Total Pageviews

Wednesday, September 19, 2012

காருக்கு சிஎன்ஜி சிலிண்டர் சிறந்ததா அல்லது எல்பிஜி சிலிண்டர் சிறந்ததா?


நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 4 லட்சத்தில் கிடைக்கும் சிறிய ரக கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால், இவற்றில் டீசல் மாடல் கிடைப்பதில்லை. ஆனால், பெட்ரோல் விலை விண்ணை முட்டுவதால் குட்டிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருளுக்கு ஒரு பெரும் தொகையை ஒதுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், பெட்ரோல் கார் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்கான செலவீனத்தை குறைக்க ஒரே மாற்று வழி தங்களது காரில் சிஎன்ஜி அல்லது எல்பிஜி சிலிண்டர் பொருத்திக் கொள்வதுதான். இதற்கு காரணம், பெட்ரோல் விலையை விட சிஎன்ஜி, எல்பிஜி விலை குறைவாக இருப்பதுதான்.

பெட்ரோல் விலை சராசரியாக 68 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், டெல்லியில் சிஎன்ஜி லிட்டர் 39 ரூபாய்க்கும், எல்பிஜி 43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், குட்டிக் கார் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்கு செலவிடும் தொகையை மிச்சப்படுத்த சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சிலிண்டர் பொருத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், இதில் எது சிறந்தது என்பதை கணிக்க முடியாமல் பலர் குழம்புவதுண்டு. இரண்டிலும் இருக்கும் சாதக பாதகங்களை இங்கே காணலாம்.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல நகரங்களில் எமது வாசகர்கள் வசிப்பதால், அதை அடிப்படையாக வைத்து இந்த ஒப்பீடு செய்தியை வழங்குகிறோம்.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் சிஎன்ஜி கிடைப்பதில்லை. அதேவேளை, எல்பிஜி பெரும்பாலான நகரங்களில் எளிதாக கிடைக்கிறது. எனவே, சிலிண்டர் பொருத்தும் முன்பு உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் சிஎன்ஜி அல்லது எல்பிஜி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு சிலிண்டர் பொருத்தவும்.

பூட் ரூம்:

சிஎன்ஜி அல்லது எல்பிஜி சிலிண்டர் பொருத்தும்போது காரின் பூட் ரூம் எனப்படும் பொருட்கள் வைப்பதற்கான இடம் குறைந்துவிட்டும் அல்லது இருக்காது. இதில், எல்பிஜியைவிட சிஎன்ஜி சிலிண்டர் பெரிதாக இருக்கும் என்பதால் அதிக இடத்தை அடைத்துகொள்ளும். உதாரணமாக, மாருதி வேகன் ஆர் காரில் 12 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தும்போது நிச்சயம் இடவசதி இருக்காது. ஆனால், எல்பிஜி சிலிண்டர்கள் அளவில் சிறிதாக இருக்கும் என்பதால் ஓரளவு இடம் இருக்கும்.

எரிபொருள் நிரப்பும்போது..

சிஎன்ஜி கார்களில் எரிபொருள் நிரப்பும்போது சிறிது கூடுதல் நேரம் செலவாகும். ஒரு காருக்கு சிலிண்டரை முழுவதுமாக நிரப்புவதற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம். எனவே, சிஎன்ஜி நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு வரிசையில் உங்கள் கார் 10 வது இடத்தில் நின்றிருந்தால் குறைந்தது 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், எல்பிஜி சிலிண்டரில் வேகமாக எரிபொருள் நிரப்ப முடியும். ஒரு முறை எல்பிஜி சிலிண்டரை முழுமையாக நிரப்ப 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

பிக்கப் குறைபாடு:

மாருதி ஆல்ட்டோ காரின் எஞ்சின் 46 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் சிஎன்ஜியில் இயங்கும்போது ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 15 சதவீதமும், எல்பிஜியில் செல்லும்போது ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 10 சதவீதமும் குறையும். அதாவது, ஆல்ட்டோவில் சிஎன்ஜி இயங்கும்போது அதன் ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 39 பிஎச்பியாகவும், எல்பிஜியில் இயங்கும்போது 41.5 பிஎச்பியாகவும் குறையும். இதை ஒப்பிடும்போது எல்பிஜிதான் சிறந்ததாக இருக்கும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் குறையுமா?

சிஎன்ஜி சிலிண்டரில் 10 கிலோ எரிவாயு நிரப்பும்போது அந்த சிலிண்டரின் மொத்த எடை 100 கிலோ வரை இருக்கும். இப்போது காரில் 5 பேர் அமர்ந்து செல்லும்போது பின்புற சஸ்பென்ஷனில் பாதிப்பு ஏற்படும். மேலும், கிரவுண்ட் கிளியரன்சும் குறையும் என்பதால் மேடுபள்ளங்களில் தரையில் இடிக்கும் நிலை ஏற்படலாம். பின்புற சஸ்பென்ஷனில் ஸ்பேசர் பொருத்தினால் இந்த பிரச்னையை தவிர்க்கலாம். ஆனால், எல்பிஜி சிலிண்டர் எடை குறைவு என்பதால் பெரிய பிரச்னை இருக்காது.
எது சிக்கனம்?

ஆல்ட்டோ, வேகன்-ஆர் கார்களுக்கு சிஎன்ஜி சிலிண்டர் பொருத்துவதற்கு 40,000 ரூபாயும், எல்பிஜி சிலிண்டர் பொருத்துவதற்கு 25,000 ரூபாயும் செலவாகும். பெட்ரோலில் செல்லும்போது லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் தரும் கார் சிஎன்ஜியில் செல்லும்போது ஒரு கிலோவுக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும். ஆனால், எல்பிஜியில் செல்லும்போது வெறும் 12 கிமீ மைலேஜ் மட்டுமே கிடைக்கும்.
ஓரளவு மைலேஜுடன் பிக்கப்பும் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு எல்பிஜி பெஸ்ட். மைலேஜ் மட்டும்தான் வேண்டும் என்பவர்களுக்கு சிஎன்ஜி பெஸ்ட்.

thanks to One india .com 

 ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...