Total Pageviews

Monday, July 22, 2013

நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம்




பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் காணப்படும் சர்க் கரையின் அளவைப் பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின்  அளவைக் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள உணவு கட்டுபாடு மிகவும் அவசி யமாக உள்ளது. ஆகவே உணவுக்கட்டு பாட்டில் எச்சரிக்கையுடன்  செயல்பட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நீரிழிவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச் சத்துகள், கொழுப்பு சத்துகள், அதிக கலோரிகள் இல்லாத உணவு வகைகளை தேர்வு செய்து  உட்கொள்லாம்.
செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள் கொண்ட உணவுகள்
செறிவூட்டப்பட்ட கொழுப்புக்களை கொண்ட உணவுகளான இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சமைத்த பன்றி இறைச்சி, தீயில்வாட்டிய  இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் செறிவூட்டப் பட்ட உணவை தவிர்க்கவும். குறிப்பாக  பதப்படுத்தபட்ட உணவுகளில் வெண் ணெய் உணவுகளை சேர்க்ககூடாது..
அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தின் முதல் எதிரி. நீரிழிவு நோ யாளிகள் கொழுப்பு உணவு வகை களை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படும்.  ஆதலால் கண்டிப்பாக கொழுப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளான முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் தோல்  போன்ற வற்றில் கொழுப்பு சத்து இருப்பதால் இந்த வகை உணவுகளைத் தவிர்க்கலாம்.
ஃபைபர் நிறைந்த உணவுகள்
நார்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமானத்திற்கு நல்லது. இவை ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும். நீரிழிவு  நோயாளி களுக்கு ஃபைபர் நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நார்சத்துகளை கொண்ட ராஸ்பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, உலர்ந்த  திராட்சைகள், பார்லி, தவிடு, பாப்கார்ன், பழுப்பு அரிசி, பயறு வகைகள், ஆர்டிசோக், மற்றும் பட்டாணி போன்ற உணவுகளில் நார்சத்து அதிகம்  கொண்டுள்ளதால் இவை நீரிழிவுக்கு சிறந்தது.
நல்ல கார்போஹைட்ரேட்
சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தஅளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.  சிறந்த கார்போஹைட்ரேட்  கொண்ட உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளான முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், தவிடு,  மற்றும் பருப்பு வகைகள் உள்ளன.
நல்ல கொழுப்புகள் கொண்ட உணவுகள்
நல்ல கொழுப்புகளை கொண்ட உணவு களான பாதாம், ஆலிவ், வெண்ணெய், மற்றும் அக்ரூட் பருப்புகள் சிறந்தவை. சால்மன் மீன், போத்தா மீன்,  கானாங் கெளுத்தி போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...