Total Pageviews

Sunday, April 24, 2016

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !
.


மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.


சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும்.
அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட வைப்பதை தவிர்க்கவும்.
.
#உருளைக்கிழங்குகள்
உருளைக்கிழங்குகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மையை அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது.
அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் அது நச்சுத்தன்மையை அடைந்துவிடும்.
.
#கோழிக்கறி
தற்போதைய காலத்தில் மீண்டும் சுட வைக்கப்படும் உணவில் முக்கிய பங்கை கோழிக்கறி பெறுகிறது.
ஆனால் அதனை மீண்டும் சுட வைத்து, உண்ணுவது மிக ஆபத்தானதாகும். அதற்கு காரணம் இந்த உணவில் உள்ள அளவுக்கு அதிகமான புரதம். இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.
.
#காளான்கள்
காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.
.
#பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.
.
#கீரை
கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
.
#முட்டைகள்
அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். எனவே மீண்டும் சுட வைத்த அவித்த முட்டைகள் அல்லது பொரித்த முட்டைகளை விட்டு விலகியே இருங்கள். இவை உங்கள் வயிற்றை பதம் பார்த்து விடும்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...