Total Pageviews

Monday, July 22, 2013

தொப்பையைக் குறைக்க சரியான வழி




தொப்பையைக் குறைப்பது அவ்வளவு கடினமான விஷயமே இல்லை. பணத்தைச் செலவு செய்து தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று யாராவது ஆலோசனை சொன்னால் உஷாராக இருங்க; அது ஏமாற்று வேலையாக இருக்கும்.

தொப்பை வளர வளர சர்க்கரை நோய், பி.பி., முதுகுவலி, மூட்டுவலி, மனஅழுத்தம் என்று நிறைய பிரச்சினைகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே தொப்பையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது.

முக்கியமான விஷயம், தொப்பையானது ஒரே நாளில் வளர்ந்து விடுவது கிடையாது. ஆனால் தொப்பையைக் குறைப்பது மட்டும் ஒரு சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று பலர் பேராசைப்படுகிறார்கள்.

15 நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம் என்று வரும் விளம்பரங்களில் போய் விழுந்து, உடலைக் கெடுக்து கொள்கிறார்கள். அது தவறு, முடியாத காரியமும் கூட. அது சாத்தியம் என்றால் நம் ஊரில் யாருக்கும் தொப்பையே இருக்காது.

தொப்பையைக்குறைக்க காலை உணவைத் தவிர்க்கிறார்களே, அது சரியா?
தொப்பையைக் குறைக்க சரியான வழி காலை உணவைத் தவிர்ப்பது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட தவறான செயல் எதுவுமில்லை. காலை உணவைத் தவிர்த்தால் உடல்நலம் கெடுவதோடு, தொப்பை முன்பைவிட அதிகமாகிவிடும்.

இரவு 8 மணிக்கு சாப்பிடும் ஒருவர் மறுநாள் காலை உணவைத் தவிர்த்து மதியம் 1 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் ஏறத்தாழ 17 மணி நேரம்                      வயிற்றைக் காயப்போட்டதாகிவிடும். காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை  உடலுக்கு வழங்கக் கூடியது.

அதைத்தவிர்த்தால் மதியத்திற்குப் பிறகு பசியால் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். அது தானாக வயிற்றைப் பெருக்க வைக்கும். அதனால் காலையில் மறக்காமல் சாப்பிட வேண்டும், ஆனால் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது.

உணவுப் பழக்க வழக்கங்களால் தொப்பையைக் குறைக்க முடியுமா?
முடியும், அதற்கு பெரிய அளவில் டயட் எல்லாம் இருக்கக் தேவையில்லை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளரில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் தொப்பை குறையும்.

இஞ்சி, மிளகு அடிக்கடி மென்று வர வேண்டும். காலையில் எழுந்ததும் தினமும் கொஞ்சம் கறிவேப் பிலையை பச்சையாக மென்று விழுங்க வேண்டும். தொடர்ந்து 4 மாதங்கள் இப்படி செய்தால் தொப்பை குறையும்.

டயட்டில் இருந்துதான் ஆவேன் என்று அடம் பிடிப்பவர்கள், அந்த சமயத்தில் பச்சைக் காய்கறிகள், தக்காளி, கேரட் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும் அது நல்ல பலனைத்தரும் எதையும் சாப்பிடாமல் சாப்பாட்டின் அளவைக்குறைப்பது, உடலைக் கெடுப்ப தற்கு சமம்.

தொப்பையைக்குறைக்க சிறந்த வழிதான் என்ன?
ஒரே வழிதான் அது உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றால் 30 நிமிடங்கள், நடைப்பயிற்சி என்றால் காலையில் 45 நிமிடங்கள், 3 அல்லது 4 மாதங்கள் தொடர்ந்து நடந்து பாருங்கள். பிறகு உங்கள் இடுப்பின் அளவை அளந்து பாருங்கள் தானாக இடுப்பளவு இறைந்திருக்கும்.

தொப்பையைக் குறைக்க முயல்பவர்களுக்கு சில டிப்ஸ்
1) உடனே தொப்பையைக் குறைக்க நினைக் காதீர்கள். தொப்பை உங்களுக்கு உடனே வந்தது அல்ல. அது வர எவ்வளவு காலம் பிடித்ததோ, அவ்வளவு காலத்தை தொப்பை வெளியேறவும் தாருங்கள்.

2) சாப்பிடாமல் இருக்கக்கூடாது. பசிக்கும் போது மட்டும் அளவோடு சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரம் அவசர மாக சாப்பிடக்கூடாது, மென்று நிதானமாக சாப்பிட வேண்டும்.

3) உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சாப்பிடத் தோன்றினால், பழங்கள், காய்கறிகள் வைத்து சாலட் மாதிரி செய்து, பசிக்கும்போது எல்லாம் சாப்பிடலாம், வாரத்திற்கு ஒரு நாள்அய்ஸ்க்ரீம், பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதால் தப்பில்லை. ஆனால் வாரத்திற்கு ஒரு தடவை தான். அதையே தொடர்ந்து விடாதீர்கள்.

4) தண்ணீர் தான் உங்களின் தொப்பையைக் குறைக்க பெரிய அளவில் உதவக்கூடியது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

5) உங்கள் பிள்ளைகளுடன் அல்லது நண்பர்களுடன் வாரம் ஒரு நாள் ஏதாவது விளையாடுங்கள். வாலிபால், ஃபுட்பால், பூப்பந்து, கபடி என்று ஆடுங்கள். பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி. உங்கள் தொப்பைக்கும் டாடா காட்டலாம்.

6) சிலருக்கு அலுவலகத்தில், குடும்பத்தில், உறவினர்களிடத்தில், சுற்றுச் சூழலில் என்று எந்த வகையிலாவது மன அழுத்தம் இருக்கும். அதைப்போக்க ஒரு அரை மணிநேரம் யோகா பண்ணுங்கள். முடியாவிட்டால் நல்ல நூல்களை தினமும் ஒரு மணி நேரம் ஆழ்ந்து படியுங்கள்.

7) சிகரெட், மது வேண்டவே வேண்டாம். சிலர் சாப்பிட்டதும் ஜீரணிக்கும் என்று ஒரே ஒரு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருப்பீர். அது தான் ஆபத்து, தொப்பைக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும்.

8) மாத்திரைகளால் உடல் எடையையோ, தொப்பையையோ குறைக்க முயற்சிக்கக் கூடாது அது பிற்காலத்தில் பெரிய வம்பில் கொண்டுபோய் விடும் யோசியுங்கள்.

9) குடும்பத்துடன் டி.வி.பார்க்கும் நேரத்தில் குடும்பத்தாருடன் வீட்டுக்குள்ளேயே ஏதாவது விளையாட்டு விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திப் பாருங்கள்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...