தவள் என்று தனித்து காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் தூய்மையானவள் என்று குறிப்பதற்காகவும் ஆக மங்கள மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே!
அமங்கலங்கள் குறிக்கப்படும் போதெல்லாம் அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப் படுகின்றன. இந்த துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன இவற்றை நீ ஏற்றுக்கொள் எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடி பரிந்துரைப்பதன் நோக்கம்.
நன்றி: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்
கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
உப்பு ...
அட .. இம்புட்டு நாளா இது தெரியாம போச்சே.....
கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன் பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
கல் உப்பை வறுப்பதா...?ஏன்...?
சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் நம் முடைய அஜாக்கிரதைதான். மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.
ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.
இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது. அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும்.
அது மட்டுமல்ல, ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும். சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம். இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது. நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.
இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்...
குப்பைமேனி இலை அல்லது முருங்கை இலை சேர்த்து வறுத்த உப்பு மிகவும் நல்லது....
திருமணத்திற்கு இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.🚶♀🚶
திருமணத்திற்கு இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.🚶♀🚶
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.✱
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.ॐ
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.🌹✍
இறந்தவர்களின் அஸ்தியை ஏன் நதியில் கரைக்கிறார்கள்? கண்ணதாசன் சொல்றதைக் கேளுங்க...!
வாழும் நாள்கள் எத்தனை என்று யாரும் கணக்குப் போட்டுக் கொண்டு வாழ முடியாது. சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாகிடும்னு சொல்வாங்க. அதனால நாம வாழப்போற நாள்கள் கொஞ்சமோ, அது நிறையவோன்னு தெரியாது. இருக்குற நாள்கள்ல அடுத்தவங்களுக்கு உபயோகமா வாழ்ந்துட்டுப் போயிடணும். யாரையும் பொல்லாங்கு சொல்லாம, நம்மோட கடமையை மட்டும் செஞ்சாலே போதும்.
நாம இந்த மண்ணுல பிறந்து வளர்ந்து வாழ்ந்ததுக்கான ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுட்டுப் போகணும். அதுதான் நம் பிறவியோட நோக்கம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சி மற்றவங்களுக்கு பிரயோஜனமா வாழ்றதுல தான் வாழ்க்கையோட அர்த்தமே இருக்கு. இருக்குற வாழ்க்கையில நீயா, நானான்னு போட்டி பொறாமை இல்லாம வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துட்டுப் போகணும்.
நம்மைப் பார்த்து மற்றவங்க வாழ்ந்தா அவனை மாதிரி வாழணும்னு சொல்லணும். அதுக்கு முன்னுதாரணமா நாம வாழ்ந்து காட்டணும். நாம இந்;த மண்ணில் இல்லாத போதும் அதுதான், அந்தப் பேருதான் என்னைக்கும் நிலைத்து நிற்கும். சரி இனி விஷயத்துக்கு வருவோம். நம்ம கவியரசர் கண்ணதாசன் ஐயா வாழ்க்கையை புட்டு புட்டு வச்சிட்டுப் போயிட்டாரு. இறந்தவங்களோட அஸ்தியை ஏன் ஆற்றுல, கடல்ல கரைக்கிறாங்கன்னு ஒரு விளக்கம் கொடுத்துருக்காரு. வாங்க பார்க்கலாம்.
வாழாமல் இறந்து போன குழந்தைகளை - வாலிபர்களை- கன்னிப் பெண்களை இந்துக்கள் புதைக்கிறார்கள். கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதி அடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்? ஆறு போல உன் ஆத்மா ஓடி கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும் என்பதற்கு.
இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள். இயற்கையாகவே மங்கலம் அமங்கலம் தெரிந்துவிடும்.
மங்கல சொற்கள் , மங்கல அணி, மங்கலவிழா இந்த வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும். அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு மட்டமாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம். 'பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' என்றான் வள்ளுவன்.
உலகத்தில் நாகரீகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களை குறிக்கிறது. நமது நாகரிகமோ 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது.
வாலிப கவிஞருக்கு நினைவஞ்சலிகள் !
கவிஞர் வாலிஅய்யா எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை,
சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள்,
நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப பிரபலம்.
இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்றுஎம்.ஜி.ஆர் வரும்போது அன்போடு கேட்பாரம்
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல்,
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார்.
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்ந்தது
அவதார புருஷன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம்தர துடிப்பார்!
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்,
போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்,
இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
வாலிப கவிஞருக்கு நினைவஞ்சலிகள் 🤍
'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !
இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம் இந்தியா வில் கோடிக்கணக்கான மக்...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...

