Total Pageviews

Thursday, February 25, 2016

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..



 கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர்
எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில்,   தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய
பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய  சண்டை  என்றாலும்  உங்கள்
இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின்  குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம்
கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.

திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்
தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்
சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய்   இருக்கும்  வீடு  சொர்க்கம்           ஆவதும்,
சொர்க்கமாய்  இருந்த  வீடு நரகம் ஆவதும் கணவன்
மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.



No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...