Total Pageviews

Wednesday, September 26, 2012

முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!


சாதாரணமாகவே சரும அழகைப் பராமரிக்கும் அழகுப் பொருட்களில் உப்பும் ஒருவித அழகுப் பொருள் தான். அதிலும் முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், அப்போது உப்பை வைத்து ஸ்கரப் செய்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும். மேலும் பெரும்பாலான அழகு நிலையங்களில், ஸ்பாக்களில் சருமத்தை சுத்தமாக்க, மிருவானதாக மாற்ற உப்பை வைத்து ஸ்கரப் செய்வார்கள். அத்தகைய ஸ்கரப்பை வீட்டிலேயே கடைகளில் விற்கும் குளிக்கும் போது பயன்படும் குளியல் உப்பை பயன்படுத்தலாம். மேலும் முகத்தில் இருக்கும் முகப்பருக்களை போக்க எப்சம் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) சிறந்தது.

இந்த எப்சம் உப்பில் நிறைய நன்மைகள் உள்ளன. இந்த உப்பு பெரிய கடைகளில், மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. அதுவும் இந்த உப்பு டப்பாக்களில் விற்கப்படும். இப்போது அந்த உப்பை வைத்து எப்படி ஸ்கரப் செய்வதென்று பார்ப்போமா!!!

* குளித்த பின்பு, ஒரு சிட்டிகை எப்சம் உப்பை எடுத்துக் கொண்டு முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். மேலும் மூக்கில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் இருப்பவர்கள், இதனை செய்தால் போய்விடும். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இந்த உப்பை வைத்து ஸ்கரப் செய்தால், முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீங்கிவிடும்.

* வீட்டிலேயே சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்கரப் என்றால் அது எப்சம் உப்பும், எலுமிச்சை சாறும் தான். ஏனெனில் இந்த எப்சம் உப்புடன், சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, இறந்த செல்கள் போன்றவை நீங்கிவிடும்.

* வறண்ட சருமம் உள்ளவர்கள், எப்சம் உப்புடன், கிளன்சிங் மில்க் விட்டு கலந்து முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். ஏனெனில் இதில் உள்ள கிளன்சிங் மில்க் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, அரிப்புக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் எப்சம் உப்பு வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் இந்த முறையை செய்தால், நல்லது.

* முகத்தை பளபளவென்று ஆக்குவதற்கு எப்சம் உப்பு மற்றும் ஏதேனும் எண்ணெய் (லாவண்டர், ரோஸ்மேரி) கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் ஸ்கரப் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்க சிறந்தது. அதிலும் இந்த முறையை மாதத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், இதன் பலனை விரைவில் காணலாம்.

* சருமத்தில் உள்ள பழுப்பு நிறம் மற்றும் பருக்களை நீக்க எப்சம் உப்பு மற்றும் தேன் கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். ஏனெனில் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறம் மற்றும் பருக்களை போக்கி, ஈரப்பசையுடன் வைக்கும். வேண்டுமென்றால் இத்துடன் சிறிது தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கூறியவாறெல்லாம் சருமத்திற்கு ஏற்ற ஸ்கரப்களை செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, அழகாக காட்சியளிக்கும். முக்கியமாக சருமத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், இவற்றை செய்யாமல் இருப்பது நல்லது.


Thanks to One india.com

 கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன.-ஜெர்மன் பழமொழி
 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...