Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

Wednesday, December 25, 2013

C.F.L .பல்புகள் உடைந்தால்...!


எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் . * வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் . * கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் . * உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் . முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்
 

இன்றைய உண்மைகள்..



1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலகஅறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் Google plus  நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..




1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார் ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை
மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.

10.காதலுக்கு முதலில் முக்கியம் தனிமனித ஒழுக்கம். காசை தண்ணீராய் செலவழித்து காதலிப்பதை நிறுத்த வேண்டும்.

11.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

12.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

14.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

15.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

# அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.

-ஆதிரா .

நன்றி: நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.

Sunday, December 22, 2013

வருமானத்தின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்



வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்


என்ன நடக்குதுனே தெரியாம, காலைலே தூங்கி எழுந்தோம். அவசர அவசரமா வேலைக்கு கெளம்பினோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம். பிள்ளைகளை வளர்த்தோம். சொத்து சேர்த்தோம்.. நம்ம அனுபவிச்சோமோ இல்லையோ, நம்ம புள்ளைகளுக்கு சொத்து சேர்ப்போம்.  அப்புறம் ஒருநாள் ... டிக்கெட் வாங்கிட்டு கெளம்பியாச்சு... இதேதான்  இன்னைக்கு 100 க்கு 95 பேரு பண்ற விஷயம்.

நம்ம வீடு, நம்ம குழந்தைகள்.. நம்ம சொந்தம் ? (அது கூட அபூர்வம் ) .. இதை தவிர வேற எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை.. சரி இந்த மாதிரி சொத்து சேர்த்து வைச்சா அது நல்ல விதமா உபயோகமாகுமா? இப்போ இருக்கிற பெரிய பெரிய கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைங்க , அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கிறாங்க னு நெனைக்கிறீங்க...

எந்த மாடல் கார் வந்தாலும் வாங்கணும்..  எப்போவுமே குடி போதைலே இருக்கணும்.. எப்போவுமே ஏதாவது பொண்ணுங்க கூட சுத்தணும்.. எங்கேயும் ஒரு அடாவடித் தனம். அதனாலே ஒரு வம்பு... காசு இருக்கிற வரைக்கும் ஒரு கும்பலே கூட இருக்கும். அப்புறம் வாழ்க்கையிலே ஒரு செம அடி... அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். இதே போல தான் உங்க பிள்ளையும் இருக்கணும் னு நெனைக்கிறீங்களா?
இவங்களுக்கு எல்லாம் ஏன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை னு எப்போவாவது தோணுவது உண்டா?

ஆடி அடங்கி , நாடி தளர்ந்து .. கடைசி நாட்கள் வரும்போது படுக்கையிலே படுத்து இருப்போமே அப்போ நம்ம கிட்டே மிஞ்சி இருக்க போறது  ... வெறும் நினைவுகள் மட்டுமே. .. வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக ஆக்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை. நம் வருங்கால சந்ததி வளமான ஒரு வாழ்வு வாழ்வதும் நம்ம கையிலேதான்..


நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்சென்று சொல்லியுள்ளார்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”   (ஒளவையார் )


நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் !

இன்றைய காலகட்டத்தில் அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய் வழிபாடுகளுக்கும், தாசிகளுக்கும், வீண் செலவுகளுக்கும், கொள்ளை கொடுப்பதற்கும், மதுவிற்கும், பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்,
அவனுடைய சாவிற்கும், கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும், உரியனவாகும் !


சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting)  என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய்வழிபாடுகள் என்பதற்கு பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும்,  ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களுக்கு செய்யுங்கள்

வாழ்க  மானுடம்..!



Wednesday, November 27, 2013

மனித வாழ்க்கை




மனிதன் பிறந்தது முதல் சாகும் வரை படும் துன்பம் சொல்லி மாளாது.  1000 துன்பத்திற்க்கு மத்தியில் ஒரே ஒரு சந்தோசம் தான் மனிதனுக்கு கிடைக்கின்றது.


1) பொருளாதார சூழ் நிலையால் துன்பம்

2)  மனைவி, தாய், தந்தையால், மற்றும் பிள்ளைகளால் உண்டாகும் துன்பம்,

3)  வேலை பார்க்கும் இடத்தில் முதலாளி மற்றும், மேலாளர், சக தொழிலாளியால் உண்டாகும் துன்பம்,

4)  எதிர் வீட்டுக்காரர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் உண்டாகும் துன்பம்,

5) சொந்தக்காரர்களால் உண்டாகும் துன்பம்,

6) நண்பர்களால், பழக்கப்பட்ட நபர்களால் உண்டாகும் துன்பம்

7) எதிரிகளால் உண்டாகும் துன்பம் என்று  துன்பப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகாலாம்.


இதற்க்கு தீர்வு தான் என்ன ?


மொத்ததில் ஒவ்வொரு பிரச்சனையயும் நாம் எதிர் கொள்ளும் விதம் தான்.

1) பொருளாதார சூழ் நிலை எதிர் கொள்ள வருமானத்தை பெருக்குவதற்க்கான முயற்சிகளை மேற்க்கொள்ள  வேண்டும்.

2)  மனைவி, தாய், தந்தையால், மற்றும் பிள்ளைகள் என்னதான் சொல்லுகிறார்கள் என்பதனை கேட்டு  அவர்களுக்கு தேவையானவற்றை அன்புடன் பரீசிலனை செய்து அவர்கள் மனம் குளிரும்ப்டி 10க்கு ஒன்றையாவது நிறைவேற்றி துன்பங்களை குறைக்கலாம்.

3)வேலைபார்க்கும் இடத்தில் முதலாளி மற்றும், மேலாளர் கூறும் வேலைகளை உடனுக்குடன் முடித்து குறை கூறவண்ணம் நடத்தல் வேண்டும். சக தொழிலாளியிடம் வீண்வாதமின்றி,  நல் உறவுடன் ப்ணியினை மேற்க்கொள்ளுதல் மூலமாக துன்பங்களை குறைக்கலாம்.

4) விட்டுக் கொடுத்தல் மூலமாகவும்  தேவையின்றி அடுத்தவர் பற்றி பொறனி பேசுவதை தவிர்த்தும் எதிர் வீட்டுக்காரர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் உண்டாகும் துன்பபங்களை குறைக்கலாம். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள்,  இல்லையேல் உபத்திரம் இன்றி  உங்கள் வேலையைச்செய்யுங்கள்.

5) சொந்தக்காரர்களுக்கு  என்னதான் உதவிகள் செய்தாலும் குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அதனை நினைத்து துன்பப்படத் தேவையில்லை.

6) நல்ல பழக்கவழ்க்கமுள்ள நண்பர்கள் சிலர் இருந்தாலும் போதும், தீய சகவாச நண்பர்கள் தேவையில்லை.

7) யாரையும் பகைப்பதன் மூலம் எதிரிகளாகத் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருக்க க்ற்றுக்கொள்ள வேண்டும்.

சுருக்கமாக அன்பால் சாதிக்க முடியாது எதுவும் இலலை! 


முடிந்தவரை  மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்!


உஙகள் கடமைகளைச்செய்யுங்கள்!


விட்டுக்கொடுங்கள்! 


யாரிடமும் வீண்வாதம் வேண்டாம்!


நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்!


உங்களது பிரச்சனைகளை உரியவரிடம் மனம் விட்டு  பேசி நல்லதொரு தீர்வை பெறுங்கள்!


ஒருவரின் குறைகளை மற்றவரிடம் பேசாதிருங்கள்!

Friday, October 25, 2013

எதிர் பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது



எந்த விசயத்திலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. ஏனெனில் நாம் எதிபார்த்த ஒன்றுக்கு மாறாக நடக்கும் போது .அதனை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது .சாதாரணமாக நம் உழைத்ததற்க்கு நாள் கூலியாக நாள் ஓன்றிக்கு ரூபாய் 500 வீதம் 6 நாளுக்கு 3000 கிடைக்கும் என்று எண்ணியிருப்போம். ஆனால் முதலாளியானவர் எதாவது ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி உங்களூக்கு ரூபாய் 400 வீதம் 6 நாளுக்கு 2400 தரமுடியும் என்பார். நமக்கு ஏமாற்றம் ஏற்படும். இப்படி பல வகைகளில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றம் அடைந்து கொண்டுதான் இருக்கிறோம்.

மேலும் நமது வயதான காலத்தில், நமது பிள்ளைகள் நன்மை காப்பாற்றுவர் என நினைத்தவருக்கு ஏமாற்றம் ஏற்படும் போது தாங்கிக் கொள்ள முடியாது.

 தன் தாய் தந்தையரின் சொத்துக்கள் பின் நாளில் தமக்கு கிடைக்கும் என்று எதிபார்த்த ஒருவருக்கு ஏதும் கிடைக்கவில்லை எனில் உருக்குலைந்து போய்விடுவர்.

 நாம் நினைத்தது தப்பாகி விட்டது எனவேதான் அதிக எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருகின்றது. 

மனிதர்களாகிய நாம் எல்லோரும் கற்பனையாக எப்பொழுதும் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கின்றோம் .

 அப்படி வசதியாக வாழ் வேண்டும்.  இந்த மாளிகையில் வசிக்க வேண்டும்  , கார் வாங்க வேண்டும் நில புலங்கள் வாங்க வேண்டும், அதிக வைப்பு நிதிகள்  சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் உழைத்துக் கொண்டு இருக்கின்றோம், ஆனால் நடந்த பாடுதான் இல்லை.  ஏன் ? 

 உழைப்புக்கேற்ற ஊதியம் தான் கிடைக்கவில்லை.  

 மனிதர்களுக்கு  அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தருகிறது.  எனவே அதிகமாக எதனையும் எதிர்பார்க்காதீர்கள்!

நமக்கு எப்பொழுதுமே ஆண்டவனின் அருளில், நாம் செய்த செயல் பலனால் கிடைப்பது கிடைக்கட்டும் என்று நாம் செயல் பட்டால்,மனிதர்களாகிய நமக்கு ஏமாற்றம் ஏற்படாது.

நாம் எதிலும் எதிர்பார்ப்போடு இல்லாமல் இருந்தால் நமக்கு ஏமாற்றமே இருக்காது .

 நாம் ஏன் வீணாக அதிக கற்பனையில் மிதக்க வேண்டும்? பிறகு வருத்த்ப்படவேண்டும். எது நடக்கிறதோ, அது நடக்கட்டும் என்று இருந்துவிட்டால் நடக்க வேண்டிய காரியங்கள் ந்ல்லதாகவே நடக்கும். 

நமக்கும் ஏமாற்றம் ஏற்படாது .


Tuesday, September 10, 2013

உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகமல் உயிர்ப்புடன் இருக்க




நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பீர்கள். அடிக் கடி வங்கிக்குப் போய்வர முடியாத ஏதோ சில காரணங்களால் கணக்கைச் செயல்படுத்தாமல் விட்டிருப்பீர்கள்.அப்படி நேர்ந்தால் உங்கள் வங்கி  கணக்கு காலாவதியாகி விடுமா ?

நீண்ட காலம் கணக்கைச் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் வங்கிக்குப் பணம் எடுத்துச் செல் கிறீர்கள். வங்கியின் கணினி உங் களைப் பணம் எடுக்க அனுமதிக் காது. அப்போது வங்கி அலுவலர் உங்களைக் காரணம் கேட்பார் எதனால் கணக்கை இயக்காமல் இருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் சொல்லக் கூடிய காரணம் ஏற்பு டையதாக இருக்குமானால் கணக்கைத் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்வார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு இயக்கப் படாமல் இருந்த கணக்கு என்றால் ஒரு சிறு தொகையைக் கட்டண மாகக் கழிப்பார்கள். அதன்பின் கணக்கை இயக்க கணினி அனு மதிக்கும். சில கணக்குகளில் நீங்கள் பணத்தை கட்டிக் கொண்டு மட்டுமே வந்திருப்பீர்கள். அதிலிருந்து எடுக்க வேண்டாம். பெரி தாக ஒரு தொகை சேர்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பீர்கள்.

பணத்தைக் கட்டி வைக்கும் நடடிக்கைகளை மட்டுமே மேற் கொள்வதைக் கூடத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கணக்கி லிருந்து பணம் எடுக்கப்படவே இல்லை என்பதையும் வங்கியின் கணினி கணித்துக் கொண்டே வரும். வெகு காலம் கழித்து நீங்கள் பணத்தை எடுக்கப் போகும் போது தாமதம் நேரும். கேள்விகளுக்குப் பதில் சொல்ல நேரிடும். ஓய்வு ஊழியர்கள் சிலர் இறந்து போன பின்பும் கூட அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்க நேர்வது உண்டு.

வாடிக்கையாளர் உயிரோடு இல்லை போல் இருக்கிறது என்று கணினி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கணக்கை நிறுத்தி வைக்க முயலும். ஆகவே எந்தக் கணக்காக இருந்தாலும் அவ்வப் போது பணத்தைப் போடவும் எடுக்கம் செய்யுங்கள்.
http://i1.wp.com/www.cmsvoteup.com/images/power_by_2x2.gif?w=695

60 சதவீதம் தரமற்ற தண்ணீர்




தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 


கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.


சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.


வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:


தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.



உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
 
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.


ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.


இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.


நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.


நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.


தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

http://i1.wp.com/www.cmsvoteup.com/images/power_by_2x2.gif?w=695


சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...