Total Pageviews

Sunday, September 9, 2012

ஆன்லைன் ஷாப்பிங் செய்வேரா நீங்கள்? உஷார்.


நீங்கள் ஆன்லைனில் டிரெஸ் வாங்கும்போது முதல்ல அளவு பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் அளவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். நீங்கள் டிரெஸ் ஆர்டர் செய்றதுக்கு முன்னாடி அந்தப் பொருளைப் பற்றி மற்ற வாடிக்கையாளர்கள் தங்களோட அனுபவங்களை பற்றி சொன்னதை பாருங்க.. அதுல குறிப்பாக அளவுகளைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு பாருங்க..

அப்புறம் ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்குற பொருள் பயன்படுத்தியதாகக் கூட இருக்கலாம், அல்லது மோசமான கண்டிஷன்ல இருக்கலாம் அல்லது டேமேஜாகியும் இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்படாத வகையில் நல்லா ஆராய்ந்து ரிட்டர் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கா? அது ப்ரீயா? அல்லது பணம் கட்டணுமா? என்றெல்லாம் யோசிச்சுதான் ஆன்லைனில் ஆர்டர் செய்யனும்

மறைமுக கட்டணம்

எப்போதாவது நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தீங்கன்னா டெலிவரி சார்ஜஸ்..அது இதுன்னு ஏகப்பட்ட கட்டணம் கறக்கப்பட்டுவிடும்... அதனால ஷிப்பிங் கட்டணம் என்னனு முழுமையாகத் தெரிஞ்சக்கனும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவு? மொத்தமாக அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவுன்னு நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் டிஸ்கவுண்ட்ஸ் பற்றியும் கூப்பன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளனும். அதேபோல் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸையும் நல்லா தெரிஞ்சு வைச்சுக்குங்க..அதேபோல் பொருட்களை ரிட்டர்ன் கொடுக்கிறதை பற்றியும் அவசியம் தெரிஞ்சக்கனும்.. ஒருவேளை நீங்கள் ஆர்டர் கொடுத்துட்டு அப்புறம் மாற்ற முடியாமல் போய் கேன்சலும் செய்ய முடியாமலும் போகலாம். அதனால ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை அவசரப்பட வேண்டாம்..அதே மாதிரி ஆர்டர் பட்டனை தட்டும்போது கவனமாக இருங்க.. பொறுமையாக செயல்படுங்க.. நீங்க பாட்டுக்கு 2 தடவை ஆர்டரை தட்டிவிடப் போய் பில்லும் 2 முறை வந்துடும்..அதனால ரொம்ப கவனமாக ஆன்லைன் ஆர்டர் செய்யனும்.

கட்டணம் செலுத்துதல்

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முடிவை எடுத்துட்டீங்கன்னா முதலில் பேமெண்ட் செலுத்துற வெப்பேஜ் எப்படி இயங்குதுன்னு பாருங்க.. பெரும்பாலும் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்தும் பக்கங்களில் ப்ரிவியூ ஆப்சன் இருக்கும். சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யுறதுக்கு முன்னாடி நல்லா பர்வியூவை பார்த்துக்குங்க... ப்ரிவியூ ஆப்சன் இல்லையா..? பேசாம வேற வெப்சைட் பக்கம் தாவிடுங்க.. அதுதான் பெஸ்ட்

அதேமாதிரி கரென்சி ரேட் என்னங்கிறதையும் ரொம்பவும் கவனமாக பார்த்துங்க..இணையத்துல எல்லா நாட்டு பணத்துக்கும் நம்ம பணத்துக்குமான மதிப்பு இருக்கும். இதுக்காகவே நிறைய கரன்சி கன்வெர்ட்டர்ஸ் இருக்கு... நீங்கள் ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் போது கரன்சி கன்வெர்சனுக்கு எவ்வளவு கட்டணமாகுதுங்கிறதையும் ஒப்பீட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் அனைத்துமே கொஞ்சம் கூடுதலாகவேத்தான் கன்வெர்சன் ரேட் பிக்ஸ் செய்துள்ளன என்பதை கவனத்தில் வைக்கனும்...

டெலிவரி டைம்

உலகத்தோட எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் ஆர்டர் செய்துவிடலாம்..ஆனால் அவங்க டெலிவரி கொடுக்க எவ்வளவு டைம் எடுத்துக்குவாங்கன்னு அவசியம் தெரிஞ்சக்கனும்..உங்ககிட்ட ஆப்சன் கேட்டால் ரொம்ப கவனமாக டெலிவரி டைமை தேர்வு செய்யுங்கள்... அதுல உங்களுக்கு சந்தேகம்னா அந்த இணையதளத்தில் இருக்கிற நபர்களுக்கு மெயில் அனுப்பி விசாரிச்சக்கனும்.. கொஞ்சம் பெரிய அளவுக்கு பர்சேஸ் பண்றதுன்னு முடிவு செஞ்சிட்டா முதலிலேயே மெயில் போட்டு விசாரிச்சுட்டு அவங்ககிட்ட இருந்து பதில் வந்ததுக்கு பிறகு ஆர்டர் கொடுக்கலாம்.. இல்லையா அடுத்த வெப்சைட்டைப் பார்க்கலாம்..

மோசடிகள்

பொதுவாகவே ஆன்லைனில் நடக்கிற கிரெடிட் கார்டு மோசடிதான் ஷாப்பிங் அனுபவத்திலும் ஏற்பட்லாஅம். அதனால் நீங்கள் பயன்படுத்துகிற வெப்சைட் நம்பகத்தன்மைக்குரியதா? என பார்த்து ஆர்டர் செய்யனும்..httpக்கு பதிலாக வெப்சைட்டில் httpsன்னு இருக்கான்னு செக் பண்ணுங்க... வெப்சைட்டில் கீழ சின்னதா ஒரு லாக் குறியீடு இருக்கான்னு பாருங்க...

நீங்க ஆன்லைனில் கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போதும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருட்டு வளையத்துக்குள்ள சிக்குறீங்க என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால உங்க கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை ஒருபோதும் இ மெயிலில் கொடுக்காதீங்க... அதே மாதிரி தனிநபர்கள் கிட்டவும் கொடுக்காதீங்க... கிரெடிட் கார்டு மோசடியில் பலரகம் இருப்பதால் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க..

இதைவிட இன்னும் பெரிய பிராடும் இருக்கு.. வெப்சைட்டில் போட்டிருக்கும் பொருட்கள் கூட போலியாக இருக்கலாம்.. நீங்கள் ஆர்டர் செய்யறேன்னு சொல்லி கிரெடிட் கார்டு தகவல்களைக் கொடுக்க அந்த டுபாக்கூர் ஆட்கள் ஒருபக்கம் கிரெடிட் கார்டு தகவல்களை சுட்டுவிடுவார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது..உங்களுக்கு பொருளும் வராது.. கிரெடிட் கார்டு தகவலை கொடுத்து லட்சங்களை இழக்க வேண்டியதுதான். அதனால ரொம்பவே அதிகம் பயன்படுத்தக்கூடிய மிகவும் நம்பகத்தகுந்த நிறுவனங்களின் இணையதளங்களை மட்டுமே நம்புவதும் ஆர்டர் செய்வதும் அவசியம்.

ரொம்பவும் நம்பகத்தன்மையான இணையத்தளங்களிலும் கூட முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆர்டர் செய்தால் தப்பிப்பீர்கள்.. இல்லையெனில் புலம்பத்தான் செய்ய வேண்டும்

 Thanks to One india.com

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...